தேளுக்கும்,தேரைக்கும் உணவளித்த அல்லாஹ் அவைகளை எங்கே எப்படித் தேட வேண்டும் என்பதையும் அறிவித்துக் கொடுத்தான்
தேளுக்குறிய உணவுகளில் மிகவும் பிடித்த உணவு {நமக்கு பிரியாணியைப் போல} அதற்கு கரப்பான் பூச்சி.அதைப் பார்த்து விட்டால் அதற்குக் கொண்டாட்டம் தான். உடனே அதனை கபளிகரம் செய்து விடும்.
கரப்பான் பூச்சி நடக்கும், ஒடும். தேவைப்பட்டால் பறக்கும். ஆனால் தேள் மெதுவாக ஊர்ந்து செல்லும்.பறக்கவோ,வேகமாக ஓடவோ முடியாது. அது எப்படி கரப்பான் பூச்சியை வேட்டையாட முடியும்? என்றால், அல்லாஹ்
தேளுக்கு வசீகரம் செய்யும் ஒரு யுக்தியை அதற்கு கொடுத்திருக்கிறான்.
கரப்பான் பூச்சியைக் கண்டவுடன் கொடுக்கை மேலே தூக்கி அது நடனமாட ஆரம்பித்து
விடும். அந்த நடனத்தைப் பார்த்து கரப்பான் பூச்சி அதன் அழகிலே மயங்கி,சொக்கிப் போய் அப்படியே நின்று விடும். அழகுக்கும், நடனத்திற்கும் மயங்காதோர் இந்தப் பாரில் உண்டோ! இந்த
ஆட்டத்தைப் பார்த்து மயங்கிய அந்த கரப்பான் பூச்சியை தனது கொடுக்கால் ஒரு
போடு போட்டு மயக்க நிலையில் வைத்து அதை கொஞ்சம் கொஞ்சமாக ரசித்து சுவைத்து
உண்ணும்.
பாவத்தின் விளைவு.
பாவத்தின் விளைவு.
إنّ آدم عليه السلام خرج من الجنّة بذنبٍ واحد
وإبليس
صار خالداً في النار بذنبٍ واحد
فما يُأمِّنُكَ أن تُأخذ بالذنب الواحد ؟
!
لا تحقِرنّ ذنباً تفعله ولا تحقِرنّ معروفاً تفعله
أنت تحتاج كل شئ وانت لا تدري الموازين كيف هي
ஆதம் அலை அவர்கள் ஒரு பாவத்தால் சுவனத்திலிருந்து
வெளியானார்கள். இப்லீஸ் ஒரு பாவத்தால் நிரந்தர
நரகவாதியாகிவிட்டான்.எனவே ஒரு பாவம்தானே என்று அலட்சியத்துடன் துணிந்துவிடாதே.நீ
செய்யும் எந்த பாவத்தையும் சாதாரணமாக கருதி செய்துவிடாதே.நீ செய்யும் எந்த
நன்மையையும் சாதாரணமாக கருதி விட்டுவிடாதே.
நாளை உன் மீஸானுக்கு எதுவும் தேவையாக இருக்கலாம்.
ஒழுக்கங்களே முஸ்தஹப்புக்களை பாதுகாக்கிறது.முஸ்தஹப்புக்கள்
சுன்னத்துக்களை பாதுகாக்கிறது.சுன்னத்துக்கள் பர்ழான கடமைகளை பாதுகாக்கிறது.
கற்கள்
3 வகை.
ஆண். பெண். அலி.
ஆண் கற்கள் தட்டினால்
மணி ஓசை வரும்.
பெண் கற்கள் தட்டினால்
சிலம்பு ஒலி எழுப்பும்.
தட்டினால் ஒலி
எழும்பாத கற்கள் அலி வகை
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக