வியாழன், 28 ஆகஸ்ட், 2014

அஞ்சுவது அல்லாஹ்வுக்கு மட்டும்




பயம் என்ற வார்த்தையை உலகத்தில் சொல்லாதவர்கள் யாரும் இருக்கமுடியாது அந்தளவிற்கு பயம் யாரையும் விட்டு வைக்க வில்லை. ஆட்களை பொருத்து மாறுபடும்.

ஒரு சிலருக்கு மரண பயம்..அடுத்தவருக்கு பதவி பயம். மற்றவருக்கு செல்வ பயம்   நல்லோர்களுக்கு அல்லாஹ்வின் பயம் . இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். ஆக பயம் இல்லாதவர்கள் அல்லாஹ்வைத்தவிர யாரும் இல்லை,

நாயகமும் பயந்து இருக்கிறார்கள்.. அல்லாஹ்வின் பயம்.

عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ أَبُو بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ
يَا رَسُولَ اللَّهِ قَدْ شِبْتَ قَالَ شَيَّبَتْنِي هُودٌ وَالْوَاقِعَةُ وَالْمُرْسَلَاتُ وَعَمَّ يَتَسَاءَلُونَ وَإِذَا الشَّمْسُ كُوِّرَتْ

ஹஜ்ரத் அபூபக்கர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் யாரஸூலல்லாஹ் தங்களிடம் முதுமையின் அறிகுறி தென்படுகிறதே என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஹூத்.வாகிஆ.முர்ஸலாத். அம்மயதஸாஅலூன். இதஷ் ஷம்ஸூ குவ்விரத். ஆகிய சூராக்கள் என்னை நரைக்கச் செய்துவிட்டன என்று பதில் அளித்தார்கள்.

நூல். திர்மிதி. 3219

நபி (ஸல்) அவர்களுக்கு பேரர்கள் மீது அச்சம். (கருணை)

وقال الإمام أحمد: حدثنا زيد بن الحباب، حدثني حُسَين بن واقد، حدثني عبد الله بن بُرَيدة، سمعت أبي (5) بريدة يقول: كان رسول الله صلى الله عليه وسلم يخطب، فجاء الحسن والحسين، رضي الله عنهما، عليهما قميصان أحمران يمشيان ويعثران، فنزل رسول الله صلى الله عليه وسلم من المنبر فحملهما فوضعهما بين يديه، ثم قال: "صدق الله ورسوله، إنما أموالكم وأولادكم فتنة، نظرت إلى 
هذين الصبيين يمشيان ويعثران فلم أصبر حتى قطعت حديثي ورفعتهما".

நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை வெள்ளிக்கிழமை அன்று மிம்பர் படிமீது நின்று பிரசங்கம் செய்து கொண்டிருக்கும் போது பேரர்களான ஹஸன். ஹூஸைன், (ரலி) இருவரும் சிகப்பு நிற நீண்ட சட்டையை அணிந்து கொண்டு தட்டு தடுமாறி வருவதை பார்த்த நாயகம் (ஸல்) அவர்கள் பேரக்குழந்தைகள் தடுமாறி கீழே விழுந்து விடுவார்களோ என்று பயந்து நாயகம் மிம்பர் படியை விட்டும் கீழே இறங்கி இரண்டு பேரக்குழந்தைகளையும் கைகளில் தூக்கிகொண்டு மீண்டும் பிரசங்கத்தை தொடங்கும் போது கூறினார்கள்.  உங்களுடைய பொருளும். குழந்தைகளும் உங்களுக்கு சோதனை என்று அல்லாஹ் கூறினானே அது உண்மை அதில் எந்த சந்தேகமும் இல்லை. தட்டு தடுமாறி வந்த என்னுடைய பேரக்குழந்தைகளை பார்த்து பொருமையில்லாமல் பிரசங்கத்தை துண்டித்து என்னையே இறங்க வைத்துவிட்டதே என்று கூறினார்கள்.

நூல். தப்ஸீர் இப்னு கஸீர்.

ஷைத்தானையும் பயம் விட வில்லை.


وَإِذْ زَيَّنَ لَهُمُ الشَّيْطَانُ أَعْمَالَهُمْ وَقَالَ لَا غَالِبَ لَكُمُ الْيَوْمَ مِنَ النَّاسِ وَإِنِّي جَارٌ لَكُمْ فَلَمَّا تَرَاءَتِ الْفِئَتَانِ نَكَصَ عَلَى عَقِبَيْهِ وَقَالَ إِنِّي بَرِيءٌ مِنْكُمْ إِنِّي أَرَى مَا لَا تَرَوْنَ إِنِّي أَخَافُ اللَّهَ وَاللَّهُ شَدِيدُ الْعِقَابِ

8:48. ஷைத்தான் அவர்களுடைய செயல்களை அவர்களுக்கு அழகாகக் காண்பித்து "எம்மனிதராலும் இன்று உங்களை ஜெயிக்க முடியாது; நிச்சயமாக நானும் உங்களுக்கு(ப் பக்க) துணையாக நிற்கின்றேன்" என்று கூறிக்கொண்டிருந்ததையும் (நபியே!) நீங்கள் நினைத்துப் பாருங்கள். (இவ்வாறு கூறிக்கொண்டிருந்த) அவன், இரு படைகளும் நேருக்கு நேர் சந்திக்கவே புறங்காட்டி (ஓடி) பின்சென்று "நிச்சயமாக நான் உங்களைவிட்டு விலகிக் கொண்டேன். நீங்கள் பார்க்கமுடியாத ஒன்றை நான் பார்க்கின்றேன்; நிச்சயமாக நான் அல்லாஹ்வுக்குப் பயப்படுகின்றேன்; வேதனை செய்வதில் அல்லாஹ் மிகக் கடுமையானவன்" என்று கூறினான்.

அல்லாஹ்வின் நண்பரான இப்ராஹிம் (அலை) அவர்களும் பயந்தார்கள்.

يَا أَبَتِ إِنِّي أَخَافُ أَنْ يَمَسَّكَ عَذَابٌ مِنَ الرَّحْمَنِ فَتَكُونَ لِلشَّيْطَانِ وَلِيًّا

இப்ராஹிம் (அலை) அவர்கள் தன் தந்தையை பார்த்து கூறினார்கள்.தந்தையே அல்லாஹ்வின் புறத்திலிருந்து வேதனை உங்களை தொட்டுவிடுமோ என்று பயப்படுகிறேன்.

قَالَ رَبِّ إِنِّي قَتَلْتُ مِنْهُمْ نَفْسًا فَأَخَافُ أَن يَقْتُلُونِ
وَأَخِي هَارُونُ هُوَ أَفْصَحُ مِنِّي لِسَانًا فَأَرْسِلْهُ مَعِيَ رِدْءًا يُصَدِّقُنِي ۖ إِنِّي أَخَافُ أَن يُكَذِّبُونِ


அதற்கவர் "என் இறைவனே! மெய்யாகவே நான் அவர்களில் ஒருவரைக் கொலை செய்திருக்கிறேன். அதற்கு(ப் பழியாக) என்னை அவர்கள் வெட்டி விடுவார்கள் என்று நான் பயப்படுகிறேன். (அன்றி, என் நாவிலுள்ள கொன்னலின் காரணமாக என்னால் தெளிவாகப் பேசவும் முடிவதில்லை.)
. என்னுடைய சகோதரர் ஹாரூனோ என்னைவிட தெளிவாகப் பேசக்கூடியவர். அவரை நீ எனக்கு உதவியாக என்னுடன் அனுப்பிவை. அவர் என்னை உண்மைப்படுத்தி வைப்பார். (நான் தனியே சென்றால்) அவர்கள் என்னைப் பொய்யாக்கி விடுவார்கள் என்று நிச்சயமாக நான் பயப்படுகிறேன்" என்று கூறினார்.

அல் குர் ஆன்.28.33.34

பிர் அவ்னும் பயந்தான்.

தன்னை இறைவன் என்று சொன்ன பிர் அவ்னுக்கும் பயம் ஏற்பட்டது.
وَقَالَ فِرْعَوْنُ ذَرُونِي أَقْتُلْ مُوسَى وَلْيَدْعُ رَبَّهُ إِنِّي أَخَافُ أَنْ يُبَدِّلَ دِينَكُمْ أَوْ أَنْ يُظْهِرَ فِي الْأَرْضِ الْفَسَادَ (26)

40:26. அன்றி, ஃபிர்அவ்ன் (தன் மக்களை நோக்கி,) "என்னை(த் தடை செய்யாது) விட்டுவிடுங்கள். நான் மூஸாவைக் கொலை செய்து விடுகிறேன். அவர் (தன்னை காத்துக்கொள்ள) தன் இறைவனை அழைக்கட்டும். நிச்சயமாக அவர் உங்களுடைய மார்க்கத்தையே மாற்றி விடக்கூடும்; அல்லது பூமியில் விஷமத்தைப் பரப்பிவிடக்கூடும் என்று நான் பயப்படுகிறேன்" என்றும் கூறினான்.

மலக்குகளுக்கும் பயம்
பாவமே செய்யாத மலக்குகளுக்கும் அல்லாஹ்வை பயந்தார்கள்
وَيُسَبِّحُ الرَّعْدُ بِحَمْدِهِ وَالْمَلَائِكَةُ مِنْ خِيفَتِهِ وَيُرْسِلُ الصَّوَاعِقَ فَيُصِيبُ بِهَا مَنْ يَشَاءُ وَهُمْ يُجَادِلُونَ فِي اللَّهِ وَهُوَ شَدِيدُ الْمِحَالِ 

13:13. மேலும் இடி அவன் புகழைக் கொண்டும், மலக்குகள் அவனையஞ்சியும் (அவனை) தஸ்பீஹு செய்(து துதிக்)கின்றனர். இன்னும் அவனே இடிகளை விழச்செய்து, அவற்றைக் கொண்டு, தான் நாடியவரைத் தாக்குகின்றான்; (இவ்வாறிருந்தும்) அவர்கள் அல்லாஹ்வைப் பற்றி தர்க்கிக்கின்றனர், அவனோ மிகுந்த வல்லமையுடையவனாக இருக்கின்றான்.

மலையும் பயந்தது.

உயிரற்ற அறிவில்லாத பலம் வாய்ந்த மலையையும் பயம் விட்டு வைக்கவில்லை

لَوْ أَنْزَلْنَا هَذَا الْقُرْآَنَ عَلَى جَبَلٍ لَرَأَيْتَهُ خَاشِعًا مُتَصَدِّعًا مِنْ خَشْيَةِ اللَّهِ

 (நபியே!) யாதொரு மலையின் மீது நாம் இந்தக் குர்ஆனை இறக்கி வைத்திருந்தால், அது அல்லாஹ்வின் பயத்தால் நடுங்கி வெடித்துப் பிளந்து போவதை நிச்சயமாக நீங்கள் காண்பீர்கள். மனிதர்கள் சிந்தித்து பார்ப்பதற்காக இவ்வுதாரணங்களை நாம் கூறுகின்றோம்.

அல்குர் ஆன். 59.21

அல்லாஹ்வின் அன்பை பெற்றவர்களுக்கு பயம் உண்டானது.

عمر بن الخطاب ربما توقد له نار ثم يدني يديه منها ويقول: (يا ابن الخطاب هل لك صبر على هذا)

உமர்(ரலி) அவர்கள் சில வேலை  நெருப்பை மூட்டி அதில் தன் கையை நெருக்கமாக்கி தானே கூறிக்கொள்வார்கள் கத்தாப் உடைய மகனே இதை உன்னால் தாங்கிகொள்ள முடிகிறதா நாளை இதை விட மிகப்பெரும் நெருப்பு இருக்கிறதே அதை எப்படி தாங்கி கொள்வாய் என்று கூறிக்கொண்டு இருப்பார்கள்.

நூல். ஹூல்யதுல் அவ்லியா

وهذا سفيان الثوري رحمه الله كان يكثر البكاء فقيل له: يا أبا عبد الله بكاؤك هذا خوفا من الذنوب، فأخذ سفيان تبناً وقال: والله للذنوب أهون على الله من هذا ولكن أخاف أن أسلب التوحيد. وهذا أبو هريرة كان يقول في آخر حياته: (اللهم إني أعوذ بك أن أزني أو أعمل كبيرة في الإسلام)، فقال له بعض أصحابه: يا أبا هريرة ومثلك يقول هذا أو يخافه وقد بلغت من السن ما بلغت وانقطعت عنك الشهوات، وقد شافهت النبي وبايعته وأخذت عنه، قال: (ويحك، وما يؤمنني وإبليس حي).

அபூஹுரைரா (ரலி) அவர்கள் இறுதி காலத்தில் இவ்வாறு துஆ செய்து வந்தார்கள். யாஅல்லாஹ் இஸ்லாத்தில் பெரும் பாவம் செய்வதை விட்டும் விபச்சாரம் செய்வதை விட்டும் உன்னிடம் பாதுகாப்பு தேடுகிறேன். இதைப்பார்த்த அவர்களின் தோழர்கள் அபூஹுரைரா அவர்களே உங்களுக்கு வயோதிகமும் தொட்டிருச்சு உங்களுடைய மனோஇச்சைகளும் உங்களைவிட்டும் துண்டித்து விட்டது இந்நேரத்திலும் பெரும் பாவத்தில் இருந்தும் விபச்சாரத்தில் இருந்தும் பாதுகாவல் தேடனுமா என்று கேட்டார்கள். அதற்கு அபூஹுரைரா அவர்கள் உங்களுக்கு அழிவு உண்டாகட்டும் வழிகெடுக்க கூடிய ஷைத்தான் இன்னும் மரணமாகவில்லையே உயிருடந்தானே இருக்கிறான் என்று கூறினார்கள்.

நூல். மவாயிளுஸ் ஸஹாபா.


وعن جعفر بن سليمان قال:سمعتُ مالك بن دينار يقول:لو استطعت أن لا أنام لم أنام مخافة أن ينزل بي العذاب وأنا نائم ولو وجدتُ أعواناً لفرقتهم ينادون في سائر الدنيا كلها ياأيها الناس النار النار
 .
 என்னால் தூங்காமல் இருக்கமுடியுமானால் இருந்துவிடுவேன் காரணம் நான் தூங்கி கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் வேதனை என் மீது இறங்கிவிடுமோ என்ற பயந்தால் என்று மாலிக் இப்னு தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் என ஜஃபர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

وهذا أبو عبيدة يقول عن نفسه: وددت أني كنت كبشا فيذبحني أهلي فيأكلون لحمي ويشربون مرقي،

ஹஜ்ரத் அபூ உபைதா (ரலி) அவர்கள் பயத்தினால்  நான் ஒரு ஆடாக இருந்திருக்க கூடாதா அப்படி இருந்திருந்தால் என்னுடைய குடும்பத்தார்கள் என்னை அறுத்து என்னுடைய இறைச்சியை சாப்பிட்டு அதனுடைய சால்னாவை குடித்துக்கொள்வார்களே என்று தனக்கு தானே சொல்லிக்கொள்வார்கள்.

وهكذا. وهذا سفيان الثوري رحمه الله يقول: والله لقد خفت من الله خوفا أخاف أن يطير عقلي منه وإني لا أسأل الله في صلاتي أن يخفف من خوفي منه.


சுப்யானுஸ் ஸவ்ரி (ரஹ்) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமாக நான் அல்லாஹ்வை அதிகமாக பயப்படுகிறேன் எந்தளவிற்கு என்றால் அந்த பயத்தால் என் அறிவே போய்விடுமோ என்று நினைக்கும் நிலைக்கு போய்விடுகிறேன் என்று கூறுகிறார்கள்.

معاذ بن جبل لما حضرته الوفاة جعل يبكي، فقيل له: أتبكي وأنت صاحب رسول الله وأنت وأنت؟ فقال: ما أبكي جزعاً من الموت أن حل بي ولا دنيا تركتها بعدي، ولكن هما القبضتان، قبضة في النار وقبضة في الجنة فلا أدري في أي القبضتين أنا.
 
முஆதிப்னு ஜபல் (ரலி) அவர்களுக்கு மரண நேரம் நெருங்கியபோது அழுது கொண்டிருந்தார்கள். நீங்கள் ஏன் அழுகிறீர்கள் நீங்கள் நபியுடைய தோழர் இன்னும் நபியோடு பல போர்களில் கலந்திரிக்கிறீர்கள் பல பாக்கியங்களுக்கு சொந்தக்கார் நீங்கள் என்று சொன்னபோது முஆதிப்னு ஜபல் (ரலி) அவர்கள் கூறினார்கள் நான் மரணத்துக்கு பயந்தோ அல்லது உலகத்தை விட்டு செல்கிறேன் என்பதாலோ நான் அழவில்லை இதற்கு என்னுடைய தங்குமிடம் நரகமா. சொர்க்கமா தெரியவில்லையே என்று எண்ணிதான் அழுகிறேன்.

أبشر يا أبا عبدالله، فانك ملاق اخواتك غدا..
فأجابهم وهو يبكي:
" أما انه ليس بي جزع .. ولكنكم ذكّرتموني أقواما، واخوانا، مضوا بأجورهم كلها ام ينالوا من الدنيا شيئا..
وانّا بقينا بعدهم حتى نلنا من الدنيا ما لم نجد له موضعا الا التراب"..
وأشار الى داره المتواضعة التي بناها.
ثم أشار مرة أخرى الى المكان الذي فيه أمواله وقال:
" والله ما شددت عليها من خيط، ولا منعتها من سائل"..!
ثم التفت الى كنفه الذي كان قد أعدّ له، وكان يراه ترفا واسرافا وقال ودموعه تسيل:
" أنظروا هذا كفني..
لكنّ حمزة عم الرسول صلى الله عليه وسلم لم يوجد له كفن يوم استشهد الا بردة ملحاء.... اذا جعلت على رأسه قلصت عن قدميه، واذا جعلت على قدميه قلصت عن رأسه"..!


ஃகப்பாப் அவர்கள் நோய்வாய்ப் பட்டு மரணப்படுக்கையில் வீழ்ந்து கிடக்கின்றார்கள். அழுது கொண்டே இருப்பார்களாம். வீட்டிற்கு நலம் விசாரிக்கச் செல்லும் நபித்தோழர்களில் சிலர் அழாதீர்கள்! உங்களின் பழைய இஸ்லாமிய நண்பர்களையல்லவா நீங்கள் சந்திக்க இருக்கின்றீர்கள்! மகிழ்ச்சியோடு இருங்கள்! என்று கூறுவார்களாம்.

அதைக் கேட்கிற போது, ஃகப்பாப் (ரலி) அவர்கள் என் உயிரோடும் உணர்வோடும் ஒன்றித்து விட்ட அந்த உத்தமர்களை நான் நினைக்கும் போதெல்லாம் என் உள்ளம் கசிந்து விடுகின்றது.

அவர்கள் அல்லாஹ்விற்காகவே வாழ்ந்தார்கள். அவனுக்காகவே இறந்தும் போனார்கள். அவர்கள் தங்களின் நல்லறங்களுக்கான கூலியை முழுமையாகப் பெற்ற வண்ணமல்லவா இவ்வுலகை விட்டுச் சென்றார்கள்.

ஆனால், நானோ அவர்களுக்குப் பின்னரும் கூட உயிர் வாழ்கின்றேனே? உலகத்தின் சுக போகங்களை அனுபவிக்க வேண்டியதாயிற்றே? சத்தியமாகச் சொல்கின்றேன்! ஒரு நூலிழையைக் கொண்டு கூட இந்தச் சொத்துக்களை நான் கட்டிக்காத்திட வில்லை. மாறாக, தேவையுள்ளவர்களுக்காக என் வீட்டின் கதவுகளை நான் திறந்தே வைத்து விட்டேன்!

சொல்லிக் கொண்டே, தனக்காக தயாராய் வைத்திருந்த கஃபன் துணியைச் சுட்டிக் காட்டி தோழர்களே! ஹம்ஸா (ரலி) அவர்களும், முஸ்அப் இப்னு உமைர் (ரலி) அவர்களும் உஹதிலே ஷஹீத் ஆனார்கள். ஆனால், அவர்களின் தலையை மூடினால் காலும், கால்களை மூடினால் தலையும் தெரியும் அளவிற்கு தானே இருந்தது. ஆனால், என்னுடைய கஃபன் அவர்களுக்குரியதை போன்றா இருக்கின்றது?” என்று கூறி தேம்பித் தேம்பி அழுதார்களாம்.

அனஸ் (ரலி) அவர்களின் பயம்.
அனஸ் (ரலி) அவர்கள் ஒரு போருக்குத் தளபதியாக சென்ற பொழுது அஸர் தொழுகை தவறி பொழுதடையும் வேளையில் எதிரிகளின் கோட்டை வீழ்ந்து எதிரிகள் ஓட்டம் பிடித்த பொழுது இவரின் படை வீரர்கள் அனைவரும் மகிழ்ச்சியை வெளிப்படுத்திய பொழுது இவர் கண்ணீர் விட்டு அழுதார் காரணம் கேட்க யார் அஸர் தொழு,கையை உரிய நேரத்தில் தொழுகிறாரோ அவருக்கு சுவனத்தில் ஓர் மாளிகை உண்டு என நபி(ஸல்) அவர்கள் கூறியிருக்க அஸர் தொழுகையை விட்டி விட்டோமே இவ்வுலகின் கோட்டைக்காக மறு உலகின் கோட்டையை விட்டு விட்டோமே என பதில் அளித்தார்கள் இவரை இமாம் ஜூஹ்ரி(ரஹ்) அவர்கள் டமாஸ்கஸில் சந்தித்த பொழுது இவர் கண்ணீர் வடித்து அழுதார் நபியின் காலத்திலும் நபித்தோழர்களின் காலத்திலும் இருந்தவற்றில் தொழுகையை தவிர்த்து வேறு எதுவும் இப்பொழுது இல்லையே நீங்கள் செய்ய விரும்பியதையெல்லாம் இப்பொழுது செய்து கொண்டிருக்கிறீர்கள்.


அல்லாஹ்வுடைய பயம் நம்முடைய உள்ளத்தில் வந்து விட்டால் மற்றவைகளின் பயம் நீங்கிவிடும்.


قَالَ فَوَاللَّهِ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ عَلَّمَنِيهِنَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فَقَالَ لَهُ ابْنُ الْكَوَّاءِ وَلَا لَيْلَةَ صِفِّينَ فَقَالَ قَاتَلَكُمْ اللَّهُ يَا أَهْلَ الْعِرَاقِ نَعَمْ وَلَا لَيْلَةَ صِفِّينَ

ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக நபி (ஸல்) அவர்கள் இக்கலிமாக்களை கற்றுத் தந்த நாளிலிருந்து இதை ஓதி வருவதை என்றும் நான் விட்டதில்லை இப்னு கவாஃ (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் அலி(ரலி) அவர்களிடம் நீங்கள் இக்கலிமாக்களை ஸிஃப்பீன் போரின் போது இரவிலும் ஓதுவதை விட்டதில்லையா எனக் கேட்க ஈராக் வாசிகளே அல்லாஹ் நாசமாக்குவானாக ஸிஃப்பீன் போரின் இரவிலும் இக்கலிமாக்களை விட்டதில்லை என்பதாக ஹஜ்ரத் அலி(ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்

நூல்; முஸ்னத் அஹ்மத்.

அல்லாஹ்வை பயப்படவில்லையென்றால் அதனால் ஏற்படும் இழப்பு.

رواه ابن ماجه عن أبي سعيد الخدري رضي الله عنه عن رسول الله صلى الله عليه وسلم : أنه قال : ( لا يحقر أحدكم نفسه ! قالوا يا رسول الله ! كيف يحقر أحدنا نفسه ؟ قال يرى أمرا لله عليه فيه مقال، ثم لا يقول فيه، فيقول الله عز وجل له يوم القيامة ما منعك أن تقول في كذا وكذا ؟ فيقول خشية الناس فيقول الله عز وجل فإياي كنت أحق أن تخشى ) .

நபி (ஸல்)அவர்கள் கூறினார்கள். உங்களில் யாரும் தன்னையே மட்டமாக கருத வேண்டாம். என்று சொன்ன போது ஸஹாபாக்கள் கேட்டார்கள் யாரஸூலல்லாஹ் தன்னையே இழிவாக கருதுவதுன்னா என்னா என்று கேட்ட போது நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் கட்டளையை சொல்ல வேண்டிய இடத்தில் சொல்லாமல் இருந்துவிட்ட ஒருவரிடம் நாளை மருமையில் அல்லாஹ் கேட்பான் என்னுடைய கட்டளையை மக்களிடம் சொல்வதைவிட்டும் உன்னை தடுத்தது என்ன என்று கேட்பான் அப்போது அந்த மனிதர் சொல்வார். நான் சொன்னால் அந்த மக்கள் என்னை ஏதும் செய்துவிடுவார்களோ என்ற பயம்தான் என்னை தடுத்துவிட்டது.அப்போது அல்லாஹ் சொல்வான் என்னையல்லவா பயந்துஇருக்கவேண்டும் அந்த மனிதர்களை விட பயப்படுவதற்கு நாந்தானே தகுதியானவன் அவ்வாறிருக்க என்னை ஏன் பயப்படவில்லை என்று கேட்பான்.



وروي أن الله تعالى أوحى إلى يعقوب عليه السلام: أتدري لم فرقت بينك وبين ولدك يوسف؟ قال: لا، قال: لقولك لأخوته: " أخاف أن يأكله الذئب وأنتم عنه غافلون " لم خفت عليه الذئب ولم ترجني، ولم نظرت إلى غفلة أخوته ولم تنظر إلى حفظي له؟ وتدري لم رددته عليك؟ قال: لا، قال: لأنك رجوتني وقلت: " عسى الله أن يأتيني بهم جميعاً " وبما قلت: " اذهبوا فتحسسوا من يوسف وأخيه ولا تيأسوا " وكذلك لما قال يوسف لصاحب الملك: " اذكرني عند ربك " ، قال الله تعالى: " فأنساه الشيطان ذكر ربه فلبث في 
السجن بضع سنين " .

யஃகூப் (அலை) அவர்களிடம்  அல்லாஹ்  கேட்டான் யா யஃகூபே உங்களை உங்கள் மகனான யூசுப் (அலை) அவர்களிடம் இருந்து ஏன் பிரித்தோம் தெரியுமா . அதற்கு யஃகூப் (அலை) அவர்கள் கூறினார்கள் யா அல்லாஹ் தெரியாது. அல்லாஹ் சொன்னான் நீங்கள் உங்களுடை குழந்தைகளிடம் என் மீது நம்பிக்கை கொள்ளாமல். என்னை பயப்படாமல்  நீங்கள் கவன குறைவாக இருக்கும்போது ஓநாய் சாப்பிட்டுவிடும் என்று கூறினீர்களே அந்த வார்த்தைதான் காரணம்.

நூல். தப்ஸீர் குர்துபி.

பயத்தை போக்க நாயகம் கற்றுகொடுத்த துஆ.

943 - حدثنا أحمد بن مسعود المقدسي الخياط قال : نا عمرو بن أبي سلمة قال : نا أبو معيد حفص بن غيلان ، عن الحكم بن عبد الله الأيلي ، عن القاسم أبي عبد الرحمن ، عن أبي أمامة ، . قال : حدثني خالد بن الوليد ، عن رسول الله صلى الله عليه وسلم عن أهاويل ، يراها بالليل ، حالت بينه وبين صلاة الليل ، فقال رسول الله صلى الله عليه وسلم : « يا خالد بن الوليد ، ألا أعلمك كلمات تقولهن ، لا تقولهن ثلاث مرات حتى يذهب الله ذلك عنك ؟ » قال : بلى يا رسول الله ، بأبي أنت وأمي ، فإنما شكوت ذاك إليك رجاء هذا منك قال : « قل : أعوذ بكلمات الله التامة من غضبه ، وعقابه ، وشر عباده ، ومن همزات الشياطين ، وأن يحضرون » . قالت عائشة : فلم ألبث إلا ليالي يسيرة حتى جاء خالد بن الوليد ، فقال : يا رسول الله ، بأبي أنت وأمي ، والذي بعثك بالحق ، ما أتممت الكلمات التي علمتني ثلاث مرات حتى أذهب الله عني ما كنت أجد ، ما أبالي لو دخلت على أسد في حبسه بليل



ஹஜ்ரத் அபூ உமாமா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் ஹஜ்ரத் காலித் பின் வலீத்(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் நான் இரவு பயமுறுத்தும் விஷயங்களை பார்க்கிறேன் ஆகையால் தஹஜ்ஜத் தொழுகைக்கு எழ முடியவில்லை என்று முறையிட்டார் அதற்கு நபி(ஸல்) அவர்கள் காலிதே நான் ஒரு வாசகத்தை உனக்குக் கற்றுக் கொடுக்கவா அதை நீர் ஓதுவதால் உனக்கு ஏற்பட்டுள்ள இந்த சிரமம் நீங்கி விடும் என்று கூறியதற்கு யாரஸூலல்லாஹ் என்னுடைய தாயும் தந்தையும் தங்கள் மீது அர்ப்பணமாகட்டும் அவசியம் கற்றுக்கொடுங்கள் ஹஜ்ரத் காலித் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறினார்கள் அதற்கு கீழ்க்காணும் துஆவை ஓதுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
 
நான் அல்லாஹ்வின் கோபம் மேலும் அவனுடைய தண்டனை அவனுடைய அடியார்களின் தீங்கு ஷைத்தான்களின் ஊசலாட்டங்கள் மேலும் ஷைத்தான்கள் என்னை நெருங்குவதை விட்டும் அவனுடைய பரிபூரணமான  வார்த்தைகளைக் கொண்டு நான் பாதுகாவல் தேடுகிறேன்
ஹஜ்ரத்  ஆயிஷா(ரலி) அவர்கள் கூறுகிறார்கள் சில இரவுகள் கழிந்தன காலித்(ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களிடம் வந்து யாரஸுலல்லாஹ் என்னுடைய தாய் தந்தை தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் உங்களுக்கு சத்திய மார்க்கத்தை கொடுத்து அனுப்பிய அல்லாவின் மீது சத்தியமாக தாங்கள் எனக்கு கற்றுக் கொடுத்த அந்த வாசகங்களை மூன்று தடவை மட்டுமே கூறியிருப்பேன் அல்லாஹுதஆலா என்னுடைய அந்த சிரமத்தை போக்கி விட்டான் இப்பொழுது என்னுடைய நிலை எவ்வாறு இருக்கிறது என்றால் சிங்கம் வசிக்கும் காட்டில் இரவு நேரத்தில் கூட எந்த பயமும் இல்லாமல் என்னால் செல்ல முடியும் என்று கூறினார்கள்.

           நூல்:ஹயாத்துஸ் ஸஹாபா பாகம் .3  பக்கம்.409.   தப்ரானி