வியாழன், 4 செப்டம்பர், 2014

யா அல்லாஹ் நோயற்ற வாழ்வைத் தா



இன்று நாம் ஒவ்வொரு நாளும் வித விதமான கண்டுபிடிப்புகளை கண்டுபிடித்து அனுபவித்தாலும் ஒரு சில விஷயங்களை இழந்துகொண்டிருக்கிறோம் என்பதை யாராலும் மறுக்க முடியாது.
நாம் இழந்துகொண்டிருக்க கூடிய விஷயங்கள். ஒழுக்கம். கலாச்சாரம். சமய நெறி. சத்தான உணவு. கலப்பட மில்லாத உணவுகள். குடும்ப உறவுகள். மகிழ்ச்சி. சிரிப்பு. உடல் ஆரோக்கியம் இப்படி சொல்லிக்கொண்டே போகலாம். இவ்வாறு இழந்த விஷயங்களை மீண்டும் திரும்ப பெறமுடிமா என்பது சந்தேகமே.


உதாரணமாக.    ஆரோக்கியத்தை எடுத்துகொள்வோம் இன்று நம்மால் நோய் இல்லாத வாழ்வை நினைத்து பார்க்க முடியுமா ஆரோக்கியமாக வாழமுடியுமா நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு எல்லா துறையிளும் முன்னேற்றம் கண்டிருந்தாலும் நோய் உற்பத்தியாவதை தடுக்க முடியவில்லையே. இன்று ஒவ்வொரு நாளும் புதுமையான நோய்கள் ஏற்பட்டுக்கொண்டே இருக்கிறதே.

தற்போது உலகத்தையே அச்சுருத்திக்கொண்ருக்கும். "எபோலா" வைரஸ். இந்த வைரஸ் 1976ம் ஆண்டு முதலில் பரவியது. அதனால் ஆயிரக்கணக்கான மக்கள் இறந்தார்கள். இந்த வைரசை கட்டு படுத்த முடியுமே தவிர இதனை அழிக்க முடியாது. இது எயிட்சை விட 50 மடங்கு பேராபத்து தரக்கூடிய வைரஸ் ஆகும். 1976ம் ஆண்டு இந்த வைரஸ் மனிதர்களை தாக்கியவேளை தொற்றுக்கு உள்ளாகிய அனைவரும் இறந்துபோனார்கள். இதன் பின்னரே இதனை பரவிடாமல் தடுத்து, ஒரு கட்டுப்பாட்டிற்குள் கொண்டுவந்தார்கள். ஆனால் இத்தனை ஆண்டுகள் கழித்து அது மீண்டும் எவ்வாறு பரவ ஆரம்பித்துள்ளது என்பது தெரியவில்லை. அதாவது இந்த வைரஸ் ஒருவரை தாக்கினால், அவர் 7 அல்லது 8 நாட்களில் நிச்சயம் இறப்பார் என்றுசொல்லப்படுகிறது.


நோயின் பாதிப்பு பற்றி ஒரு சில ஆய்வுகள்.

இந்தியாவில் இதய நோய்களால் ஆண்டுக்கு 35 சதவீதம் பேர் (35 - 64 வயதுக்குட்பட்டோர்) இறக்கின்றனர். தவிர, வளர் இளம் குழந்தைகளின் மரணம், சிறு வயதிலேயே பூப்பெய்தல், தலை பெருத்தல், உடல் எடை அபரிதமாக அதிகரித்தல், மூளை வளர்ச்சி கோளாறுகள் ஆகியவை கடந்த 3 ஆண்டுகளில் 28 சதவீதம் அதிகரித்துள்ளதாக எச்சரித் துள்ளது உலக சுகாதார அமைப்பு.

உலகளாவிய நீரிழிவு நோய் கழகம் (International Diabetes Federation) விடுத்துள்ள அறிக்கையில் தற்போது 40.9 மில்லியனாக இருக்கும் இந்திய நீரிழிவு நோயாளிகள் எண்ணிக்கை வரும் 2025-ம் ஆண்டு 69.9 மில்லிய னாக உயரும் என்று குறிப்பிட்டுள்ளது.

கடந்த 2013-ல் உலகளாவிய மருத்துவ ஆய்வு இதழான Epidemiology சென்னையில் இருக்கும் 400 பள்ளிகளில் குழந்தைகளிடம் ஓர் ஆய்வை மேற்கொண்டது. இதில் 21.5 சதவீதம் பேருக்கு, குறிப்பாக பெரும்பாலும் உடல் எடை அதிகம் கொண்ட குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தம் இருப்பது தெரிந்தது.

இந்தியாவில் 1990-ம் ஆண்டில் மேற்கண்ட நோய்களால் ஏற்படும் இறப்பு 29 சதவீதமாக இருந்தது. இது 2008-ம் ஆண்டு 53 சதவீதமாக உயர்ந்தது. 2020-ம் ஆண்டு இது 57 சதவீதமாக உயரும்.

நோய் உண்டாக காரணம்.

ஆய்வாளர்கள் அடிப்படையாக மூன்று விஷயத்தை குறிப்பிடுகிறார்கள்.


1).உணவு.   அதாவது உணவில் கலப்படம்.மற்றும் துரித உணவு. இன்று கலப்படம் இல்லாத உணவே இல்லை என்று சொல்லும் அளவிற்கு ஆகிவிட்டது. மருந்தில் கலப்படம். மருந்து கலப்படம் என்று மருத்துவரிடம் போனால் மருத்துவர் போலி என்று சொல்லுமளவிற்கு கலப்படம். போலி அதிகமாகி விட்டது.

உலகளாவிய அளவில் உணவுக் காக பயன்படுத்தும் உப்பின் அளவில் மூன்று சதவீதத்தை குறைத்தாலே 50 சதவீதம் உயர் ரத்த அழுத்தமும், 22 சதவீதம் பக்கவாதமும், 16 சதவீதம் இதய நோய்களும் குறையும் என்கிறது உலக இதயக் கழகம் (World Heart Federation). ஆனால், துரித உணவுகளில் உப்பும் இனிப்பும் 50 சதவீதம் கூடுதலாக இருக்கின்றன. கூடவே, சாயமும், ரசாயனமும். அதில்தான் மக்கள் மயங்கி இருக்கிறார்கள் எவ்வாறு நோய் குறையும்.

2).தூக்கமின்மை.  அதாவது தூக்கம் குறைந்ததும் நோய்க்கு காரணம். செல்போன். கம்யூட்டர். டி.வி போன்றவை மனிதனின் தூக்கத்தை இன்று  தொலைத்துவிட்டன.

3). நோய் கிரிமிகளை அழிக்ககூடிய பூச்சியினங்கள். பறவைகள்.பெரிய வன விலங்குகள் குறைந்தது ஒரு காரணமாம்.


இஸ்லாமிய பார்வையில் நோய்.


இஸ்லாமிய பார்வையில் நோய் ஏற்பட காரணம்.


1). உலகத்தில் நோய் அதிகமாக காரணம் பாவங்கள்.


قال النبي صلى الله عليه وسلمولا ظهرت الفاحشة الا سلط الله عليهم الموت

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அருவருப்பான பாவங்கள் (விபச்சாரம். ஓரினச்சேர்க்கை) வெளிப்பட்டால் அல்லாஹ் அந்த சமுகத்தின் மீது மரணத்தை சாட்டிவிடுவான்,
நூல். தப்ஸீர் குர்துபி.

2). பாவங்களை மன்னிக்க அல்லாஹ் நோயை கொடுக்கலாம்.

وروي أنه لما نزل قوله تعالى: " من يعمل سوءاً يجز به " قال أبو بكر الصديق رضي الله تعالى عنه: كيف الفرح بعد هذه الآية؟ فقال رسول الله صلى الله عليه وسلم: " غفر الله لك يا أبا بكر، ألست تمرض؟ ألست يصيبك الأذى؟ ألست تحزن؟ فهذا مما تجزون به " يعني أن جميع ما يصيبك يكون كفارة لذنوبك.

من يعمل سوءاً يجز به
.
என்ற ஆயத் இறங்கிய போது அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் இந்த ஆயத் இறங்கிய பிறகு எவ்வாறு மகிழ்ச்சியாக இருக்கமுடியும்  என்று சொன்னபோது நபி (ஸல்) அவர்கள் யா அபா பக்கர். அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக உங்களை அடையக்கூடிய நோய். கவலை மற்றும் வேதனை இவைகள் எல்லாம் பாவத்திற்கு பரிகாரமாக ஆகிவிடும்.

நூல். தப்ஸீர் இப்னு கஸீர்.

3) மனிதனை சோதிக்க அல்லாஹ் நோயை கொடுப்பான்.

அய்யூப் (அலை) அவர்களுக்கு 18 ஆண்டுகள் நோயை கொடுத்தது போல.

நோய் இல்லாமல் இருப்பதும் நல்லதல்ல.

قال بعضهم: إنما قال فرعون: أنا ربكم الأعلى لطول العافية، لأنه لبث أربعمائة سنة لم يصدع له رأس ولم يحم له جسم ولم يضرب عليه عرق
فادعى الربوبية - لعنه الله - ولو أخذته الشقيقة يوماً لشغلته عن الفضول فضلاً عن دعوى الربوبية.

நான் தான் மிகப்பெரிய கடவுள் என்று சொன்ன பிர் அவ்னுக்கு தலை வலியோ. காய்ச்சலோ வேறு எந்த சிறு நோய் கூட ஏற்பட்டதில்லை.

நூல். இஹ்யா உலூமுத்தீன்.

أن عمار بن ياسر تزوج امرأة فلم تكن تمرض فطلقها،

அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்கள் ஒரு திருமணம் செய்தார்கள். அந்த பெண்ணிற்கு எந்த நோயும் ஏற்படவில்லை. இந்த பெண் அல்லாஹ்வுடைய அன்பிற்குரியவளாக இல்லாமல் இருக்கலாம் என்று பயந்து அந்த பெண்ணை அம்மார் (ரலி) அவர்கள் தலாக் விட்டு விட்டார்கள்.

நூல். இஹ்யா

وأن النبي صلى الله عليه وسلم عرض عليه امرأة فحكي من وصفها حتى هم أن يتزوجها، فقيل: وإنها ما مرضت قط، فقال: " لا حاجة لي فيها "

.நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு பெண்ணை திருமணம் செய்வதற்காக பெண் பார்க்கப்பட்டது. அந்த பெண்ணைப்பற்றி சொல்லும் போது அந்த பெண்ணுக்கு எந்த விதமான நோயும் ஏற்பட்டதில்லை என்று சொன்னதும் நபி (ஸல்) அவர்கள் அந்த பெண்ணை திருமணம் செய்ய மறுத்துவிட்டார்கள்.

நூல். இஹ்யா.

நோய்க்கு மருந்து பார்ப்பது நபி வழி.

காரணம்
மருந்து இல்லாத நோயே இல்லை.

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا أَنْزَلَ اللَّهُ دَاءً إِلَّا أَنْزَلَ لَهُ شِفَاءً

அல்லாஹ் எந்த வியாதியையும் இறக்க வில்லை.அதற்கு நிவார ணத்தையும் இறக்கியே தவிர என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.,

நூல்.  புகாரி .5678

وعن علي قال : بينا رسول الله صلى الله عليه وسلم ذات ليلة يصلي فوضع يده على الأرض فلدغته عقرب فناولها رسول الله صلى الله عليه وسلم بنعله فقتلها فلما انصرف قال : " لعن الله العقرب ما تدع مصليا ولا غيره أو نبيا وغيره " ثم دعا بملح وماء فجعله في إناء ثم جعل يصبه على إصبعه حيث لدغته ويمسحها ويعوذها بالمعوذتين . رواهما البيهقي في شعب الإيمان

ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தொழுகை முடித்துவிட்டு தங்களுடைய கையை தரையில் வைத்தார்கள். அப்போது அங்கிருந்த ஒரு தேள் நபி (ஸல்) அவர்களை கொட்டியது. உடனே தன் அருகில் இருந்த செருப்பால் அதை அடித்து விட்டு தேளின் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும் அது தொழுக கூடியவரைக் கூட விடவில்லை என்று கூறிவிட்டு ஒரு பாத்திரத்தில் தண்ணீரும் .உப்பும் கொண்டு வரச்சொல்லி கடித்த இடத்தில் ஒத்தனமிட்டார்கள் மேலும் சூரத்துன்னாஸ். சூரத்துல் ஃபலக். ஆகிய இரண்டு சூராக்களையும் ஓதினார்கள்.

நூல். மிஷ்காத்.


 நோய்க்கு மருந்து தேடுவதை அல்லாஹ் விரும்புகிறான்.


عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا سُئِلَ اللَّهُ شَيْئًا أَحَبَّ إِلَيْهِ مِنْ الْعَافِيَةِ

அல்லாஹ்விடம் கேட்கப்படும் பிராத்தனைகளில் நற்சுகத்தைத் தவிர மிகவும் அவனுக்குப் பிரியமான பிரார்த்தனை வேறு எதுவும் இல்லை.

நூல். திர்மிதி 3548

وَاذْكُرْ عَبْدَنَا أَيُّوبَ إِذْ نَادَى رَبَّهُ أَنِّي مَسَّنِيَ الشَّيْطَانُ بِنُصْبٍ وَعَذَابٍ . ارْكُضْ بِرِجْلِكَ هَذَا مُغْتَسَلٌ بَارِدٌ وَشَرَابٌ

நபியே நம்முடைய அடியார் அய்யூபை நீர் நினைவு கூர்வீராக. நிச்சயமாக ஷைத்தான் என்னைத் துன்பத்தையும். வேதனையும் கொண்டு பிடித்துவிட்டான் என்று கூறி தன்னுடைய ரப்பை அழைத்த போது. உம்முடைய காலால் (நிலத்தில்) அடியும் (என நாம் கூறினோம். அடித்ததும் ஒரு நீரூற்று உண்டானது.) இதோ குளிர்ந்த குளிக்குமிடமும். குடிபானமும் இருக்கின்றன (என்று கூறினோம் அதனால் அவரது நோய் குணமாகியது.)

அல்குர் ஆன். 38- 41.42

அல்லாஹ் நாடியிருந்தால் அய்யூப் அலை அவர்களுக்கு ஏற்பட்ட நோயை எந்த காரணமும் இல்லாமல் குணமாக்கி இருக்க முடியும் ஆனால் அவ்வாறு செய்யாமல் குளிர்ந்த நீரை வர வைத்து அதை மருந்தாக ஆக்கி குணமளித்தான் என்றால் அல்லாஹ் ஏதாவது ஒரு வகையில் காரணத்தை விரும்புகிறான் என்று தெரிகிறது..

وذكر بعض العلماء في الإسرائيليات أن موسى عليه السلام اعتل بعلة فدخل عليه بنو إسرائيل فعرفوا علته؛ فقالوا له: لو تداويت بكذا لبرئت، فقال: لا أتداوى حتى يعافيني هو من غير دواء، فطالت علته فقالوا له: إن دواء هذه العلة معروف مجرب، وإنا نتداوى به فنبرأ، فقال: لا أتداوى، وأقامت علته، فأوحى الله تعالى إليه: وعزتي وجلالي لا أبرأتك حتى تتداوى بما ذكروه لك، فقال لهم: داووني بما ذكرتم، فداووه فبرأ، فأوجس في نفسه من ذلك، فأوحى الله تعالى إليه: أردت أن تبطل حكمتي بتوكلك على من أودع العقاقير منافع الأشياء غيري؟.

மூஸா (அலை) அவர்களுக்கு உடல் நலமில்லாமல் ஆனபோது பனீ இஸ்ராயிலில் உள்ள உலமாக்கள் மூஸா நபியை நோய் விசாரிக்க சென்றார்கள் அப்போது அந்த நோயை விசாரித்து இந்த நோய்க்கு இன்ன மருத்துவம் பார்த்தால் குணமாகிவிடும். அந்த மருத்துவத்தை நாங்கள் பார்த்து எங்களுக்கு குணம் கிடைத்துயிருக்கிறது எனவே நீங்களும் அந்த மருத்துவத்தை பார்க்கலாமே என்று அந்த உலமாக்கள் சொன்னபோது மூஸா நபி மறுத்துவிட்டார்கள். நோயும் குணமாகவில்லை அப்போது அல்லாஹ் மூஸா நபிக்கு வஹீ அறிவித்தான் நீங்கள் அவர்கள் சொன்ன மருந்தை சாப்பிடாத வரை நோய் குணமாகாது .பிறகு அந்த மருந்தை மூஸா நபி சாப்பிட்ட பிறகே நோய் குணமானது,

நூல். இஹ்யா.

எங்கிருந்தும் மருந்து எடுக்கலாம்.

போரில் ஸஹாபியொருவர் காயமடைந்தார். அவருடைய காயத்திலிருந்து வெளியான இரத்தத்தை நிறுத்துவதற்கு எவ்வளவு முயற்சி செய்தும் ஸஹாபாக்களால் முடியவில்லை.அப்பொழுது அங்கு வந்த ஹஸ்ஸான் பின் ஸாபித (ரலி) அவர்கள் கற்புறத்தை கொண்டுவரச்சொல்லி அதனை காயத்தின் மீது வைத்தார்கள் இரத்தம் நின்று விட்டது. பிறகு இந்த செய்தி நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கப்பட்டது. அப்போது நபியவர்கள் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் இந்த மருத்துவத்தை எங்கிருந்து கற்றுக்கொண்டீர்கள் என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஒரு கவிதையிலிருந்து அதனை தெரிந்துகொண்டேன் என்று கூறி அந்த  
கவிதையை படித்துகாட்டினார்கள்.

فطفقت امسح مقلتي بخدها     اذ عادة الكافور امساك الدم

அவள் என்னை வெறுத்த போது அவளிடம் நான் சேர்ந்திருந்த இரவை சிந்தித்தேன். அப்போது என்னுடைய விழியின் கண்ணீர் குருதி போன்று ஓடியது . என் விழியை அவளுடைய கன்னத்தில் வைத்து தேய்க்க ஆரம்பித்தேன் .ஏனெனில் கற்பூரத்தின் வழக்கம் இரத்தத்தை தடுத்து நிறுத்துவதாகும்.  ان في الشعر لحكمة  

இந்த கவிதையில் ஞானம் உண்டு என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல். காமிலுத் தாரீஹ்


உடல் ஆரோக்கியத்தை அல்லாஹ்விடம் கேட்பதும் நல்லோர்களின் தன்மை. அதை அல்லாஹ்வும் விரும்புகிறான்.

وحكي أن يوسف عليه السلام لما قال: " السجن أحب إلي " أوحى الله إليه " يا يوسف ! أنت حبست نفسك حيث قلت السجن أحب إلي، ولو قلت العافية أحب إلي لعوفيت ".

அல்லாஹ் யூசுப் நபிக்கு வஹி அறிவித்தான். யூசுபே  நீங்கள் எனக்கு சிறைச்சாலை பிரியமானது என்று கூறியதால்தான் சிறையில் அடைக்கப்பட்டீர்கள். நீங்கள் ஆரோக்கியம் எனக்கு விருப்பம் என்று கூறியிருந்தால் ஆரோக்கியம் கொடுக்கப்பட்டிருப்பீர்கள் என்று அல்லாஹ் சொன்னான்.

நூல். தப்ஸீர் குர்துபி




أَنَّ مُعَاذَ بْنَ رِفَاعَةَ أَخْبَرَهُ عَنْ أَبِيهِ قَالَ
قَامَ أَبُو بَكْرٍ الصِّدِّيقُ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَامَ الْأَوَّلِ عَلَى الْمِنْبَرِ ثُمَّ بَكَى فَقَالَ اسْأَلُوا اللَّهَ الْعَفْوَ وَالْعَافِيَةَ فَإِنَّ أَحَدًا لَمْ يُعْطَ بَعْدَ الْيَقِينِ خَيْرًا مِنْ الْعَافِيَةِ

இறைத்தூதர் [ஸல்] அவர்கள் ஒரு முறை மிம்பரில் நின்றார்கள். [உணர்வுப்பூர்வமாக பிரசங்கம் செய்தார்கள்] பிறகு அழுது கொண்டே கூறினார்கள் ; அல்லாஹ்விடம் சுகமும்,மன்னிப்பும் கிடைக்கப் பிரார்த்தனை செய்யுங்கள்.ஏனெனில் நிச்சயமாக ஈமானுக்குப் பிறகு சுகத்தை விட சிறந்த [பாக்கியத்] தை எவரும் வழங்கப்பட்டதில்லை.

நூல் . திர்மிதி ; 3557.         முஸ்னத் அஹ்மத். 47


عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ
أَنَّ رَجُلًا جَاءَ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ قَالَ سَلْ رَبَّكَ الْعَافِيَةَ وَالْمُعَافَاةَ فِي الدُّنْيَا وَالْآخِرَةِ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّانِي فَقَالَ يَا رَسُولَ اللَّهِ أَيُّ الدُّعَاءِ أَفْضَلُ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ ثُمَّ أَتَاهُ فِي الْيَوْمِ الثَّالِثِ فَقَالَ لَهُ مِثْلَ ذَلِكَ قَالَ فَإِذَا أُعْطِيتَ الْعَافِيَةَ فِي الدُّنْيَا وَأُعْطِيتَهَا فِي الْآخِرَةِ فَقَدْ أَفْلَحْتَ

நபிகள் நாயகம் [ஸல்] அவர்களிடம் [அல்லாஹ்விடம் கேட்பதற்கு] எந்தப் பிரார்த்தனை சிறந்தது? எனக்கேட்டு ஒருவர் வந்தார். அவருக்கு அண்ணல் பெருமானார் [ஸல்] அவர்கள் கூறினார்கள் ; இம்மையிலும்,மறுமையிலும் உனக்கு சுகம் கிடைக்க உனது இறைவனிடம் பிரார்த்தனை செய் என்றார்கள்.அவர் இரண்டாவது நாளும் மூன்றாவது நாளும் வந்து இதே கேள்வியைக் கேட்ட போதும் இதே பதிலைத்தான் திரும்பத் திரும்ப அவருக்கு அண்ணலார் [ஸல்] அவர்கள் கூறி உனக்கு இம்மையிலும், மறுமையிலும் சுகம் வழங்கப்பட்டு விட்டால் நீ வெற்றி பெற்று விட்டாய் என்று சொன்னார்கள்.

நூல். திர்மிதி ; 3512

தினமும் காலை,மாலை நபி [ஸல்] அவர்கள் செய்த பிரார்த்தனை.

قَالَ حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِي بَكْرَةَ أَنَّهُ قَالَ لِأَبِيهِ
يَا أَبَتِ إِنِّي أَسْمَعُكَ تَدْعُو كُلَّ غَدَاةٍ اللَّهُمَّ عَافِنِي فِي بَدَنِي اللَّهُمَّ عَافِنِي فِي سَمْعِي اللَّهُمَّ عَافِنِي فِي بَصَرِي لَا إِلَهَ إِلَّا أَنْتَ تُعِيدُهَا ثَلَاثًا حِينَ تُصْبِحُ وَثَلَاثًا حِينَ تُمْسِي فَقَالَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَدْعُو بِهِنَّ فَأَنَا أُحِبُّ أَنْ أَسْتَنَّ بِسُنَّتِهِ

யா அல்லாஹ்! எனக்கு உடலில் ஆரோக்கியத்தை அளிப்பாயாக! எனது செவியில் ஆரோக்கியத்தை வழங்குவாயாக!எனது பார்வையில் சுகத்தைத் தருவாயாக!இந்த துஆவை மூன்று முறை ஓதுவார்கள்.

நூல்.அபூதாவூது 5090

وأخرج ابن أبي شيبة عن عائشة قالت : لو علمت أي ليلة القدر كان أكثر دعائي فيها أسأل الله العفو والعافية .

லைலத்துல் கத்ரு எந்த இரவென்று உறுதியாக தெரிந்தால் அவ்விரவில் அல்லாஹ்விடம் மன்னிப்பையும். ஆரோக்கியத்தையும் கேட்பேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள்.

நூல். பைஹகீ. ஹதீஸ் எண். 3547




2 கருத்துகள்:

  1. அற்புதமான கட்டுறை. ஆழமான செய்திகள்

    பதிலளிநீக்கு
  2. Emperor Casino | Shootercasino
    Enjoy the full game library with free play at 제왕카지노 Shootercasino! Featuring more than 1600 slots, aces and deccasino more than 4000 unique games to 바카라 choose from.

    பதிலளிநீக்கு