துஆ

நபி (ஸல்) அவர்கள் கற்றுக்கொடுத்த துஆ.

.عن جعفر بن محمد عن أبيه عن جده علي قال : قال لي رسول الله صلى الله عليه وسلم : يا علي إذا توضأت فقل : بسم الله اللهم أسألك تمام الوضوء وتمام الصلاة وتمام رضوانك وتمام مغفرتك

யா அல்லாஹ் உன்னிடம் பரிபூரணமான ஒழுவையும், பரிபூரணமான தொழுகையும், உனது பரிபூரணமான திருப்தியையும், உனது பரிபூரணமான மன்னிப்பையும் நான் கேட்கிறேன்.

நூல்.கன்சுல் உம்மால்.


நபி(ஸல்) அவர்கள் ஹஜ்ரத் பாத்திமா (ரலி) அவர்களுக்கு கற்றுக்கொடுத்த துஆ
 


يا حى يا قيوم ، برحمتك أستغيث أصلح لى شأني كله ، و لا تكلني إلى نفسي طرفة عين.
  என்றென்றும் உயிர் வாழ்பவனே வானம் பூமி படைப்பினங்கள் அனைத்தையும் நிலை நிறுத்துபவனே உன்னுடைய அருளின் பொருட்டால் வேண்டுகிறேன் என்னுடைய காரியங்கள் அனைத்தையும் சீராக்குவாயாக கணிமைக்கும் நேரம் கூட என் மனோ இச்சையிடம் என்னை ஒப்படைத்து விடாதே.

நூல். கன்சுல் உம்மால். ஹதீஸ் எண். 3498




நபி (ஸல்) அவர்கள் நம்மை கேட்கச் சொன்ன துஆ.


اللَّهُمَّ إِنِّي أَسْأَلُكَ فِعْلَ الْخَيْرَاتِ وَتَرْكَ الْمُنْكَرَاتِ وَحُبَّ الْمَسَاكِينِ وَأَنْ
تَغْفِرَ لِي وَتَرْحَمَنِي وَإِذَا أَرَدْتَ فِتْنَةَ قَوْمٍ فَتَوَفَّنِي غَيْرَ مَفْتُونٍ أَسْأَلُكَ حُبَّكَ وَحُبَّ مَنْ يُحِبُّكَ وَحُبَّ عَمَلٍ يُقَرِّبُ إِلَى حُبِّكَ 

யா அல்லாஹ் நான் உன்னிடம் நற்செயல்கள் செய்வதையும் தீமைகளை விடுவதையும். ஏழைகளை நேசிப்பதையும் கேட்கிறேன். நீ என்னை மன்னிப்பதையும். என் மீது அருள் பொழிவதையும் கேட்கிறேன். ஏதேனும் ஒரு கூட்டத்தாரைச் சோதனையில் ஆழ்த்தவோ. வேதனையில் பீடிக்கச் செய்யவோ நீ முடிவு செய்தால். என்னை சோதனையில் ஆழ்த்தாமல் உன்னிடம் அழைத்துக்கொள்வாயாக. யா அல்லாஹ் உன்னுடைய நேசத்தையும். உன்னை நேசிப்பவரின் நேசத்தையும். உனது நேசத்தை நெருக்கமாக்கி வைக்கும் செயலுடைய நேசத்தையும் உன்னிடம் கேட்கிறேன்.

நூல். திர்மிதி. ஹதீஸ் எண். 3159




اَ للَّهُمَّ عَافِنِيْ فِيْ بَدَنِيْ، اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ سَمْعِيْ، اَللَّهُمَّ عَافِنِيْ فِيْ بَصَرِيْ،لاَ اِلَهَ إِلاَّ أَنْتَ
   
யாஅல்லாஹ்! எனது உடலில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது செவிப்புலனில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! எனது பார்வையில் நலனை (ஆரோக்கியத்தை)த் தந்தருள்வாயாக! யாஅல்லாஹ்! வணக்கத்திற்குரிய இறைவன் உன்னைத் தவிர வேறு யாருமில்லை. 

(நூல்: அபூதாவூத்)


اللَّهُمَّ إِنِّي أَعُوذُ بِكَ مِنْ الْجُبْنِ وَأَعُوذُ بِكَ مِنْ الْبُخْلِ وَأَعُوذُ بِكَ مِنْ أَنْ أُرَدَّ إِلَى أَرْذَلِ الْعُمُرِ وَأَعُوذُ بِكَ مِنْ فِتْنَةِ الدُّنْيَا وَعَذَابِ الْقَبْرِ

 யா அல்லாஹ்! கஞ்சத்தனத்திலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் கோழைத்தனத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், இன்னும் தள்ளாத முதுமை வரை உயிர் வாழ்வதிலிருந்து உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன். உலகத்தின் குழப்பத்திலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன், கப்ருடைய வேதனையிலிருந்தும் உன்னிடம் நான் பாதுகாவல் தேடுகின்றேன்.

 (நூல்: புகாரி)
 
 
 
 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக