குர்ஆன்
கூறும் சிலந்தியின் வீடு ஓர் அறிவியல் அற்புதம்..
அய்னுஷ்-ஷம்ஸு பல்கலைக்கழகத்தின் விவசாயக்கல்லூரியில் பணியாற்றும்
பூச்சிகள் தாவரவியல் துறைப் பேராசிரியர் டாக்டர் அல்யம்மீ பின்வரும் தகவலைக் கூறுகிறார்:-
குர்ஆனில் அல்லாஹ் சிலந்தியை உதாரணமாகக் கூறுகிறான்.
مَثَلُ ٱلَّذِينَ ٱتَّخَذُواْ
مِن دُونِ ٱللَّهِ أَوْلِيَآءَ كَمَثَلِ ٱلْعَنكَبُوتِ ٱتَّخَذَتْ بَيْتاً وَإِنَّ
أَوْهَنَ ٱلْبُيُوتِ لَبَيْتُ ٱلْعَنكَبُوتِ لَوْ كَانُواْ يَعْلَمُونَ
அல்லாஹ் அல்லாதவற்றை(த் தங்களுக்குப்) பாதுகாவலர்களாக எடுத்துக்
கொள்பவர்களுக்கு உதாரணம் சிலந்திப் பூச்சியின் உதாரணம் போன்றது; அது (தனக்காக) ஒரு வீட்டைக் கட்டியது; ஆனால் நிச்சயமாக வீடுகளிலெல்லாம் மிகவும் பலஹீனமானது சிலந்திப்பூச்சியின்
வீடேயாகும் – இதை அவர்கள் அறிந்து கொண்டிருப்பார்களாயின்
(தாங்கள் இணையாக எடுத்துக் கொண்டவற்றின் பலஹீனத்தை அறிவார்கள்).
இந்த வசனத்தில் இத்தகதத் பைத்தன் (اتخذت بيتا) அது வீட்டைக் கட்டியது’ என்று இறைவன் ஆண்பாலில் துவங்கி ‘கட்டியது’ என்ற வினைச்சொல்லை
பெண்பாலில் கூறியுள்ளான். இலக்கண மரபுப்படி ஆண்பாலுக்குப்பிறகு பயனிலையை ஆண்பாலாகத்தான்; கூறவேண்டும். ஆனால் இங்கே பெண்பாலாகக் கூறியதைப் பார்க்கும்
போது இலக்கணப்பிழையாகத் தோன்றலாம்.
இது மனிதன் இயற்றிய சொல்லாக இருந்தால் இலக்கணத்தில் தவறு நிகழ்ந்ததாக
நினைத்து விட்டுவிடலாம். ஆனால் உலகின் அனைத்து உயிரினங்களையும் படைத்த இறைவன் அன்கபூத்தைப்
பற்றிக் கூறும்போது அவனது சொல்லில் இலக்கணத்தவறு நிகழமுடியாது. அவ்வாறு அவன் கூறியிருந்தால்
ஏற்கத்தக்க காரணங்கள் நிச்சயம் இருக்கவேண்டும் என ஆய்வு தொடர்ந்தது.
அவை என்ன என்பதை விரிவாகப் பார்ப்போம்.
1. அன்கபூத் என்ற சொல் இலக்கண மேதைகளால் ஆண்பாலிலும்
பெண்பாலிலும் பயன்படுத்தப்பட்டு வருகிறது. இதன் ஆண்பால் அன்கப் என்பதாகும். அன்கபூத்
என்பது ஆண், பெண் இனத்தையே குறிக்கும் பொதுவான சொல்லாகும்.
ஆகவே இதில் இலக்கணத் தவறு நிகழவில்லை.
2. அன்கபூத்: ஆண் பெண் சிலந்தியில் ஆண் சிலந்தி
வலை பின்னாது. பெண் சிலந்தி மட்டும் தான் அதன் வலையைப் பின்னமுடியும்; என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்து கூறியுள்ளனர். காரணம் அதன்
உடல் அவ்வாறு படைக்கப்பட்டுள்ளது.அதன் அடிவயிற்றில் பசைபோன்ற திரவம் வெளியாகிறது. மாததந்திர
ருது போன்ற ஒரு செயல் அதில் நிகழ்கிறது.
3. பெண்சிலந்தி பருவ வயதை அடையும் போது தனது
உறவுக்காக இவ்வாறு வீட்டை எழுப்புகிறது. ஆண் சிலந்தி வலிமை பெற்றிருந்தும்; அதனால் வீடு கட்ட முடியாது.
4. பெண் சிலந்தியின் வயிற்றில் உற்பத்தியாகும்
நூலில் பசை இருக்கும். ஏதிரிப் பூச்சிகள் அதன் மீது வந்தமர்ந்தால்; அதில் அவை ஒட்டிக் கொள்ளும். அவை அதற்கு உணவாக ஆகிவிடுகிறது.
எனவே வலைபின்னும் இச்செயல் பெண் இனத்தில் தான் நிகழ முடியும்
என்பதால் தான் அல்லாஹ் பெண்பாலில் கூறியுள்ளான்.
1400 ஆண்டுகளுக்கு முன்
பெண் இனம் தான் வலை பின்னும் என்பது எழுதப்படிக்கத் தெரியாத முஹம்மது நபிக்கு எவ்வாறு
தெரிந்திருக்க முடியும்? ஆகவே சிலந்தியைப்
படைத்த இறைவன் தான் இந்த பேருண்மையை உலகுக்குக் கூற முடியும்.ஆகவே இறைவனின் வேதமான
அல்-குர்ஆன் அல்லாஹ்வின் அருள்மறை என்பது இ;தன் மூலம்
நிரூபணமாகிறது.
இத்தா ஓர் ஆய்வு..
யூத விஞ்ஞானி ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தை ஏற்றார்
கருவியல் ஆராய்ச்சியாளரான ராபர்ட் கில்ஹாம் ஒரு யூதர். இவர்
அண்மையில் இஸ்லாத்தைத் தழுவினார். இவரது மனமாற்றத்திற்கு வழி செய்தது திருக்குர்ஆனின்
ஒரு வசனம்.
وَالْمُطَلَّقَاتُ يَتَرَبَّصْنَ بِأَنْفُسِهِنَّ ثَلَاثَةَ قُرُوءٍ وَلَا يَحِلُّ لَهُنَّ أَنْ يَكْتُمْنَ مَا خَلَقَ اللَّهُ فِي أَرْحَامِهِنَّ إِنْ كُنَّ يُؤْمِنَّ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ وَبُعُولَتُهُنَّ أَحَقُّ بِرَدِّهِنَّ فِي ذَلِكَ إِنْ أَرَادُوا إِصْلَاحًا وَلَهُنَّ مِثْلُ الَّذِي عَلَيْهِنَّ بِالْمَعْرُوفِ وَلِلرِّجَالِ عَلَيْهِنَّ دَرَجَةٌ وَاللَّهُ عَزِيزٌ حَكِيمٌ
‘மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை
(மறுமணம் செய்யாமல்) காத்திருக்க வேண்டும்” (2:228) என்கிறது அத்திருவசனம்.
மணவிலக்கு செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதம் காத்திருந்த பின்பே
-அதாவது மூன்று மாதவிடாய் பருவங்களில் ‘இத்தா’ இருந்த பின்பே மறுமணம் செய்ய வேண்டும்
‘‘விவாகரத்துச் செய்யப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய் (முடியும்)வரை
(மறுமணம் செய்யாமல்) தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும்’’ (2:228) என்கிறது ஒரு வசனம். இந்த வசனத்தைப் படித்தபோதுதான் ராபர்ட்
மனம் மாறினார்.
ராபர்ட் நீண்ட காலமாக ஓர் ஆய்வை மேற்-கொண்டிருந்தார். கைவிரல்
ரேகைப் பதிவு (Finger Printing) ஒரு மனிதனை அடையாளம்
காட்டுவதைப் போன்றே, டி.என்.ஏ.
ரேகைப் பதிவு தம்பதியரை அடையாளம் காட்டிவிடும். ‘ஒரு பெண்ணில்
பதிவாகியுள்ள ஆணின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு மூன்று மாதங்களுக்குப் பிறகே அழியும்” என்பது ராபர்ட்டின் ஆராய்ச்சி முடிவு. அதையே குர்ஆனின் இவ்வசனம்
கூறுகிறது என்பதைக் கண்ட யூத விஞ்ஞானி ஆடிப்போனார்;
குர்ஆனை ஏற்றார்.
இது தொடர்பாக, எகிப்தைச்
சேர்ந்த டாக்டர் அப்துல் பாசித் முஹம்மது சையித் கூறுகிறார்:
அறிவியல் சான்றுகளை அடிப்படையாகக் கொண்டே ராபர்ட் கில்ஹாம் இஸ்லாத்தில்
இணைந்துள்ளார்.
தம்பதியர் உடலுறவு கொண்டால்,
ஆண் தனது பாலின ரேகையைப் பெண்ணிடம் விட்டுச்செல்கிறான். அந்த ரேகை மூன்று மாதங்களுக்குப்
பிறகே முற்றாக அழியும் என்று ராபர்ட் கண்டுபிடித்தார்.அதற்கேற்ப, அமெரிக்காவில் ஆப்பிரிக்க முஸ்லிம்கள் அதிகமாக வாழும் ஒரு பகுதியில்
கள ஆய்வில் இறங்கினார் அவர் அப்பகுதியில் வாழும் முஸ்லிம் பெண்களிடம் அவர்களின் கணவர்களது
ரேகை மட்டுமே பதிவாகியிருந்தது. அதே நேரத்தில்,
அமெரிக்கப் பெண்கள் வாழும் ஒரு தெருவில் ஆய்வை மேற்கொண்டபோது, அப்பெண்களிடம் பல்வேறு ரேகைகள் காணப்பட்டன. மூன்று வெவ்வேறு
ரேகைகள் அவர்களில் பதிவாகியிருந்தன.
ராபர்ட் கில்ஹாம் அதிரடியாக ஒரு காரியம் செய்தார். அவர் தம்
மனைவியை மருத்துவப் பரிசோதனைக்கு ஈடுபடுத்தினார். அவளிடம் மூன்று ரேகைப் பதிவுகள் இருப்பதைக்
கண்டு அதிர்ச்சியடைந்தார். அத்துடன் தம்முடைய மூன்று மகன்களில் ஒருவன் மட்டுமே தமக்குப்
பிறந்தவன் என்பதையும் கண்டறிந்தார்.
இதிலிருந்து, மூன்று மாத
‘இத்தா’ ஏன் கடமையாக்கப்பட்டது
என்பதற்கான காரண விளக்கமும் கிடைக்கிறது. முந்தைய கணவனின் டி.என்.ஏ. ரேகைப் பதிவு முற்றாக
அழிய மூன்று மாதங்கள் பிடிக்கும். அதன்பின் அவள் மறுமணம் செய்துகொண்டால், டி.என்.ஏ. பரிசோதனையில் குழப்பம் இராது. இல்லையேல், மறுமணம் செய்தபின் பிறக்கும் குழந்தையின் டி.என்.ஏ.வும் முந்தைய
கணவனின் டி.என்.ஏ.வும் ஒத்துப்போக இடமுண்டு. குழந்தை யாருடையது என்ற குழப்பம் வெடிக்கும்.
தோலில் அமைந்திருக்கும் வலி உள்வாங்கிகள் (Pain – Receptors)
உடலில் ஏற்படும் வலியை உணரும் தன்மை மனித மூளையில் உள்ளதாக ஆரம்ப காலத்தில் எண்ணிக் கொண்டிருந்தனர். ஆனால் சமீப கால கண்டுபிடிப்புகள் வலிஉள்வாங்கிகள் (Pain – Receptors) தோலில் இருப்பதாக கூறுகின்றன.
வலிஉள்வாங்கிள் (Pain – Receptors) தோலில் அமைந்திருப்பதால் தான் ஒரு மனிதன் வலியை உணர்கின்றான் என்பதை நிரூபித்துள்ளன. இந்த வலி உள்வாங்கிகள் இல்லையெனில் உடலில் ஏற்படும் வலியை உணர்ந்திட இயலாது.
தீக்காயங்களால் துன்புறும் ஒரு நோயாளியை பரிசோதனை செய்யும் மருத்துவர், தீக்காயத்தின் அளவை கண்டறிய ஒரு குண்டூசியால் குத்திப் பார்க்கின்றார். நோயாளி வலியை உணர்ந்தால் மருத்துவர் மகிழ்ச்சி அடைவார். இதற்கு காரணம், தீக்காயங்கள் மேலோட்டமானவை தான் என்பதை சுட்டிக் காட்டுவதோடு, தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் பழுதுறாமல் நல்ல நிலையில் உள்ளன என்பதையும் எடுத்துக் காட்டுகிறது. இதற்கு மாறாக, நோயாளி வலியை உணரவில்லை என்றால், தீக்காயம் ஆழமாக ஏற்பட்டுள்ளது என்பதையும் வலி உள்வாங்கிகள் முற்றிலுமாக பாதிக்கப்பட்டுள்ளது என்பதையும் சுட்டிக் காட்டுகிறது.
பின்வரும் திருக்குர்ஆன் வசனம் மனிதனின் தோலில் வலி உள்வாங்கிகள் அமைக்கப்பட்டிருப்பதை சுட்டிகாட்டுகின்றது.
إِنَّ الَّذِينَ كَفَرُوا بِآَيَاتِنَا سَوْفَ نُصْلِيهِمْ نَارًا كُلَّمَا نَضِجَتْ جُلُودُهُمْ بَدَّلْنَاهُمْ جُلُودًا
غَيْرَهَا لِيَذُوقُوا الْعَذَابَ إِنَّ اللَّهَ كَانَ عَزِيزًا حَكِيمًا
‘யார் நம் வேதவசனங்களை நிராகரிக்கிறார்களோ, அவர்களை நாம் நிச்சயமாக நரகத்தில் புகுத்தி விடுவோம். அவர்கள் தோல்கள் கருகிவிடும் போதெல்லாம் அவையல்லாத (வேறு) தோல்களை அவர்கள் வேதனையை (முழுமையாக) அனுபவிப்பதற்கென அவர்களுக்கு நாம் மாற்றிக் கொண்டே இருப்போம். நிச்சயமாக, அல்லாஹ் மிகைத்தவனாகவும் ஞானமுள்ளவனாகவும் இருக்கின்றான்’.
(சூரா அன்னிஸா : 56)
தாய்லாந்தில் உள்ள சியாங்மாய் பல்கலைக்கழகத்தில் (Chieng Main University) உடற்கூறு துறையின் (Dept. of Anatomy) தலைவராக இருக்கும் பேராசிரியர் தகாடட் தெஜாஸன், தோலில் உள்ள வலி உள்வாங்கிகள் குறித்து நீண்ட காலம் ஆய்வு மேற்கொண்டார்.
1400 ஆண்டுகளுக்கு முன்பே இந்த அறிவியல் பேருண்மையை திருக்குர்ஆனில் பதிவு செய்யப்பட்டிருப்பதைக் கண்ட பேராசிரியர் தெஜாஸன் பெரும் வியப்படைந்தார். இந்த இறைவசனம் அவர் உள்ளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியது.
சவூதியின் தலைநகர் ரியாத்தில் திருக்குர்ஆன் மற்றும் சுன்னாஹ்வின் அறிவியல் அத்தாட்சிகள் (Scientific Signs of Quran and Sunnah) எனும் தலைப்பில் நடைபெற்ற எட்டாவது சவூதி மருத்துவ மாநாட்டில் கலந்து கொண்ட பேராசிரியர் தெஜாஸன் இஸ்லாத்தின் ஏகத்துவ கோட்பாட்டை ஏற்றுக் கொண்டு அனைவருக்கும் முன் பகிரங்கமாக முழங்கினார்.
‘வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறு யாருமில்லை. முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் திருத்தூதராவார்கள்’.என்று கூறி முஸ்லிமானார்.

கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக