வியாழன், 11 செப்டம்பர், 2014

இறை நம்பிக்கையை அதிகமாக்கும் இறுதிக் கடமை



இஸ்லாத்தின் ஐம்பெரும் கடமைகளில் இறுதிக் கடமையாக ஹஜ் காணப்படுகிறது. ஹஜ் என்ற அரபுப் பதத்திற்கு (புனிதமான ஒன்றை) நாடிச் செல்லல் என்பது பொருளாகும். அதாவது அல்லாஹ்வின் இல்லமான புனித கஃபாவை நாடிச் சென்று இக்கடமை நிறைவேற்றப்படுவதால் ஹஜ் என்ற அரபு பதத்தால் இக்கடமை அழைக்கப்படுகிறது.
ஹஜ்ஜினால் ஏற்படும் நன்மைகளும் அது புகட்டும் பாடங்களும் ஏராளம் உள்ளன. அவைகள் இன்றைய சமூகத்தில் சரியாக உணரப்படவில்லை என்றே கூற வேண்டியுள்ளது.

ஒற்றுமை, சமத்துவம், சகோதரத்துவம், பொறுமை, தியாகம், சகிப்புத்தன்மை, மறுமை பற்றிய ஞாபகம், மரணத்தை நினைவூட்டுதல், இஸ்லாத்துக்கு எதிரான சக்திகளை எதிர்த்து நிற்றல், அல்லாஹ்வுக்காக எதனையும் தியாகம் செய்தல், தீனை நிலை நாட்டப்பாடுபடுதல் போன்ற பல படிப்பினைகளை ஹஜ் மக்குப் புகட்டுகிறது. இவை இன்றைய காலகட்டத்தில் சீர்தூக்கிப் பார்க்கப்பட வேண்டிய முக்கிய அம்சங்களாகும்.
அதிலும் குறிப்பாக
ஹஜ் செய்வதின் மூலமாக இறை நம்பிக்கை அதிகமாகும் அதற்கு உண்டான வழிகள் அதிகமானவை ஹஜ்ஜில் இருக்கின்றன.
முதலாவதாக காலமெல்லாம் எந்த கிப்லாவை முன்னோக்கி தொழுதோமோ அந்த கிப்லாவை நேரடியாக. முன்னால் நின்று தொழுகும் போது ஏற்படும் நிலை அதை வார்த்தையால் வர்ணிக்கமுடியாது. நம்முடைய ஈமான் அதிகமாவதை அப்போது உணரலாம்.

இம்மையிலும் மறுமையிலும் நிம்மதியை பெற்றுத்தரும் இடம்.

மக்கமா நகரத்தை அல்லாஹ் அபயமளிக்கக் கூடிய பூமியாக ஆக்கியுள்ளான்.
 وَمَنْ دَخَلَهُ كَانَ آَمِنًا
'அதில் நுழைந்தவர் அபயம் பெற்றவராவார்."

 அல்குர்ஆன் 3:97

மிகப்பெரும் குழப்பமான தஜ்ஜாலை விட்டும் கூட பாதுகாப்பு கிடைக்கும் இடம்.

இறுதி நாளின் அடையாளங்களில் ஒன்று தஜ்ஜாலின் வருகையாகும். இவன் உலகினுடைய அனைத்துப் பகுதிகளுக்கும் செல்வான். ஆனால் மக்காவிற்கும், மதீனாவிற்கும் மட்டும் செல்ல முடியாது.

عَنْ إِسْحَقَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْسَ مِنْ بَلَدٍ إِلَّا سَيَطَؤُهُ الدَّجَّالُ إِلَّا مَكَّةَ وَالْمَدِينَةَ وَلَيْسَ نَقْبٌ مِنْ أَنْقَابِهَا إِلَّا عَلَيْهِ الْمَلَائِكَةُ صَافِّينَ تَحْرُسُهَا فَيَنْزِلُ بِالسِّبْخَةِ فَتَرْجُفُ الْمَدِينَةُ ثَلَاثَ رَجَفَاتٍ يَخْرُجُ إِلَيْهِ مِنْهَا كُلُّ كَافِرٍ وَمُنَافِق

"மக்கா, மதீனாவைத் தவிர, தஜ்ஜால் கால் வைக்காத எந்த ஊரும் இருக்காது. அவற்றின் (மக்கா, மதீனா) ஒவ்வொரு நுழைவு வாயிலிலும் மலக்குகள் அணிவகுத்து அவனைத் தடுத்தவர்களாக இருப்பார்கள்'' என்று நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்.

நூல். புகாரி 1881, முஸ்லிம் 5236)

وأخرج الجندي عن ابن عمر قال : من قُبِرَ بمَكة مسلماً بُعِثَ آمناً يوم القيامة .

யார் மக்காவில் முஸ்லிமான நிலையில் மரணிக்கிறாரோ அவர் மறுமை நாளில் நிம்மதி அடைந்தவராக எழுப்பப் படுவார்.

நூல். கன்சுல் உம்மால்.

துஆவின் வலிமையை அங்கே காணலாம்.

இப்ராஹீம் நபி செய்த பிரார்த்தனை.

وَإِذْ قَالَ إِبْرَاهِيمُ رَبِّ اجْعَلْ هَذَا بَلَدًا آَمِنًا وَارْزُقْ أَهْلَهُ مِنَ الثَّمَرَاتِ مَنْ آَمَنَ مِنْهُمْ بِاللَّهِ وَالْيَوْمِ الْآَخِرِ قَالَ وَمَنْ كَفَرَ فَأُمَتِّعُهُ قَلِيلًا ثُمَّ أَضْطَرُّهُ إِلَى عَذَابِ النَّارِ وَبِئْسَ الْمَصِير

'இறைவா! இவ்வூரைப் பாதுகாப்பு மையமாக ஆக்குவாயாக! இவ்வூராரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பியோருக்குக் கனிகளை வழங்குவாயாக!''

அல்குர்ஆன் 2:126

அல்லாஹ் அவருடைய பிரார்த்தனையை ஏற்று மக்காவைப் பாதுகாப்பு மையமாக ஆக்கினான்.
 
திருக்குர்ஆன் அபயபூமி என அறிவித்து 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபயபூமியாகவே உள்ளது. 14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்று சிறப்பு மிக்க ஆலயமாகவும் இது இருந்து வருகிறது. குர்ஆன் இறைவனின் வார்த்தைகள் தான் என்பதற்கு இது மிகப் பெரும் சான்றாக அமைந்துள்ளது.
 
وَقَالُوا إِنْ نَتَّبِعِ الْهُدَى مَعَكَ نُتَخَطَّفْ مِنْ أَرْضِنَا أَوَلَمْ نُمَكِّنْ لَهُمْ حَرَمًا آَمِنًا يُجْبَى إِلَيْهِ ثَمَرَاتُ كُلِّ شَيْءٍ رِزْقًا مِنْ لَدُنَّا وَلَكِنَّ أَكْثَرَهُمْ لَا يَعْلَمُونَ

'அபயம் அளிக்கும் புனிதத் தலத்தை அவர்களுக்காக வசிப்பிடமாக நாம் ஆக்க வில்லையா? ஒவ்வொரு கனி வர்க்கமும் நம்மிடமிருந்து உணவாக அதை நோக்கிக் கொண்டு வரப்படுகிறது. எனினும் அவர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள்."

 அல்குர்ஆன் 28:57

மேலும் உலகத்தில் விளைகின்ற அனைத்து கனி வர்க்கங்களும் மக்காவில் தாராளமாக வந்து குவிந்து கொண்டிருப்பதும், இது இறைவனின் வார்த்தைகள் என்பதற்குச் சான்றாகத் திகழ்கிறது.
 
அளவற்ற நன்மை கிடைக்கும் இடம்.
 
"கஅபா' ஆலயத்தில் தொழுகின்ற ஒரு தொழுகை மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஒரு இலட்சம் தொழுகைகளை விட அதிகமான நன்மைகள் நிறைந்ததாகும்.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةٌ فِي مَسْجِدِي هَذَا خَيْرٌ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ
 
"என்னுடைய பள்ளி (மஸ்ஜிதுன் னபவி)யில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுகின்ற ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். அல் மஸ்ஜிதுல் ஹராம் (கஅபா)வைத் தவிர! (ஏனென்றால் அதற்கு அதை விட அதிகமான நன்மைகள் உள்ளது.)

நூல். புகாரி. 1190

عَنْ جَابِرٍ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صَلَاةٌ فِي مَسْجِدِي أَفْضَلُ مِنْ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ إِلَّا الْمَسْجِدَ الْحَرَامَ وَصَلَاةٌ فِي الْمَسْجِدِ الْحَرَامِ أَفْضَلُ مِنْ مِائَةِ أَلْفِ صَلَاةٍ فِيمَا سِوَاهُ

"மஸ்ஜிதுல் ஹராமில் ஒரு தொழுகை தொழுவது மற்ற பள்ளிகளில் ஒரு இலட்சம் தொழுகை தொழுவதை விடச் சிறந்ததாகும்'' என நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் கூறியுள்ளார்கள்.

நூல். இப்னுமாஜா 1396,  அஹ்மத் 14167.

எந்நேரமும் வழிபடலாம்.
 
நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் குறிப்பிட்ட நேரங்களில் தொழுவதற்குத் தடை விதித்துள்ளார்கள். அந்நேரங்களில் தொழுவது கூடாது. உதாரணத்திற்கு சூரியன் உதிக்கும் போதும், உச்சியிலிருக்கும் போதும், மறையத் துவங்கும் பொழுதும் தொழுவது கூடாது.
ஆனால் இந்தத் தடை ''கஅபா''விற்கு மட்டும் கிடையாது. அங்கு எந்நேரமும் தொழுது கொள்ளலாம். வணக்க வழிபாடுகளை நிறைவேற்றலாம்.
 
عَنْ جُبَيْرِ بْنِ مُطْعِمٍ
أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا تَمْنَعُوا أَحَدًا طَافَ بِهَذَا الْبَيْتِ وَصَلَّى أَيَّةَ سَاعَةٍ شَاءَ مِنْ لَيْلٍ أَوْ نَهَارٍ
وَفِي الْبَاب عَنْ ابْنِ عَبَّاسٍ وَأَبِي ذَرٍّ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ جُبَيْرٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَقَدْ رَوَاهُ عَبْدُ اللَّهِ بْنُ أَبِي نَجِيحٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بَابَاهَ أَيْضًا وَقَدْ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ فِي الصَّلَاةِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ بِمَكَّةَ فَقَالَ بَعْضُهُمْ لَا بَأْسَ بِالصَّلَاةِ وَالطَّوَافِ بَعْدَ الْعَصْرِ وَبَعْدَ الصُّبْحِ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَقَ وَاحْتَجُّوا بِحَدِيثِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا و قَالَ بَعْضُهُمْ إِذَا طَافَ بَعْدَ الْعَصْرِ لَمْ يُصَلِّ حَتَّى تَغْرُبَ الشَّمْسُ وَكَذَلِكَ إِنْ طَافَ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ أَيْضًا لَمْ يُصَلِّ حَتَّى تَطْلُعَ الشَّمْسُ وَاحْتَجُّوا بِحَدِيثِ عُمَرَ أَنَّهُ طَافَ بَعْدَ صَلَاةِ الصُّبْحِ فَلَمْ يُصَلِّ وَخَرَجَ مِنْ مَكَّةَ حَتَّى نَزَلَ بِذِي طُوًى فَصَلَّى بَعْدَ مَا طَلَعَتْ الشَّمْسُ وَهُوَ قَوْلُ سُفْيَانَ الثَّوْرِيِّ وَمَالِكِ بْنِ أَنَسٍ

நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள், "அப்து மனாஃப் குடும்பத்தினரே! இரவிலோ, பகலிலோ எந்த நேரத்திலும், ஒருவர் தான் நாடிய பொழுது இந்த (கஅபா) வீட்டை வலம் வருபவரையோ, தொழுபவரையோ தடுக்காதீர்கள்."

நூல். திர்மிதி. 795

ஹஜ் யார் செய்வார் என்பதை அல்லாஹ் முன் கூட்டியே முடிவு செய்துவிட்டான்.

وأخرج ابن أبي حاتم عن ابن عباس قال : لما أمر الله إبراهيم أن ينادي في الناس بالحج ، صعد أبا قبيس فوضع أصبعيه في أذنيه ثم نادى : إن الله كتب عليكم الحج فأجيبوا ربكم . فأجابوه بالتلبية في أصلاب الرجال وأرحام النساء ، وأول من أجابه أهل اليمن . فليس حاج يحج من يومئذ إلى أن تقوم الساعة ، إلا من كان أجاب إبراهيم يومئذ .
وأخرج الديلمي بسندٍ واهٍ ، عن علي رفعه : لما نادى إبراهيم بالحج لبى الخلق ، فمن لبى تلبية واحدة حج حجة واحدة ، ومن لبى مرتين حج حجتين ، ومن زاد فبحساب ذلك .

ஹஜ்ரத் இப்ராஹிம் (அலை) அவர்கள் இறை இல்லத்தை கட்டி முடித்த பின்னர் அல்லாஹ்வின் சன்னிதானத்தில் அதனைக் கட்டி மு்டிக்கப்பட்டுவிட்டது என கூறினார்கள். அதற்கு. ஹஜ்ஜை பற்றி மக்களுக்கு அறிவிப்பு செய்வீராக என அல்லாஹ் கட்டளையிட்டான் அப்போது இப்ராஹிம் நபி அவர்கள் யா அல்லாஹ் என்னுடைய சப்தம் எவ்வாறு சென்றடையும்  என்று அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். அதற்கு அல்லாஹுத் தஆலா சப்தத்தை கொண்டு சேர்ப்பது நம்முடைய பொறுப்பாகும் என அறிவித்தான். உடனே இப்ராஹிம் (அலை) அவர்கள் ஹஜ்ஜுக்கான அழைப்பு விடுத்தார்கள். அவ்வறிவிப்பை வானம் பூமிக்கிடையில் உள்ள அனைத்து வஸ்துகளும் கேட்டன மேற்கூறிய அழைப்பை கேட்டு ஒவ்வொரு மனிதனும் லப்பைக் என பதில் கூறினான். எததனை முறை லப்பைக் என்று பதில் கூறினானோ அத்தனை முறை ஹஜ்ஜு செய்வார்கள்.

நூல். தப்ஸீர் துர்ருல் மன்ஸூர்.


ஹஜ் முடிவுக்கு வரும் நேரம் வருமுன் ஹஜ் செய்வோம்.

கியாமத் நாள் வரை கஅபாவில் ஒவ்வொரு ஆண்டும் ஹஜ் செய்யப்படும். கஅபாவில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் ஏற்படும்.
 
عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيُحَجَّنَّ الْبَيْتُ وَلَيُعْتَمَرَنَّ بَعْدَ خُرُوجِ يَأْجُوجَ وَمَأْجُوجَ
تَابَعَهُ أَبَانُ وَعِمْرَانُ عَنْ قَتَادَةَ وَقَالَ عَبْدُ الرَّحْمَنِ عَنْ شُعْبَةَ قَالَ لَا تَقُومُ السَّاعَةُ حَتَّى لَا يُحَجَّ الْبَيْتُ وَالْأَوَّلُ أَكْثَرُ سَمِعَ قَتَادَةُ عَبْدَ اللَّهِ وَعَبْدُ اللَّهِ أَبَا سَعِيدٍ

நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் கூறினார்கள்: "யஃஜுஜ், மஃஜுஜ் கூட்டத்தார் வந்த பிறகும் இவ்வாலயத்தில் ஹஜ்ஜும் செய்யப்படும். உம்ராவும் செய்யப்படும். 'கஅபா'வில் ஹஜ் செய்யப்படாத நாள் வந்த பிறகே கியாமத் நாள் வரும்.

 நூல். புகாரி 1593.

மக்காவை நேசிப்பது நபியின் சுன்னத்.

நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் மக்காவின் மீது அளப்பரிய பற்று வைத்திருந்தார்கள். அங்கேயே வாழ வேண்டும் என எண்ணினார்கள்.
 
عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَدِيِّ ابْنِ حَمْرَاءَ الزُّهْرِيِّ قَالَ
رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاقِفًا عَلَى الْحَزْوَرَةِ فَقَالَ وَاللَّهِ إِنَّكِ لَخَيْرُ أَرْضِ اللَّهِ وَأَحَبُّ أَرْضِ اللَّهِ إِلَى اللَّهِ وَلَوْلَا أَنِّي أُخْرِجْتُ مِنْكِ مَا خَرَجْتُ

நபி ஸல்லல்லாஹ¤ அலைஹி வஸல்லம் அவர்கள் 'கஸ்வா'' என்ற ஒட்டகத்தின் மீது நின்றவர்களாக மக்காவை நோக்கி, ''நீ தான் அல்லாஹ்வுடைய பூமியில் சிறந்த ஊராவாய்! அல்லாஹ்வுடைய பூமியில் மிகவும் விருப்பத்திற்குரிய ஊராவாய்! என்னுடைய சமுதாயம் (உன்னை விட்டும்) என்னை வெளியேற்றி இருக்காவிட்டால் நான் வெளியேறி இருக்க மாட்டேன். (ஆனால், அவர்களோ என்னை வெளியேற்றி விட்டார்கள்.)'' என்று கூறினார்கள்.

நூல். திர்மிதி. 3860

சுவனத்தின் ஒரு பகுதியை அங்கே பார்க்கலாம்.

ما بين قبري ومنبري روضة من رياض الجنة ومنبري على حوضي "

என்னுடைய கப்ருக்கும் .மிம்பருக்கும் இடைப்பட்ட இடம் சுவனபூங்காகளில் ஒரு பூங்கா என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.


நபியின் ஸலாமை நேரடியாக பெறலாம்.

أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا مِنْ أَحَدٍ يُسَلِّمُ عَلَيَّ إِلَّا رَدَّ اللَّهُ عَلَيَّ رُوحِي حَتَّى أَرُدَّ عَلَيْهِ السَّلَامَ

ஹஜ்ரத் அபூஹுரைரா(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் அருள் வாக்கை அறிவிக்கிறார்கள் எந்த ஒரு மனிதர் என்னுடைய கப்ருக்கருகில் வந்து என் மீது ஸலாம் சொல்வாரோ அல்லாஹூதஆலா என்னுடைய உயிரை என் வரை கொண்டு சேர்க்கிறான் நான் அவருடைய ஸலாமுக்கு பதில் கூறுகின்றேன்
 
நூல்;அஹ்மத்.அபூதாவூத். ஹதீஸ் எண். 1745

விளக்கம்;ஹஜ்ரத் இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் ஷரஹ் மனாசிக் என்னும் நூலில் என்னுடைய உயிரை என் வரை கொண்டு சேர்க்கிறான் என்பதற்கு பேசுவதற்கான சக்தியை அளித்து விடுகிறான் என்று கருத்தாகும் எனக் கூறியிருக்கிறார்கள்.

ஹாஜிகள் கொஞ்சமாவது நடக்க முயற்சி செய்ய வேண்டும்

ابن عباس رضي الله عنهما بنيه عند موته فقال: يا بني حجوا مشاة فإن للحاج الماشي بكل خطوة يخطوها سبعمائة حسنة من حسنات الحرم

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது அன்னார் நோயுற்ற போது நான் கால்நடையாக ஹஜ்ஜூக்கு செல்லவில்லையே என்று வருந்தும் அளவுக்கு எனக்கு எந்த ஒரு விஷயத்தைப் பற்றியும் அவ்வளவாக வருத்தம் இல்லை ஏனெனில் அல்லாஹ்
 
وَأَذِّنْ فِي النَّاسِ بِالْحَجِّ يَأْتُوكَ رِجَالًا وَعَلَى كُلِّ ضَامِرٍ يَأْتِينَ مِنْ كُلِّ فَجٍّ عَمِيق

என்னும் பரிசுத்த ஆயத்தில் முதலில் கால்நடையாகச் சொல்பவர்களையே குறிப்பிட்டுக் கூறியுள்ளான் எனக் கூறினார்கள் 
                                       
நூல்;துர்ருல் மன்சூர்.
 
முஜாஹித் (ரஹ்) அவர்கள் ஹஜ்ரத் இப்ராஹிம் (அலை) அவர்களும் இஸ்மாயில் (அலை) அவர்களும் கால்நடையாக ஹஜ்ஜூ செய்தார்கள் எனக் கூறுகிறார்கள். 
           
நூல்;துர்ருல் மன்சூர்.

أوحى الله تعالى إلى آدم فقال : يا آدم حج هذا البيت قبل أن يحدث عليك حدث قا : وما يحدث علي يا رب ؟ قال : ما لا تدري وهو الموت قال : وما الموت ؟ قال : سوف تذوقه.

ஆதம் (அலை) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அறிவித்தான். யா ஆதமே ஏதாவது உங்களுக்கு ஏற்படுமுன் ஹஜ் செய்துகொள்ளுங்கள். யா அல்லாஹ் எனக்கு அப்படி என்ன ஏற்படும் என்று கேட்டபோது அல்லாஹ் சொன்னான் மரணம் ஏற்படும். யா அல்லாஹ் மரணம்னா என்ன என்று ஆச்சரியத்தோடு ஆதம் நபி கேட்டபோது அல்லாஹ் சொன்னான் இனிமேல் அதை சுவைப்பீர்கள்.

நூல். தைலமி. கன்சுல் உம்மால். ஹதீஸ் எண். 11852 


ஒரு அறிவிப்பில் ஹஜ்ரத் ஆதம் (அலை) அவர்கள் இந்தியாவிலிருந்து கால்நடையாகச் சென்று ஓராயிரம் ஹஜ்ஜூ செய்தார்கள் எனக் கூறப்பட்டுள்ளது.
 
நூல்;தர்கீப்

ஆதம் (அலை) நாற்பது ஹஜ்ஜூ கால்நடையாக நிறைவேற்றினார்கள் என்றும் வந்துள்ளது
ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கால்நடையாக ஹஜ்ஜூ செய்வது நபிமார்களின் வழக்கமாயிருந்தது என கூறுகிறார்கள்.
 நூல். இத்திஹாப்.


ஹஜ் செய்யாதவர்களுக்கு ஏற்படும் நிலை.

قال : من مات وهو موسر لم يحج . فليمت إن شاء يهودياً ، وإن شاء نصرانياً .

யார் வசதி வாய்ப்பு இருந்தும் ஹஜ் செய்யவில்லையோ அவர் நாடினால் யூதராகவோ. கிரிஸ்தவராகவோ மரணமாகட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். தாரமி


وأخرج ابن أبي شيبة وعبد بن حميد وابن أبي حاتم من طريق مجاهد عن ابن عمر قال : من كان يجد وهو موسر صحيح لم يحج كان سماه بين عينيه كافراً . ثم تلا هذه الآية { ومن كفر فإن الله غني عن العالمين

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.
யார் வசதி வாய்ப்பு இருந்தும் ஹஜ் செய்யவில்லையோ அவர் கியாமத் நாளில் இரண்டு கண்களுக்கு இடையில் நிராகரித்தவர் என்று எழுதப்பட்ட நிலையில் வருவார். பிறகு இந்த வசனத்தை ஓதினார்கள்.

ومن كفر فإن الله غني عن العالمين

யாரேனும் (ஹஜ் செய்வதை) நிராகரித்தால் (அல்லாஹ் அதனை பொருட்படுத்தமாட்டான்.) நிச்சயமாக அல்லாஹ் உலகத்தார்களை விட்டும் தேவையற்றவனாக இருக்கின்றான்.
அல் குர் ஆன். 4.97.

நூல். இப்னு அபீ ஷைபா.



وأخرج سعيد بن منصور عن عمر بن الخطاب قال : لو ترك الناس الحج لقاتلتهم عليه كما نقاتلهم على الصلاة والزكاة .

வசதி இருந்தும் ஹஜ் செய்வதை விட்டு விட்டால் தொழுகை. ஜகாத் விட்டதற்காக போர்தொடுப்பது போன்று இவர்கள் மீதும் போர்தொடுப்பேன் என்று உமர் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

நூல். இப்னு அபீ ஷைபா

وأخرج ابن أبي شيبة عن سعيد بن جبير قال : لو كان لي جار موسر ، ثم مات ولم يحجَّ لم أصلِّ عليه .

என்னுடைய பக்கத்து வீட்டுக்காரர் வசதி இருந்தும் ஹஜ் செய்யாமல் மரணமாகிவிட்டால் அவருடைய ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்ளமாட்டேன் என ஸயீதிப்னு ஜுபைர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல். இப்னு அபீ ஷைபா

وكان ابن عباس يقول: من مات ولم يزك ولم يحج سأل الرجعة إلى الدنيا وقرأ قوله عز وجل " رب ارجعون لعلي أعمل صالحاً فيما تركت "

ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் எந்த மனிதரிடம் ஹஜ்ஜூ நிறைவேற்ற செல்வமிருந்தும் ஹஜ்ஜூ செய்யவில்லையோ இன்னும் ஜகாத் கடமையாகுமளவு பொருளிருந்தும் ஜகாத் கொடுக்கவில்லையோ அவர் இறக்கும் போது மறுபடியும் உலகிற்கு திரும்பி வர வேண்டும் என ஆசைப்படுவார்.

நூல். தப்ஸீர் துர்ருல் மன்ஸூர்.

நம்முன்னோர்களின் ஹஜ்ஜின் நிலை.

عن أبي سليمان أنه قال: حج أويس القرني رضي الله عنه ودخل المدينة فلما وقف على باب المسجد قيل له: هذا قبر النبي صلى الله عليه وسلم فغشي عليه. فلما أفاق قال: أخرجوني فليس يلذ لي بلد فيه محمد صلى الله عليه وسلم مدفون.

உவைசுல் கர்னீ (ரஹ்) அவர்கள் ஹஜ் செய்தபோது மதீனாவிற்குள் நுழைந்த சமயம் இதுதான் நபி (ஸல்) அவர்களின் கப்ரு என்று சொல்லப்பட்டதும் உவைசுல் கர்னீ (ரஹ்) அவர்கள் உடனே மயங்கி விழுந்துவிட்டார்கள். மயக்கம் தெளிந்து எழுந்ததும் நபி (ஸல்) அவர்கள் எந்த பூமியில் அடக்கப்பட்டிருக்கிறார்களோ அந்த இடத்தில் என்னால் இருக்கமுடிய வில்லை என்னை இங்கிருந்து சீக்கிரமாக வெளியேற்றி விடுங்கள் என்று கூறினார்கள்.

நூல். இஹ்யா.


سفيان بن عيينة: حج علي ابن الحسين رضي الله عنهما فلما أحرم واستوت به راحلته اصفر لونه وانتفض ووقعت عليه الرعدة ولم يستطع أن يلبي فقيل له: لم لا تلبي؟ فقال: أخشى أن يقال لي لا لبيك ولا سعديك. فلما لبى غشي عليه ووقع عن راحلته فلم يزل يعتريه ذلك حتى قضى حجه

ஹஜ்ரத்  ஜைனுல் ஆபிதீன் (ரஹ்) அவர்கள் ஹஜ்ஜூக்காக இஹ்ராம் கட்டிய போது அவரின் முகம் மஞ்சனித்து விட்டது இன்னும் உடல் நடுக்கம் கண்டு விட்டது லப்பைக் என்ற தல்பியாவை அவர்களால் கூற முடியவில்லை ஒருவர் தாங்கள் இஹ்ராம் உடைய ஆரம்பத்தில் லப்பைக் கூறவில்லையே எனச் சொன்னார் அதற்கு அன்னார் நான் கூறும் லப்பைக்கிற்கு பதிலாக லா லப்பைக் என பதில் சொல்லப்பட்டு விடக் கூடாதே என அஞ்சுகிறேன் என்றார்கள் அதாவது உன்னுடைய வரவு ஏற்றமானதல்ல எனக் கருத்தாகும் அதற்கு பிறகு மிக்க சிரமத்துடன் லப்பைக் எனக் கூறியதும் அன்னார் மயக்கமடைந்து தமது ஒட்டகத்திலிருந்து கீழே விழுந்து விட்டார்கள் இதற்குப் பிறகும் லப்பைக் கூறியபோதெல்லாம் இவ்வாறே நிகழ்ந்து கொண்டிருந்தது இதே நிலையில் ஹஜ்ஜூ முழுவதையும் நிறைவேற்றினார்கள்.

நூல். இஹ்யா உலூமுத்தீன்.


இறுதிநாள் நெருங்கும் போது ஹாஜிகள் கூட்டம்!

- يأتي على الناس زمان يحج أغنياء الناس للنزاهة وأوساطهم للتجارة وفقراؤهم للمسألة وقراؤهم للسمعة والرياء.

உலக அழிவு நாளுக்கு முன்னால். என்னுடைய உம்மத்தின் செல்வந்தர்கள் உல்லாச பயண எண்ணத்தில் ஹஜ்ஜுக்கு செல்வார்கள். மேலும் எனது உம்மத்தின் நடுத்தர வகுப்பினர் வியாபார நோக்கத்துடன் ஹஜ்ஜுக்கு செல்வார்கள். உன்னும் உலமாக்கள் புகழுக்காகவும். பெயருக்காகவும் ஹஜ்ஜு செய்வார்கள். மேலும் ஏழைகள் யாசகம் கேட்கும் நோக்கத்துடன் அங்கு செல்வார்கள் என நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். தைலமி.  கன்சுல் உம்மால்.  ஹதீஸ் எண். 12363

இப்னு மஸ்ஊத்(ரலி)  அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்:

قال ابن مسعود: في آخر الزمان يكثر الحاج بلا سبب، يهون عليهم السفر ويبسط لهم في الرزق ويرجعون محرومين مسلوبين، يهوى بأحدهم بعيره بين الرمال والقفار وجاره مأسور إلى جنبه لا يواسيه.

கடைசி காலத்தில் ஹாஜிகளின் எண்ணிக்கை அதிகரித்துக் கொண்டே இருக்கும். அவர்களுக்கு ஹஜ்ஜுப் பயணம் மிக எளிதாகவே அமையும்.தங்குமிடம்,உணவு வசதி வாய்ப்புகள் தாராளமாகக் கிடைக்கும். ஹஜ்ஜிலிருந்து திரும்பும் போது தனக்குத் தேவையானவற்றைக் கொண்டு வருவார்கள் ;.ஆனால் பக்கத்து வீட்டுக்காரன் கைதாகி துன்பப்பட்டு உழலும் போது அந்த ஹாஜிகள் அவனுக்கு உதவவோ, அவனை மகிழ்விக்கவோ செய்யமாட்டார்கள்.

நூல். இஹ்யா உலூமுத்தீன்

"அரபு நாடுகளிலிருந்து ஹஜ்ஜுக்கு வருவோரின் மொத்த ஹாஜிகள் எண்ணிக்கையில் 15 விழுக்காடு மட்டுமே முதல் தடவையாக ஹஜ்ஜை நிறைவேற்றுகின்றனர்! (அதாவது ஹஜ்ஜுக்கு வரும் இரண்டு மில்லியன் ஹாஜிகளில் மூன்று இலட்சம் பேர் மட்டுமே முதல் தடவையாக ஹஜ்ஜு செய்கின்றனர்) மீதமுள்ள 17 இலட்சம் பேர்கள் இரண்டாவது தடவையாகவோ, ஐந்தாவது தடவையாகவோ, பத்தாவது தடவையாகவோ, நாற்பதாவது தடவையாகவோ ஹஜ்ஜு செய்கின்றனர்" என டாக்டர் அஷ்ஷய்கு கர்ளாவி அவர்கள் சில ஆண்டு களுக்கு முன்னர் தெரிவித்த கருத்தை இஸ்லாமிய உலகம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

தென் ஆசிய நாடுகளிலிருந்து வருவோரில எழுபது சதவிகிதம் பேர்கள் முதல் தடவையாக ஹஜ்;ஜுக்கு வருவோராக கணித்தாலும் மீதமுள்ள 30 சதவிகித ஹாஜிகள் ஒன்றுக்கு மேற்பட்ட பல ஹஜ்ஜுகளை நிறைவேற்றியவர்களாகவே கணிக்கலாம். இந்த வகையில் சராசரியாக ஆண்டொன்றுக்கு அதிகப்படியான ஹஜ்ஜின் மூலமாக முஸ்லிம்கள் 2000 கோடி ரூபாய்கள் (200 மில்லியன்கள்) வரை செலவிடுகின்றனர்.
அதுமட்டுமல்ல, ஆண்டொன்றுக்கு திரும்மத் திரும்ப உம்ராவுக்கு வருவோரின் எண்ணிக்கையும் இதை விட பன்மடங்காகிறது. இதையும் கணக்கிட்டால் ஆண்டு தோறும் 4000 கோடிகள் (400 மில்லியன்) வரை செலவாவதைப் பார்க்கலாம். இன்றைய நவீன இஸ்லாமிய உலகின் பிரச்சனைகள், அவசரத்தேவைகள், அழிவுகள், ஆபத்துகள், பட்டடினிச் சாவுகள், போர்கள், இஸ்லாத்தின் எதிர்ப்புச் சவால்கள் எனத் தொடரும் பல் வேறு பிரச்சனைகளுக்குத் நாம் தீர்வு காண வேண்டியதிருக்கிறது.

قال أبو نصر التمار: إن رجلاً جاء يودع بشر بن الحارث وقال: قد عزمت على الحج فتأمرني بشيء؟ فقال له: كم أعددت للنفقة؟ فقال: ألفي درهم. قال بشر: فأي شيء تبتغي بحجك؟ تزهداً أو اشتياقاً إلى البيت أو ابتغاء مرضاة الله؟ قال: ابتغاء مرضاة الله، قال: فإن أصبت مرضاة الله تعالى وأنت في منزلك وتنفق ألفي درهم وتكون على يقين من مرضاة الله تعالى أتفعل ذلك؟ قال: نعم، قال: اذهب فأعطها عشرة أنفس: مديون يقضي دينه، وفقير يرم شعثه، ومعيل يغني عياله، ومربي يتيم يفرحه، وإن قوي قلبك تعطيها واحداً فافعل فإن إدخالك السرور على قلب المسلم وإغاثة اللهفان وكشف الضر وإعانة الضعيف أفضل من مائة حجة بعد حجة الإسلام، قم فأخرجها كما أمرناك وإلا فقل لنا ما في قلبك؟ فقال: يا أبا نصر سفري أقوى في قلبي، فتبسم بشر رحمه الله وأقبل عليه وقال له: المال إذا جمع من وسخ التجارات والشبهات اقتضت النفس أن تقضي به وطراً فأظهرت الأعمال الصالحات وقد آلى الله على نفسه أن لا يقبل إلا عمل المتقين
 .
ஒரு தடைவை அறிஞர் பிஸ்ரு இப்னு ஹாரித் ரஹ்மதுல்லாஹி அலைஹி என்பாரிடம் வந்த ஒருவர், தான் சுன்னத்தான ஹஜ்ஜை நிறைவேற்ற நாடியிருப்பதாகவும்,தனக்கு உபதேசிக்குமாறும் வேண்டிக் கொண்டார். அதற்கு பிஸ்ரு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், "உம்மிடம் எவ்வளவு பணமிருக்கிறது?" எனக் கேட்டார்கள்.அந்த மனிதர் 'இரண்டாயிரம் வைத்துள்ளேன்' என்றார். மீண்டும் பிஸ்ரு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள், "உமது ஹஜ்ஜின் நோக்கமென்ன? நீர் எதை அடைய விரும்புகிறீர்?" என வினவினார்.
அதற்கவர், "உலகில் பற்றற்ற மனநிலையும், கஃபாவை பார்த்துக் கொண்டிருக்கும் வேட்கையும், அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தைப் பெறுவதும்" ஆகும் என்றார். அதற்கு பிஸ்ரு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் "உமது வீட்டிலிருந்து கொண்டே இரண்டாயிரம் திர்ஹத்தை செலவு செய்து விட்டு அல்லாஹ்வின் திருப் பொருத்தத்தையும் அவனது அருளையும் பெற வழி சொல்லவா?" எனக்கேட்டார். வந்தவர் 'ஆம்' என்றார்.அப்போது பிஸ்ரு ரஹ்மதுல்லாஹி அலைஹி அவர்கள் கூறினார்கள்.
நீர் உடனே சென்று உம்மிடமுள்ள 2000 திர்ஹங்களை தேவையுள்ள பத்து பேருக்குக் பங்கிட்டுக் கொடுப்பீராக!  மேலும் கடன்பட்டோருக்கு கடனை அடைக்க உதவுவீராக! அவர்; நிம்மதி பெறட்டும்.  துன்பத்தில்; உழலும் ஒரு ஏழையின் துயர் போக்குவீராக! அவர் வாழ்வு மலரட்டும்!  வறுமையில் வாடும் ஒரு குடும்பத்திற்கு உம் கரம் நீட்டுவீராக! அந்தக் குடும்பம் வளவாழ்வு வாழட்டும்.  ஆதரவற்ற ஓர் அனாதைக்கு உம் தோள் கொடுத்து உதவுவீராக! அதனால் அவர் கண்ணீர் நிற்கட்டும்.!  இந்த பணம் முழுவதையும் ஒரே நபருக்குக் கொடுக்க முடிந்தால் அவ்வாறே செய்வீராக!  ஏனெனில், ஒரு முஸ்லிமின் வாழ்வில் மகிழ்ச்சியை ஏற்படுத்த உன்னால் முடியுமாயின்,  ஒருவரது துக்கத்தையும் போக்க உன்னால் முடியுமாயின்,  ஒருவரது கண்ணீரைத் துடைக்க உன்னால் முடியுமாயின்,  ஒருவரது வறுமையை விரட்ட உன்னால் முடியுமாயின்,  ஒரு பலவீனனுக்கு கைகொடுத்து உதவ உன்னால் முடியுமாயின்,  அதுவே, முதல் தடவை செய்யப்படும் கடமையான ஹஜ்ஜுக்குப் பிறகு செய்யப்படும் 100 ஹஜ்ஜுகளை விட மேலானதாகும்.
எனவே, நான் கூறியவாறு சென்று அப்பணத்தைச்செலவு செய்வீராக! 

நூல்: இஹ்யாவுலூமித்தீன் பாகம்-3,

    

6 கருத்துகள்:

  1. ஆக்க பூர்வமான அற்புதமான கட்டுறை

    பதிலளிநீக்கு
  2. அல்ஹம்துலில்லாஹ் அழகான கட்டுரை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  3. அன்புடன் பரகத் பாகவி திருப்பூர்

    பதிலளிநீக்கு
  4. அல்ஹம்துலில்லாஹ் அழகான கட்டுரை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு
  5. அல்ஹம்துலில்லாஹ் அழகான கட்டுரை உங்கள் சேவை தொடர வாழ்த்துக்கள்

    பதிலளிநீக்கு