புதன், 10 ஜூன், 2015

குர்பானி அகீகாவின் தெளிவான சட்டங்கள்


  1. குர்பானி என்றால் என்ன ?
குர்பானி என்றால் தியாகம் செய்தல். நெருங்குதல் என்று பொருள். நபி இப்ராஹிம் (அலை) அவர்களின் தியாகங்களை நினைவு கூர்ந்து அல்லாஹ் நமக்கு அளித்துள்ள செல்வங்களுக்கு நன்றி செலுத்தும் வகையில் அல்லாஹ்வின் நெருக்கத்தைத் தேடி தூய எண்ணத்துடன் பிராணிகளை அறுக்கும் அற்புதக்கடமைதான் குர்பானி என்பது.
ஹிஜ்ரி 2-ம் வருடம் குர்பானி கடமையாக்கப்பட்டது. ஹனபி மத்ஹபின் படி குர்பானி கொடுத்தல் வாஜிபாகும். இமாம் ஷாபிஈ அவர்களிடத்தில் குர்பானி கொடுத்தல் சுன்னத்தே முஅக்கதாவாகும்.
துல்ஹஜ் மாதம் 10ம் நாளாகிய பெருநாள் அன்று காலை சூரியன் ஈட்டியின் அளவு வானத்தில் உயர்ந்ததிலிருந்து ஹனபி மத்ஹப் படி துல்ஹஜ் பிறை 12.ம் நாள் சூரியன் மறையும் வரை..  ஷாபி மத்ஹப் படி துல்ஹஜ் பிறை  13 ம் நாள் சூரியன் மறைவதற்குள் அல்லாஹ்விற்காக ஆடு, மாடு, ஒட்டகங்களை அறுத்து பலியிடுவதற்கு குர்பானிஎன்று பெயர். இதே பொருளில் தான் உழ்ஹிய்யாஎன்ற சொல் பயன்படுத்தப்படுகின்றது.

فَصَلِّ لِرَبِّكَ وَانْحَرْ

(நபியே) உம் இறைவனை தொழுது குர்பானியும் கொடுப்பீராக !
அல் குர்ஆன் 108:3

என்று அல்லாஹுதஆலா அல்குர்ஆனில் கூறுகின்றான்.

  1. குர்பானியின் முக்கியத்துவம்
பல நாட்கள் சாப்பிட வசதியில்லாத நிலையில் இருந்த நம்முடைய நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்ந்து குர்பானி கொடுத்ததாக ஹதீஸில் வந்துள்ளது.

وعن عبد الله بن عمر رضي الله عنهما قال: أقام النبي صلى الله عليه وسلم بالمدينة عشر سنين يضحي. رواه أحمد والترمذي وقال: حديث حسن (4) .

நபி (ஸல்) அவர்கள் மதினாவில் தங்கிய பத்து ஆண்டுகளும் குர்பானி கொடுத்தார்கள் என்று அப்துல்லா இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

நூல்.திர்மிதி. அஹ்மத்.


عَنْ عَائِشَةَ، أَنَّ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: مَا عَمِلَ آدَمِيٌّ مِنْ عَمَلٍ يَوْمَ النَّحْرِ أَحَبَّ إِلَى اللهِ مِنْ إِهْرَاقِ الدَّمِ، إِنَّهُ لَيَأْتِي يَوْمَ القِيَامَةِ بِقُرُونِهَا وَأَشْعَارِهَا وَأَظْلاَفِهَا، وَأَنَّ الدَّمَ لَيَقَعُ مِنَ اللهِ بِمَكَانٍ قَبْلَ أَنْ يَقَعَ مِنَ الأَرْضِ، فَطِيبُوا بِهَا نَفْسًا.

ஈதுல் அழ்ஹாவுடைய நாளில் மனிதன் செய்கின்ற நற்செயல்களில் இறைவனுக்கு விருப்பமானது குர்பானி கொடுப்பதாகும்நிச்சயமாக குர்பானி அதன் முடிகள்கொம்புகள்குளம்புகளுடன் கியாமத் நாளில் குர்பானி கொடுத்தவனைத் தேடி வருகிறதுஅதன் இரத்தம் பூமியில் விழுவதற்கு முன்னர் அல்லாஹ்வை அடைந்து விடுகிறது.“

அறிவிப்பவர் : ஆயிஷா ரலியல்லாஹு அன்ஹா
நூல் : திர்மிதி. இப்னு மாஜா. 3126

وَيُرْوَى عَنْ رَسُولِ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ: فِي الأُضْحِيَّةِ لِصَاحِبِهَا بِكُلِّ شَعَرَةٍ حَسَنَةٌ وَيُرْوَى بِقُرُونِهَا.

குர்பானி கொடுக்கப்படுகின்ற பிராணிகளின் ஒவ்வொரு ரோமத்திற்கு(ப் பகரமாகஒரு நன்மையை அல்லாஹ் வழங்குகிறான்.
 (நூல் :திர்மிதி.

عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ لَهُ سَعَةٌ وَلَمْ يُضَحِّ فَلَا يَقْرَبَنَّ مُصَلَّانَا

யார் குர்பானி கொடுக்க சக்தியிருந்தும் குர்பானி கொடுக்கவில்லையோ அவர் நம்முடைய ஈத்காவிற்கு அருகிலும் வரவேண்டாம் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். என்று அபூஹூரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

நூல். இப்னு மாஜா. 3123


لَنْ يَنَالَ اللَّهَ لُحُومُهَا وَلَا دِمَاؤُهَا وَلَكِنْ يَنَالُهُ التَّقْوَى مِنْكُمْ كَذَلِكَ سَخَّرَهَا لَكُمْ لِتُكَبِّرُوا اللَّهَ عَلَى مَا هَدَاكُمْ وَبَشِّرِ الْمُحْسِنِينَ

குர்பானி பிராணியின் மாமிசங்களோ அதன் உதிரங்களோ ஒருபோதும் இறைவனை அடைவதில்லை என்றாலும் உங்களின் இறையச்சம் தான் அவனை அடையும் –

அல் குர் ஆன். 22:37.





  1. குர்பானி கொடுப்பதற்கு ஒருவற்கு என்ன தகுதி வேண்டும் , அல்லது யாரெல்லாம் குர்பானி கொடுக்கலாம் ?

بِأَنْ مَلَك مِائَتَيْ دِرْهَمٍ أَوْ عَرْضًا يُسَاوِيهَا غَيْرَ مَسْكَنِهِ وَثِيَابِ اللُّبْسِ أَوْ مَتَاعٍ يَحْتَاجُهُ إلَى أَنْ يَذْبَحَ الْأُضْحِيَّةَ وَلَوْ لَهُ عَقَارٌ يَسْتَغِلُّهُ فَقِيلَ تَلْزَمُ لَوْ قِيمَتُهُ نِصَابًا، وَقِيلَ لَوْ يَدْخُلُ مِنْهُ قُوتُ سَنَةٍ تَلْزَمُ، وَقِيلَ قُوتُ شَهْرٍ، فَمَتَى فَضَلَ نِصَابٌ تَلْزَمُهُ. وَلَوْ الْعَقَارُ وَقْفًا، فَإِنْ وَجَبَ لَهُ فِي أَيَّامِهَا نِصَابٌ تَلْزَمُ، وَصَاحِبُ الثِّيَابِ الْأَرْبَعَةِ لَوْ سَاوَى الرَّابِعُ نِصَابًا غِنًى وَثَلَاثَةً فَلَا، لِأَنَّ أَحَدَهَا لِلْبِذْلَةِ وَالْآخَرُ لِلْمِهْنَةِ وَالثَّالِثُ لِلْجَمْعِ وَالْوَفْدِ وَالْأَعْيَادِ، وَالْمَرْأَةُ مُوسِرَةٌ بِالْمُعَجَّلِ لَوْ الزَّوْجُ مَلِيًّا وَبِالْمُؤَجَّلِ لَا، وَبِدَارٍ تَسْكُنُهَا مَعَ الزَّوْجِ إنْ قَدَرَ عَلَى الْإِسْكَانِ.
4.      لَهُ مَالٌ كَثِيرٌ غَائِبٌ فِي يَدِ مُضَارِبِهِ أَوْ شَرِيكِهِ وَمَعَهُ مِنْ الْحَجَرَيْنِ أَوْ مَتَاعِ الْبَيْتِ مَا يُضَحِّي بِهِ تَلْزَم

இருநூறு திர்ஹம் அதாவது ஏறத்தாழ 612.5 கிராம் வெள்ளியின் கிரயத்திற்கு பெறுமான பொருளுக்கு குடியிருக்கும் வீடுஅணியும் ஆடைகடன்கள் போக (எந்தப் பொருளாக இருந்தாலும்நிலமாக இருந்தாலும்கால்நடையாக இருந்தாலும்இருந்து அவன் என்பது கிலோ மீட்டர் பிரயாணம் செல்லாமல் ஊரில் தங்கியிருந்தால் அவன் மீது குர்பானி வாஜிபாகும். (பெண்ணாக இருந்தாலும் சரிசிறியவனாக இருந்தாலும் சரி)

நூல் : ரத்துல் முக்தார்பாகம் - 05, பக்கம் – 273.

குர்பானி கொடுக்க வசதியற்றவர்கள் குர்பானி கொடுப்பதாக எண்ணிக் கொண்டு கோழிசேவலை அறுப்பது மக்ரூஹ்.

நூல் : ஆலம்கீரிகுலாஸா பக்கம் – 332

குர்பானி கொடுப்பவர் துல் ஹஜ் பிறை ஒன்றில் இருந்து குர்பானி கொடுக்கும் வரை நகம். முடியை வெட்டாமல் இருக்க வேண்டும்.

عَنْ أُمِّ سَلَمَةَ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «إِذَا رَأَيْتُمْ هِلَالَ ذِي الْحِجَّةِ، وَأَرَادَ أَحَدُكُمْ أَنْ يُضَحِّيَ، فَلْيُمْسِكْ عَنْ شَعْرِهِ وَأَظْفَارِهِ»،

நீங்கள் துல்ஹஜ் பிறையைக் கண்டு, உங்களில் ஒருவர் குர்பானி கொடுக்க எண்ணினால், அவர் தமது முடியையும் நகங்களையும் அகற்றாமல் இருக்கட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு ஸலமா (ரலி)
நூற்கள்: முஸ்லிம் (3999), நஸாயீ (4285)


  1. குர்பானிக்காக என்னென்ன பிராணிகளை கொடுக்கலாம் ?
وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ

அல்லாஹ் மேலும் கூறுகிறான். 'எனவே நாம் ஒரு மகத்தான பலியைக் கொண்டு அவருக்கு பகரமாக்கினோம்'

அல்-குர்ஆன் 37:107

عَنْ عَلِيٍّ، رَضِيَ اللَّهُ عَنْهُ: {وَفَدَيْنَاهُ بِذِبْحٍ عَظِيمٍ} قَالَ: بِكَبْشٍ أَبْيَضَ أَعْيَنَ أَقْرَنَ،
عَن الْحسن قَالَ: كَانَ اسْم كَبْش إِبْرَاهِيم
جرير

ஹஜ்ரத் இப்றாகிம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் அல்லாஹ் அனுப்பி வைத்த செம்மறி ஆட்டை குர்பானி கொடுத்தார்கள்.
அந்த ஆட்டின் பெயர். ஜரீர் என்பதாகும்.

நூல். தப்ஸீர் குர்துபி

குர்பானி பிராணிகள் நல்ல திடகாத்திரமானதாகவும், ஆரோக்கியமானதாகவும் இருக்க வேண்டும். பொதுவாக எந்தக் குறையும் இல்லாததாக இருக்க வேண்டும்.

عَنِ البَرَاءِ بْنِ عَازِبٍ، رَفَعَهُ قَالَ: لاَ يُضَحَّى بِالعَرْجَاءِ بَيِّنٌ ظَلَعُهَا، وَلاَ بِالعَوْرَاءِ بَيِّنٌ عَوَرُهَا، وَلاَ بِالمَرِيضَةِ بَيِّنٌ مَرَضُهَا، وَلاَ بِالعَجْفَاءِ الَّتِي لاَ تُنْقِي.

தெளிவாகத் தெரியும் நொண்டி, தெளிவாகத் தெரியும் கண்பார்வைக் குறைவு, தெளிவாகத் தெரியும் நோய், எலும்பில் சதைப்பற்று இல்லாத மெலிவு ஆகிய குறைபாடுகளுடையவற்றைக் குர்பானி கொடுக்கக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: பரா (ரலி),

நூல்கள்: திர்மிதி (1530), அபூதாவூத், நஸயீ, இப்னுமாஜா (3144).

عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ: أَمَرَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ نَسْتَشْرِفَ العَيْنَ وَالأُذُنَ، وَأَنْ لاَ نُضَحِّيَ بِمُقَابَلَةٍ، وَلاَ مُدَابَرَةٍ، وَلاَ شَرْقَاءَ، وَلاَ خَرْقَاءَ.

பிராணிகளின் கண்களையும், காதுகளையும், கவனித்துத் தேர்வு செய்யுமாறு நபி(ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். சிறிதளவு காது வெட்டப்பட்டவை, காது கிழிக்கப்பட்டவை, காதில் துவாரமிடப்பட்டவை ஆகியவற்றைக் குர்பானி கொடுக்கக்கூடாது என்று நபி(ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (அறிவிப்பவர்: அலி(ரலி),

ஆதார நூற்கள்: திர்மிதீ 1532,

وَلَا تَجُوزُ الْعَمْيَاءُ وَالْعَوْرَاءُ الْبَيِّنُ عَوَرُهَا، وَالْعَرْجَاءُ الْبَيِّنُ عَرَجُهَا وَهِيَ الَّتِي لَا تَقْدِرُ أَنْ تَمْشِيَ بِرِجْلِهَا إلَى الْمَنْسَكِ، وَالْمَرِيضَةُ الْبَيِّنُ مَرَضُهَا، وَمَقْطُوعَةُ الْأُذُنَيْنِ وَالْأَلْيَةِ وَالذَّنَبِ بِالْكُلِّيَّةِ، وَاَلَّتِي لَا أُذُنَ لَهَا فِي الْخِلْقَةِ، وَتُجْزِئُ السَّكَّاءُ وَهِيَ صَغِيرَةُ الْأُذُنِ فَلَا تَجُوزُ مَقْطُوعَةُ إحْدَى الْأُذُنَيْنِ بِكَمَالِهَا وَاَلَّتِي لَهَا إذْنٌ

குருடானவை, அறவே நடக்க முடியாதவை காதுகள் துண்டிக்கப்பட்டவை, காதுகள் அறவே இல்லாதவை,வால், பித்தட்டு துண்டிக்கப்பட்டவை, மேயத் தெரியாதவை, மூக்கு துண்டிக்கப்பட்டவை, மடி துண்டிக்கப்பட்டவை, கன்றுக்கு பால் கொடுக்க முடியாதவை, பால் வற்றியவை, நாக்கு இல்லாதவை,நஜீஸைத்தவிர மற்றதை சாப்பிடாதவை ஒரு கால் துண்டிக்கப்பட்டவை ஆகியன குர்பானி கொடுக்கக்கூடாது.
காதின் பிற்பகுதி துண்டிக்கப்பட்டவைகளும், காதின் ஓரம் துண்டிக்கப்பட்டவைகளும், காதில் ஓட்டை உள்ளவைகளும், காது கிழிக்கப்பட்டவைகளும் குர்பானி கொடுப்பது  மக்ரூஹ்.

நூல் : துர்ருல் முக்தார்.  ஆலம்கீரி, பக்கம் - 330

  1. பிராணி ஆண். பெண் நிலை பற்றி வயது வரம்பு என்ன?

உண்பதற்கு ஆகுமான பிராணிகளிலிருந்து ஆடு, மாடு, ஒட்டகம் ஆகியவற்றைத்தான் குர்பானியாக கொடுக்க முடியும். ஐந்து வயது நிறைந்த ஒட்டகமும், இரண்டு வயது நிறைந்த மாடு, வெள்ளாடும், ஒரு வயது நிறைந்த அல்லது முன்பற்கள் விழுந்த செம்மறி ஆடும்.ஆறு மாத செம்மறி ஆடு பார்ப்பதற்கு கொழுத்ததாக இருந்தால் குர்பானி கொடுப்பதற்குத் தகுதியானவையாகும். இதற்குக் குறைந்த வயதுள்ள பிராணிகளை குர்பானி கொடுப்பது கூடாது. ஏழு நபர்களுக்காக ஓர் ஒட்டகத்தையோ அல்லது ஓர் மாட்டையோ குர்பானி கொடுக்கலாம். ஆனால் ஓர் ஆட்டை ஒரு நபருக்காக மட்டுமே குர்பானி கொடுக்க வேண்டும். ஏழு நபர்கள் சேர்ந்து ஒரு ஒட்டகத்தையோ அல்லது மாட்டையோ குர்பானி கொடுப்பதை விட தனி நபருக்காக ஒரு ஒட்டகம் அல்லது  மாடு  அல்லது  ஆடு  கொடுப்பது  சிறந்தது.

எவற்றை குர்பானி கொடுக்கலாம்?

செம்மறி ஆடுவெள்ளாடுபசுகாளைஎருமைஒட்டகம் போன்றவற்றை குர்பானி கொடுக்கலாம்ஆடு,மாடுஓட்டகம் ஆகிய இம்மூன்று வகைகளும் காட்டில் வசிப்பவைகளாக இருந்தால் குர்பானி கொடுப்பது கூடாது.
நூல் : அலம்கீரிபக்கம் 329

வெள்ளாடு ஒரு வருடமும்செம்மறியாடு ஆறு மாதத்திலேயே ஒரு வருட வெள்ளாட்டைப் போன்று வளர்ந்து இருந்தாலும்மாடு இரண்டு வருடம் பூர்த்தியானதும்ஒட்டகம் ஐந்து வருடம் பூர்த்தியானதும் அதற்கு மேல் உள்ளவைகளையும் குர்பானி கொடுக்க வேண்டும். ஆடு ஒரு நபருக்காகவும்மாடு ஒட்டகம் ஏழு நபருக்கோ அல்லது அதைவிடக் குறைந்தவர்களுக்காகவோ கொடுக்கலாம்ஆனால் ஏழு பேர்களும் அல்லாஹ்வின் பொருத்தத்தையே நாடவேண்டும்அந்த நாட்டம் சிலருக்குக் குர்பானியாகவும்சிலருக்கு அகீகாவாகவும்சிலருக்கு ஹஜ்ஜில் குற்றப் பரிகாரமாகவும் இருக்கலாம்ஆனால் ஏழு பேர்களில் இறைச்சிக்காக ஒருவர் சேர்ந்தால் அந்த ஏழு நபர்களின் குர்பானியும் கூடாது.
நூல் : ஆலம்கீரிபக்கம் 337

عَنِ الْبَرَاءِ بْنِ عَازِبٍ، قَالَ: قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «إِنَّ أَوَّلَ مَا نَبْدَأُ بِهِ فِي يَوْمِنَا هَذَا نُصَلِّي، ثُمَّ نَرْجِعُ فَنَنْحَرُ، فَمَنْ فَعَلَ ذَلِكَ، فَقَدْ أَصَابَ سُنَّتَنَا، وَمَنْ ذَبَحَ، فَإِنَّمَا هُوَ لَحْمٌ قَدَّمَهُ لِأَهْلِهِ لَيْسَ مِنَ النُّسُكِ فِي شَيْءٍ»، وَكَانَ أَبُو بُرْدَةَ بْنُ نِيَارٍ قَدْ ذَبَحَ، فَقَالَ: عِنْدِي جَذَعَةٌ خَيْرٌ مِنْ مُسِنَّةٍ، فَقَالَ: «اذْبَحْهَا وَلَنْ تَجْزِيَ عَنْ أَحَدٍ بَعْدَكَ»

"இன்றைய நாளில் நாம் முதலாவது செய்வது தொழுகையாகும். பிறகு நாம் (வீட்டிற்குச்) சென்று குர்பானி கொடுப்போம். யார் இப்படி நடந்து கொள்வாரோ அவர் நமது வழியில் நடந்து கொண்டார். யார் (தொழுவதற்கு முன்) அறுத்தாரோ அவர் தன் குடும்பத்திற்காக மாமிசத்தை முற்படுத்திக் கொண்டார். அவருக்கு குர்பானியில் (நன்மை) எதுவும் கிடையாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்பொழுது அபூபுர்தா இப்னு நியார் (ரலி) அவர்கள் (தொழு முன்) அறுத்து விட்டார். அவர் (நபி (ஸல்) அவர்களிடத்தில்) என்னிடத்தில் முஸின்னாவை விட ஆறுமாத குட்டி உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்றார். அதை முன் அறுத்ததற்கு இதைப் பகரமாக்குவீராக! எனினும் உமக்குப் பிறகு வேறு எவருக்கும் இது (குர்பானி கொடுக்க) அனுமதியில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : பரா (ரலி) நூற்கள் : புகாரி(5560), முஸ்லிம் (3963)
அபூபுர்தா (ரலி) அவர்கள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுத்த போது அதற்குப் பகரமாக நபி (ஸல்) அவர்களிடம் முஸின்னாவை விட ஜத்அ (ஆறுமாத குட்டி) உள்ளது. (அதை குர்பானி கொடுக்கலாமா?) என்று கேட்ட கேள்வியிலிருந்து முஸின்னாவைத்தான் நபி (ஸல்) அவர்கள் கொடுக்கச் சொல்லியுள்ளார்கள் என்பதை விளங்கலாம்.
நபி (ஸல்) அவர்கள் குர்பானி ஆடுகளைப் பங்கிட்டுக் கொடுத்தனர். அதில் எனக்கு "ஜத்வு' கிடைத்தது. அல்லாஹ்வின் தூதரே எனக்கு ஜத்வு தான் கிடைத்தது என்று கேட்டேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள் அதைக் குர்பானி கொடுப்பீராக என்றனர்.

அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி) நூல்: முஸ்லிம் (3974)
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஜத்வு என்ற நிலையில் செம்மறி ஆட்டுக்குட்டியை குர்பானி கொடுத்தோம்.
அறிவிப்பாளர் : உக்பத் பின் ஆமிர்.

 நூல் : நஸாயீ 4306

وَأَمَّا سِنُّهُ) فَلَا يَجُوزُ شَيْءٌ مِمَّا ذَكَرْنَا مِنْ الْإِبِلِ وَالْبَقَرِ وَالْغَنَمِ عَنْ الْأُضْحِيَّةِ إلَّا الثَّنِيُّ مِنْ كُلِّ جِنْسٍ وَإِلَّا الْجَذَعُ مِنْ الضَّأْنِ خَاصَّةً إذَا كَانَ عَظِيمًا، وَأَمَّا مَعَانِي هَذِهِ الْأَسْمَاءِ فَقَدْ ذَكَرَ الْقُدُورِيُّ أَنَّ الْفُقَهَاءَ قَالُوا: الْجَذَعُ مِنْ الْغَنَمِ ابْنُ سِتَّةِ أَشْهُرٍ وَالثَّنِيُّ ابْنُ سَنَةٍ وَالْجَذَعُ مِنْ الْبَقَرِ ابْنُ سَنَةٍ وَالثَّنِيُّ مِنْهُ ابْنُ سَنَتَيْنِ وَالْجَذَعُ مِنْ الْإِبِلِ ابْنُ أَرْبَعِ سِنِينَ وَالثَّنِيُّ ابْنُ خَمْسٍ، وَتَقْدِيرُ هَذِهِ الْأَسْنَانِ بِمَا قُلْنَا يَمْنَعُ النُّقْصَانَ، وَلَا يَمْنَعُ الزِّيَادَةَ، حَتَّى لَوْ ضَحَّى بِأَقَلَّ مِنْ ذَلِكَ شَيْئًا لَا يَجُوزُ، وَلَوْ ضَحَّى بِأَكْثَرَ مِنْ ذَلِكَ شَيْئًا يَجُوزُ وَيَكُونُ أَفْضَلَ، وَلَا يَجُوزُ فِي الْأُضْحِيَّةِ حَمَلٌ وَلَا جَدْيٌ وَلَا عَجُولٌ وَلَا فَصِيلٌ.


பிராணியின் வயது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் இவை. இதை வைத்துக் கொண்டு குர்பானி பிராணியின் வயதை முடிவு செய்யலாம்.
முஸின்னாவைத் தான் குர்பானி கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். முஸின்னா என்ற வார்த்தையின் பொருள் : ஆடு, மாடு , ஒட்டகத்தில் பல் விழுந்தவைக்கு சொல்லப்படும். சில நாட்டின் தட்ப வெட்ப நிலைக்கு ஏற்ப பிராணிகளின் நிலைகள் மாறுபாடு ஏற்படுகின்றது. இதன் காரணத்தால்தான் வயது விசயத்தில் அறிஞர்களிடம் கருத்து வேறுபாடு ஏற்பட்டுள்ளது.

முஸின்னா என்பது ஆட்டிலும், மாட்டிலும் இரண்டு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும். ஒட்டகத்தில் ஐந்து வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்று பிரபலமான அகராதி நூலான லிஸானுல் அரப் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

இதற்கு மாற்றமாக ஆட்டில் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருந்தால் போதும் என்றும் கூறப்பட்டுள்ளது. எனவே பல் விழுந்துள்ளதா என்பதைக் கவனித்து வாங்கினால் சரியானதாக அமையும்.
அடுத்து ஜத்அ என்பதையும் கொடுக்கலாம் என்றும் சில ஹதீஸ்கள் உள்ளன. ஜத்அ என்பது முஸின்னாவுக்கு அடுத்த நிலையில் உள்ளதாகும். அதாவது முஸின்னாவின் நிலைக்கு நெருக்கமான நிலைக்கு வந்ததாகும். ஆறுமாதம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் ஒரு வருடம் பூர்த்தியடைந்திருக்க வேண்டும் என்றும் கூறப்படுகிறது.

  1. குர்பானியில் கழிக்கப்பட வேண்டிய உறுப்புகள் என்ன ?

عَنِ الْأَوْزَاعِيِّ، عَنْ وَاصِلِ بْنِ أَبِي جَمِيلٍ، عَنْ مُجَاهِدٍ، قَالَ: " كَانَ رَسُولُ اللهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَكْرَهُ مِنَ الشَّاةِ سَبْعًا: الدَّمَ وَالْمَرَارَ وَالذَّكَرَ وَالْأُنْثَيَيْنِ وَالْحَيَا وَالْغُدَّةَ وَالْمَثَانَةَ "، قَالَ: " وَكَانَ أَعْجَبَ الشَّاةِ إِلَيْهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ مُقَدِّمُهَا

1.ஆண்குறி.2. பெண்குறி.3.இரண்டு விதைகள்.4 நீர்பை. 5.இரத்தம். 6. கட்டி.களலை. 7.பித்தப்பை. ஆடு மாடு ஒட்டகம் ஆகிய வற்றில் எந்த பிராணியாக இருந்தாலும் மேற்கண்ட உறுப்புகளை சாப்பிடக்கூடாது.
நூல். அல்முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக் 4ம் பாகம். சுனனுல் குப்ரா பைஹகீ. ஹதீஸ் எண். 19700

8.      குர்பானி கறியை யாருக்கெல்லாம் கொடுக்கலாம். எப்படி பங்கிடுவது. குர்பானி கறியை காபிருக்கு வழங்கலாமா

وعن ابن عمر ـ رضي الله عنهما ـ قال: الضحايا والهدايا: ثلث لك، وثلث لأهلك، وثلث للمساكين.

وَيُسْتَحَبُّ أَنْ يَأْكُلَ مِنْ أُضْحِيَّتِهِ وَيُطْعِمَ مِنْهَا غَيْرَهُ، وَالْأَفْضَلُ أَنْ يَتَصَدَّقَ بِالثُّلُثِ وَيَتَّخِذَ الثُّلُثَ ضِيَافَةً لِأَقَارِبِهِ وَأَصْدِقَائِهِ، وَيَدَّخِرَ الثُّلُثَ، وَيُطْعِمَ الْغَنِيَّ وَالْفَقِيرَ جَمِيعًا، كَذَا فِي الْبَدَائِعِ. وَيَهَبُ مِنْهَا مَا شَاءَ لِلْغَنِيِّ وَالْفَقِيرِ وَالْمُسْلِمِ وَالذِّمِّيِّ، كَذَا فِي الْغِيَاثِيَّةِ.

பொதுவாக அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை குர்பானி கொடுப்பவன் உண்பதும்பிறருக்குக் கொடுப்பதும் முஸ்தஹப்எனினும் அதனை மூன்று பாகங்களாகப் பிரித்து ஒன்றை தர்மம் செய்வதும்,ஒரு பாகத்தை உறவினர்கள் நண்பர்களுக்கு வழங்குவதும்ஒரு பாகத்தை தனக்காக வைத்துக்கொள்வதும் நல்லதுஏழைபணக்காரன்முஸ்லிம்முஸ்லிமல்லாதார் என்ற பாகுபாடின்றிக் கொடுக்கலாம்.

நூல் : கியாதிய்யாபக்கம் 333. பதாவா ஹிந்தியா. பாகம் .5. பக்கம்.300
குர்பானி கறியை முஸ்லிம் அல்லாதவர்களுக்கு ஹனபி மதஹபின் படி கொடுப்பது கூடும்.

நூல். ஃபதாவா மஹ்மூதிய்யா ஜதீத். 17/ 434.

அனைத்தையும் தர்மம் செய்வதும்தானே எடுத்துக் கொள்வதும் ஆகுமென்றாலும்அவனது குடும்பம் பெரியதாகவும்ஏழையாகவுமிருந்தால் மொத்தத்தையும் தானே எடுத்துக் கொள்வதே ஏற்றமாகும்.

நூல் : பதாயிஃபக்கம் – 332.

சட்டம் தெரியாமல் குர்பானி கொடுக்காது அப்பிராணியை விற்று விட்டால் அதன் கிரயத்தை அப்படியே தர்மம் செய்து விட வேண்டும்குர்பானி கொடுப்பதற்குண்டான மூன்று தினங்களுக்குப் பின்னர் அறுத்தால் அதன் மாமிசம் முழுவதையும் தர்மம் செய்துவிட வேண்டும்அவற்றில் கொஞ்சத்தை சாப்பிட்டு விட்டால் சாப்பிட்ட அளவுக்குள்ள கிரயத்தை தர்மம் செய்ய வேண்டும்.

நூல் : ஆலம்கீரிபக்கம் 329

குர்பானியின் சட்டங்கள் (ஷாபிஈ)

துல்ஹஜ் பிறை 10ஆம் நாளும் அதற்கடுத்த மூன்று தினங்களும் அதாவது பிறை 13 அன்று சூரிய அஸ்தமனம் வரை குர்பானி கொடுக்கலாம்.
இத்தினங்களுக்குரிய செலவினங்கள் போக குர்பானி கொடுக்க சக்தியுள்ளவனுக்கு குர்பானி கொடுத்தல் சுன்னத் முஅக்கதாவாகும்.
செம்மறி ஆடாக இருந்தால் ஒரு வருடமும், அல்லது பல்விழுந்ததாக இருக்க வேண்டும். மற்றவை ஹனபீ மத்ஹபைப் போன்றே!

நூல் : இஆனா, பாகம் - 04, பக்கம் - 386

பெருநாள் தொழுகைக்கு முன்னர் குர்பானி கொடுக்கக் கூடாது. குர்பானிக்குரிய காலக்கெடு முடிந்து விட்டால் அப்பிராணியை அறுத்து குர்பானி கொடுப்பது வாஜிபாகும். இது களாவாக நிறைவேறும்.
நூல் : இஆனா, பக்கம் - 387

பலவீனமானவைகள், வால், காது அறுந்தவை, கண் பொட்டையானவற்றைக் கொடுப்பதுவும் கூடாது.
நூல் : பதாவா ரமலீ
குர்பானியின் இறைச்சியை ஏழை பணக்காரர்களுக்குக் கொடுக்கலாம். ஆனால் முஸ்லிம் அல்லாதவருக்குக் கொடுக்கக் கூடாது. குர்பானியின் இறைச்சியை இடம் மாற்றிக் கொடுப்பதுவும் கூடும்.
நூல் : இஆனா, பக்கம் - 390, 391

  1. குர்பானி பிராணியை வாங்குவது எப்படி ? வளர்ப்பது எப்படி ?

குர்பானி பிராணியை இறுதி நேரத்தில் வாங்கி கொடுக்காமல் சில நாட்களுக்கு முன்பே அப்பிராணியை வாங்கி. வளர்த்து கொடுப்பது சிறந்தது. அது தான் நம்முன்னோர்களின் நடைமுறையும் கூட. ஹதீஸில் வந்துள்ளது.

மதீனாவில் குர்பானி பிராணிகளை நாங்கள் கொழுக்க வைப்போம். (ஏனைய) முஸ்லிம்களும் கொழுக்க வைப்பார்கள்.” (அறிவிப்பவர்: அபூஉமாமா (ரலி)
நூல்: புகாரி, (தஃலீக்).

عَن ابْن عَبَّاس رَضِي الله عَنْهُمَا فِي قَوْله {وفديناه بِذبح عَظِيم} قَالَ: كَبْش قد رعى فِي الْجنَّة أَرْبَعِينَ خَرِيفًا

அல்லாஹ் ஹாபிலுடைய ஆட்டை ஏற்றுக் கொண்டான் அதை சொர்க்கத்தில் 40 வருடங்கள் பாதுகாத்தான்( அதாவது மேய்ந்தது)  அந்த ஆட்டைத்தான்
இப்ராஹிம் நபி (அலை) அவர்கள். இஸ்மாயில் (அலை) அவர்களுக்கு பகரமாக பலியிட்டார்கள்

நூல் : (தப்ஸீர் - இப்னு கஸீர் ).

குர்பானி கொடுக்கும் பிராணிகளைஅவை மாடாக இருந்தால் 20 நாட்களும்ஆடாக இருந்தால் 10நாட்களும் கட்டிப்போட வேண்டும்.
நூல் : பதாயிஃபக்கம் – 333

  1. முடிவு செய்யப்பட்ட பிராணிக்கு உடல்நிலை பாதிப்பு ஏற்பட்டால் என்ன செய்வது. இறந்து விட்டால் என்ன செய்வது ?
وَلَوْ اشْتَرَى رَجُلٌ أُضْحِيَّةً وَهِيَ سَمِينَةٌ فَعَجَفَتْ عِنْدَهُ حَتَّى صَارَتْ بِحَيْثُ لَوْ اشْتَرَاهَا عَلَى هَذِهِ الْحَالَةِ لَمْ تُجْزِئْهُ إنْ كَانَ مُوسِرًا، وَإِنْ كَانَ مُعْسِرًا أَجْزَأَتْهُ إذْ لَا أُضْحِيَّةَ فِي ذِمَّتِهِ، فَإِنْ اشْتَرَاهَا لِلْأُضْحِيَّةِ فَقَدْ تَعَيَّنَتْ الشَّاةُ لِلْأُضْحِيَّةِ حَتَّى لَوْ كَانَ الْفَقِيرُ أَوْجَبَ عَلَى نَفْسِهِ أُضْحِيَّةً لَا تَجُوزُ هَذِهِ، وَلَوْ اشْتَرَى أُضْحِيَّةً وَهِيَ صَحِيحَةُ الْعَيْنِ، ثُمَّ اعْوَرَّتْ عِنْدَهُ وَهُوَ مُوسِرٌ أَوْ قُطِعَتْ أُذُنُهَا كُلُّهَا أَوْ أَلْيَتُهَا أَوْ ذَنَبُهَا أَوْ انْكَسَرَتْ رِجْلُهَا فَلَمْ تَسْتَطِعْ أَنْ تَمْشِيَ لَا تُجْزِي عَنْهُ، وَعَلَيْهِ مَكَانَهَا أُخْرَى بِخِلَافِ الْفَقِيرِ، وَكَذَلِكَ لَوْ مَاتَتْ عِنْدَهُ أَوْ سُرِقَتْ، وَلَوْ قَدَّمَ أُضْحِيَّةً لِيَذْبَحَهَا فَاضْطَرَبَتْ فِي الْمَكَانِ الَّذِي يَذْبَحُهَا فِيهِ فَانْكَسَرَتْ رِجْلُهَا، ثُمَّ ذَبَحَهَا عَلَى مَكَانِهَا أَجْزَأَهُ، وَكَذَلِكَ إنْ انْفَلَتَتْ عَنْهُ الْبَقَرَةُ فَأُصِيبَتْ عَيْنُهَا فَذَهَبَتْ، وَالْقِيَاسُ أَنْ لَا تَجُوزَ. وَجْهُ الْقِيَاسِ أَنَّ هَذَا عَيْبٌ دَخَلَهَا قَبْلَ تَعْيِينِ الْقُرْبَةِ بِهَا فَصَارَ كَمَا لَوْ كَانَ قَبْلَ حَالِ الذَّبْحِ. وَجْهُ الِاسْتِحْسَانِ أَنَّ هَذَا مِمَّا لَا يُمْكِنُ الِاحْتِرَازُ عَنْهُ لِأَنَّ الشَّاةَ تَضْطَرِبُ فَتَلْحَقُهَا الْعُيُوبُ مِنْ اضْطِرَابِهَا، وَرُوِيَ عَنْ أَبِي يُوسُفَ - رَحِمَهُ اللَّهُ تَعَالَى -: أَنَّهُ قَالَ: لَوْ عَالَجَ أُضْحِيَّةً لِيَذْبَحَهَا فَكَسَرَهَا أَوْ اعْوَرَّتْ فَذَبَحَهَا ذَلِكَ الْيَوْمَ أَوْ مِنْ الْغَدِ فَإِنَّهَا تُجْزِي كَذَا فِي الْبَدَائِعِ.


குர்பானிக்குரிய பிராணி காணாமலோ அல்லது திருட்டு போய் விட்டாலோ அதற்குப் பதிலாக வேறொன்று வாங்கப்பட்டபின் காணாமல் போன அல்லது திருட்டுப் போன பிராணி கிடைத்துவிட்டால் ஏழையாக இருந்தால் அவர் ஒரு பிராணியை மட்டும் அறுத்தால் போதுமானது. செல்வந்தராக இருந்தால் அவர் இரண்டையும் குர்பானி கொடுக்க வேண்டும்.

நூல்: ஹிதாயா, பதாவா ஆலம்கீரி.  : ரத்துல் முஹ்தார்பக்கம் – 384

குர்பானி கொடுக்க நாடிய பின்னர் பால் கறப்பது மக்ரூஹ்கறந்து விட்டால் தர்மம் செய்து விடவேண்டும்.குர்பானி தோலை தன் உபயோகத்திற்கு வைத்துக் கொள்ளலாம்அல்லது தர்மம் செய்து விடவேண்டும்.
குர்பானியின் பிராணி குட்டி போட்டால் அதனை அறுத்தோ அல்லது அப்படியே தர்மம் செய்ய வேண்டும்.விற்று விட்டால் விலையை தானம் செய்ய வேண்டும்.

நூல் :ஆலம்கீரி,  பக்கம் – 334.

குர்பானி கடமையான ஒருவர் குர்பானி கொடுக்காமல் விட்டு விட்டால் அவர் ஒரு ஆட்டையோ. அல்லது அதன் பணத்தையோ ஸதகா செய்வது கடமை. பிராணி வாங்கியிருந்தும் குர்பானி கொடுக்காமல் இருந்தால் அதே பிராணியை ஸதகா செய்து விட வேண்டும்.

நூல். ஷாமீ. 26/ 214.

பிரயாணியின் மீது குர்பானி கடமையா ?

பிரயாணியின் மீது குர்பானி கடமையில்லை . ஆனால் துல் ஹஜ் மாதம் 12.ம் நாள் சூரியன் மறைவதற்கு முன்பே சொந்த ஊருக்கு வந்துவிட்டால் . அல்லது ஏதாவது ஒரு இடத்தில் 15 நாட்கள் தங்க நிய்யத் வைத்துவிட்டால் அவர்மீது குர்பானி கொடுப்பது கடமையாகும்.
நூல். ஷாமி. 26/ 210.

குர்பானி ஒவ்வொரு நபரின் மீதும் கடமையா.?

ஒருவீட்டில் எத்தனை பேரிடம் ஜகாத் கடமையாகும் அளவு பொருள் இருக்குமோ அவர்கள் அனைவரின் மீதும் தனித்தனியாக குர்பானி கொடுப்பது கடமையாகும். ஒரு குர்பானி அனைத்து நபர்களுக்கும் போதுமாகாது.
நூல். ஷாமீ. 26/ 236

குர்பானி கொடுப்பவர்தானே பிராணியை அறுப்பது சிறந்தது.


وَالْأَفْضَلُ أَنْ يَذْبَحَ أُضْحِيَّتَهُ بِيَدِهِ إنْ كَانَ يُحْسِنُ الذَّبْحَ؛ لِأَنَّ الْأَوْلَى فِي الْقُرْبَاتِ أَنْ يَتَوَلَّى بِنَفْسِهِ، وَإِنْ كَانَ لَا يُحْسِنُهُ فَالْأَفْضَلُ أَنْ يَسْتَعِينَ بِغَيْرِهِ وَلَكِنْ يَنْبَغِي أَنْ يَشْهَدَهَا بِنَفْسِهِ، كَذَا فِي الْكَافِي.

குர்பானி கொடுப்பவரோ, அல்லது வேறு நபரோ அறுக்கலாம். அறுக்கத் தெரியாவிட்டால் அல்லது வேறு காரணத்தால் அறுக்க முடியாமல் போனால் மற்றவர்களை வைத்து அறுக்கலாம்.
நூல். பதாவா ஹிந்தியா
ருந்தாலும் தானே அறுக்க முயற்சி செய்ய வேண்டும். காரணம் அது நபியின் சுன்னத்.  ஹதீஸில் குர்பானி பிராணியை நபி (ஸல்) அவர்கள் தன் கரத்தால் அறுத்ததாக வந்துள்ளது.
عَنْ أَنَسٍ قَالَ
ضَحَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِكَبْشَيْنِ أَمْلَحَيْنِ أَقْرَنَيْنِ ذَبَحَهُمَا بِيَدِهِ وَسَمَّى وَكَبَّرَ وَوَضَعَ رِجْلَهُ عَلَى صِفَاحِهِمَا

வெள்ளை நிறத்தில் கருப்பு கலந்த கொம்புள்ள இரு ஆடுகளை நபி (ஸல்) அவர்கள் குர்பானி கொடுத்தார்கள். தனது கரத்தால் அவ்விரண்டையும் அறுத்தார்கள். பிஸ்மில்லாஹி வல்லாஹு அக்பர் என்று கூறி அவற்றின் கழுத்தில் தம் காலை வைத்தார்கள்.
அறிவிப்பாளர் : அனஸ் (ரலி) நூல் : முஸ்லிம் (3975)
فَنَحَرَ ثَلَاثًا وَسِتِّينَ بَدَنَةً بِيَدِهِ ثُمَّ أَعْطَى عَلِيًّا فَنَحَرَ مَا غَبَر
பின்னர் மினாவிலுள்ள பலியிலிடும் இடத்திற்கு நபி (ஸல்) அவர்கள் சென்று, அறுபத்து மூன்று ஒட்டகங்களைத் தமது கையால் அறுத்துப் பலியிட்டார்கள். பிறகு எஞ்சிய (முப்பத்தேழு) ஒட்டகங்களை அலீ (ரலி) அவர்களிடம் கொடுத்(துப் பலியிடச் செய்)தார்கள். தமது பலி ஒட்டகங்களிலும் அலீ (ரலி) அவர்களை நபியவர்கள் கூட்டாக்கிக் கொண்டார்கள்.
(நூல் : முஸ்லிம் 2334)


அறுக்கும்போது பேண வேண்டிய விஷயங்கள்.

பிராணியை வலது புறம் படுக்க வைத்து . அதன் முகம் கிப்லாவின் பக்கம் இருக்க வேண்டும். மேலும் அதன் கால்கள் கட்டப்பட வேண்டும் பின் இந்த துஆ வை ஓதவேண்டும்.

عَنْ جَابِرٍ قَالَ: ذَبَحَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الذَّبْحِ كَبْشَيْنِ أَقْرَنَيْنِ أَمْلَحَيْنِ موجئين فَلَمَّا وجههما قَالَ: «إِنِّي وجهت وَجْهي للَّذي فطر السَّمَوَات وَالْأَرْضَ عَلَى مِلَّةِ إِبْرَاهِيمَ حَنِيفًا وَمَا أَنَا مِنَ الْمُشْرِكِينَ إِنَّ صَلَاتِي وَنُسُكِي وَمَحْيَايَ وَمَمَاتِي لِلَّهِ رَبِّ الْعَالَمِينَ لَا شَرِيكَ لَهُ وَبِذَلِكَ أَمَرْتُ وَأَنَا مِنَ الْمُسْلِمِينَ اللَّهُمَّ مِنْكَ وَلَكَ عَنْ مُحَمَّدٍ وَأُمَّتِهِ بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ ثُمَّ ذَبَحَ» . رَوَاهُ أَحْمَدُ وَأَبُو دَاوُدَ وَابْنُ مَاجَهْ وَالدَّارِمِيُّ وَفِي رِوَايَةٍ لِأَحْمَدَ وَأَبِي دَاوُدَ وَالتِّرْمِذِيِّ: ذَبَحَ بِيَدِهِ وَقَالَ: «بِسْمِ اللَّهِ وَاللَّهُ أَكْبَرُ اللَّهُمَّ هَذَا عَنِّي وَعَمَّنْ لَمْ يُضَحِّ من أمتِي

இன்னீ வஜ்ஜஹ்த்து வஜ்ஹிய லில்லதீ பத்ரஸ் மாவாத்தி வல் அர்ழ ஹனீஃபன் வமா அன மினல் முஷ்ரிகீன்.

இன்ன ஸலாத்தீ நுஸுக்கீ மஹ்யாய மமாத்தீ லில்லாஹி ரப்பில் ஆலமீன். லாஷரீகலஹு வபி தாலிக்க உமிர்த்து அன மினல் முஸ்லிமீன்.

மேற்கண்ட துஆவை ஓதியபின் குர்பானியின் பிராணியை கிப்லாவின் பக்கம் முகம் இருக்குமாறு படுக்க வைத்த அறுப்பவர் 'அல்லாஹும்ம லக மின்க பிஸ்மில்லாஹி அல்லாஹு அக்பர்' என்று ஓதியபடியே கூர்மையான கத்தியைக் கொண்டு விரைவாக மூன்று அறுப்பில் அறுத்து முடிக்க வேண்டும்.

பின்னர் அங்கு நின்று கிப்லாவை முன்னோக்கி கைகளை உயர்த்தி கீழ்காணும் துஆவை ஓத வேண்டும்.

அல்லாஹும்ம தகப்பல் மின்னீ கமா தகப்பல்த்த மின் கலீலிக்க ஸையிதினா இப்றாஹிம மின் ஹபீபிக்க ஸையிதினா முஹம்மதின் ஸல்லல்லாஹு அலைஹி அலா ஆலிஹீ அஸ்ஹாபிஹி பாரிக் ஸல்லிம்.

அடுத்தவருக்காக அறுக்கும்போது,

அல்லாஹும்ம தகப்பல் மின்னீ என்ற இடத்தில் மின் என்று கூறி பின்னர் குர்பானி கொடுப்பவரின் பெயரைக் குறிப்பிட வேண்டும்.
ஆதாரம்: பதாவா ஆலம்கீரி, பஹாரே ஷரீஅத்.

பிராணியின் கழுத்திலே நான்கு நரம்புகள் இருக்கின்றன. ஒன்று உணவுக்காக. இரண்டு மூச்சு விடுவதற்காக. மற்ற இரண்டும் இரத்தத்திற்காக உள்ளன. அவற்றில் மூன்று நரம்புகளை அறுப்பது அவசியமாகும். அப்படி இரண்டை மட்டும் அறுத்தால் அதை உண்பது கூடாது.
நூல். ஷாமி. 26/ 151.

பிராணியை அறுத்த பின் எதுவரை முழுமையாக உயிர் பிரியவில்லையோ. உடலின் அசைவுகள் பூர்த்தியாக நிற்கவில்லையோ. அதுவரை தோலை உரிப்பது . தலையை தனியாக எடுப்பது. உடலின் மற்ற பாகங்களை வெட்டுவது (மக்ரூஹ்) வெறுக்கதக்கதாகும்.

குர்பானி கொடுக்கும் நேரம்

ஈதுல் ளுஹாவின் ஹஜ்ஜுப் பெருநாள் அன்று சூரியன் உதயமான நேரத்திலிருந்து குர்பானி கொடுத்தல் துவங்குகிறது.

பெருநாள் தொழுகையை அடுத்து குத்பா ஓதி முடிந்தபின் குர்பானி கொடுத்தல் சிறந்ததாகும்.

நூல்: மிஷ்காத்.

தல்ஹஜ் பிறை 10,11,12 ஆகிய மூன்று நாட்களிலும் குர்பானி கொடுக்கலாம். இதில் குர்பானி கொடுக்க முதல் (பெரு) நாளே சிறந்ததென ஹஜ்ரத் உமர், ஹஜ்ரத் அலீ, ஹஜ்ரத் இப்னு அப்பாஸ் ரலியல்லாஹு அன்ஹும் போன்ற நபித் தோழர்கள் அறிவிக்கின்றனர்.

நூல்: ஹிதாயா.

குர்பானியில் வெறுக்கத்தக்கவை (மக்ரூஹ்)

1ـ أن يذكيها بآلة كالة؛ لمخالفة أمر النبي صلى الله عليه وسلم بإحداد الشفرة ولما فيه من تعذيب الحيوان، وقيل: يحرم ذلك.
أن يحد السكين والبهيمة تنظر
أن يذكيها والأخرى تنظر إليها
أن لا يفعل ما يؤلمها قبل زهوق نفسها، مثل أن يكسر عنقها، أو يبدأ بسلخها، أو يقطع شيئا من أعضائها قبل أن تموت، وقيل: يحرم ذلك،
أن يوجهها إلى غير القبلة عند الذبح، ذكره الأصحاب ولم يذكروا دليلا يوجب الكراهة، والأصل عدمها، وترك المستحب لا يلزم منه


1. அறுக்கும் போது தலை துண்டாகி விடுதல்.

2. பிராணியை படுக்க வைத்தபின் கத்தியை தீட்டுதல்.

3. கிப்லாவை முன்னோக்கி படுக்க வைக்காமல் அறுத்தல்.

4. அறுக்கப்பட்டபின் உயிர் முழுவதுமாக அடங்குமுன்பே தோலை உரித்தல்.

5. உயிர் நன்கு பிரியுமுன் தலையை ஒடித்தல், துண்டித்தல்.

6. அறுக்கும்போது  தேவையில்லாதவைகளை செய்வதன் மூலம் பிராணிக்கு துன்பம் கொடுத்தல்.

7. ஒரு பிராணிக்கு முன் மற்றொரு  பிராணியை அறுத்தல்.

நூல்: ஹிதாயா, பதாவா ஆலம்கீரி.

  1. ஹகீகா என்றால் என்ன ? அகீகா கொடுப்பதின் நோக்கமென்ன ?

இதனை மொழி நடையில் : வெட்டுதல் அல்லது இரத்தத்தை ஓட்டுதல் எனப்படும்.

பரிபாசையில் : குழந்தை பிறந்து எழாவது நாள் இறைவனுக்கு நன்றி செலுத்தும் முகமாக அறுக்கப்படும் அல்லது அறுத்துக் கொடுக்கப்படும் ஆட்டுக்குச் சொல்லப்படும்

ஹகீகா என்பது குர்பானியைப் போன்றதேயாகும். குழந்தை பிறந்துவிட்டது என்ற சந்தோஷத்தில் குழந்தையின் வருங்கால நலனை கருத்தில் கொண்டு . பிறந்த 7 ம் நாளில் . பிறந்த முடியை எடுத்துவிட்டு ஆண் குழந்தையாக இருந்தால் இரண்டு ஆடுகளும் பெண்குழந்தையாக இருந்தால் ஒரு ஆடும் கொடுப்பது மார்க்கச் சட்டபடி வசதி உள்ளவர்மீது சுன்னத்
 மு அக்கதாவாகும்.


  1. ஆண். பெண் பிள்ளைகளுக்கு எத்தனை பிராணிகள் கொடுப்பது ?

ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடும். பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் கொடுக்க வேண்டும்.

قَالَتْ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ: «عَنِ الْغُلَامِ شَاتَانِ، مِثْلَانِ، وَعَنِ الْجَارِيَةِ شَاةٌ

ஆண் குழந்தைக்கு இரண்டு ஆடும். பெண் குழந்தைக்கு ஒரு ஆடும் அகீகா கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்களுக்கு கட்டளையிட்டார்கள். என ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல். திர்மிதி.  அபூ தாவுத் 2842, நஸாயீ 188, அஹ்மத்182,183;)

عَنْ سَمُرَةَ بْنِ جُنْدُبٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «كُلُّ غُلَامٍ رَهِينَةٌ بِعَقِيقَتِهِ تُذْبَحُ عَنْهُ يَوْمَ سَابِعِهِ وَيُحْلَقُ وَيُسَمَّى» قَالَ أَبُو دَاوُدَ: «وَيُسَمَّى» أَصَحُّ كَذَا

ஒவ்வொரு குழந்தையும் அதனுடைய அகீகாவைக் கொண்டு அடகு வைக்கப்பட்டுள்ளது. அதனுடைய எழாவது தினத்தில் அதற்காக அறுக்கப்படும், தலை முடி மலிக்ப்படும், அத்தினத்திலே பெயர் சூட்டப்படும் என நபி(ஸல்) அவர்கள் சொன்னார்கள்
 
(
அறிவிப்பவர்: சமுறா (ரலி) ,

ஆதாரம் : அபூ தாவுத் 2839)

இந்த ஹதீஸில் கூறப்பட்ட அடமானம் வைக்கப்பட்டது என்பதற்கு ஹதீஸ் விரிவுரையாளர்கள் பின்வரும் மூன்று விதமான விளக்கத்தை கூறுகின்றனர்.

1)   ஹதீஸ்களில் சிறுவயதில் இறந்துவிடும் குழந்தை தனது பெற்றோருக்காக மறுமையில் பரிந்துரை செய்யும் என்று வந்துள்ளது. ஆனால் எந்தக் குழந்தையின் பெற்றோர் வசதி இருக்கவே அகீகா கொடுக்காமலிருக்க அக்குழந்தை சிறுவயதிலேயே இறந்துவிடின் அக்குழந்தை தமது பெற்றோருக்காக சிபாரிசு செய்யாது. எவ்வாறு அடமானம் வைக்கப்பட்ட பொருள் நமக்கு பயனளிக்காதோ அது போன்று அக்குழந்தையும் பெற்றோருக்கு பயனளிக்காது.

2)   அகீகா கொடுக்காமல் இருக்கும் குழந்தை நலவுகளைவிட்டும் நீங்கி நோய் நொடுக்கு இலக்கானதாக இருக்கும்.

3)    عَنْ سَلْمَانَ بْنِ عَامِرٍ، أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ: «إِنَّ مَعَ الْغُلَامِ عَقِيقَةً، فَأَهْرِيقُوا عَنْهُ دَمًا، وَأَمِيطُوا عَنْهُ الْأَذَى»


அகீகா கொடுக்காமல் இருக்கும் குழந்தை தூய்மையின்றி அசுத்ததுடன் இருக்கும். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கின்றார்கள். குழந்தையுடன் அகீகா உள்ளது. எனவே நீங்கள் குழந்தைக்காக அறுங்கள்.அதன் அசுத்தத்தை நீக்குங்கள்.
 நூல். புகாரி.

  1. எப்பொழுது வரை (பிள்ளைகளின் வயது வரம்பு ) கொடுக்கலாம் ?

அகீகா 7.ம் நாள் அன்று கொடுப்பது விரும்பத்தக்கதாகும். ஆனால் அந்த நாளில் கொடுக்கா முடியாவிட்டால் 14.ம் நாள் அன்று. முடியாவிட்டால் 21.ம் நாளன்று கொடுக்கவேண்டும். அதுவும் முடியாவிட்டால் பல வருடங்கள் கழிந்தாலும் எப்போது கொடுக்கமுடியுமோ அப்போது கொடுக்கவேண்டும்
ஹதீஸில் வந்துள்ளது.

عَنْ عَبْدِ اللهِ بْنِ بُرَيْدَةَ، عَنْ أَبِيهِ، عَنِ النَّبِيِّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: " الْعَقِيقَةُ تُذْبَحُ لِسَبْعٍ , وَلِأَرْبَعَ عَشْرَةَ , وَلِإِحْدَى وَعِشْرِينَ "


அகீகா (வாக கொடுக்கப்படும் பிராணி) ஏழாவது நாளும் பதினான்காம் நாளும் இருபத்து ஓன்றாம் நாளும் அறுக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : புரைதா (ரலி)
நூல் : பைஹகீ (பாகம் 9 பக்கம் 303).

நபி (ஸல்) அவர்கள் தமக்காக சிறுபிராயத்தில் அகீகா கொடுக்கப்பட்ட விஷயத்தில் சந்தேகம் இருந்ததால் நபித்துவம் வழங்கப்பட்ட பின் தனக்காக அகீகா கொடுத்துக்கொண்டார்கள். என்று ஹதீஸில் வந்துள்ளது.
நூல். மிஸ்காத் கிதாபின் விரிவுரையான மளாஹிருல் ஹக் என்ற கிதாபில் பாபுல் அகீகா பாடத்தில் வந்துள்ளது.
பெரும்பாலான அறிஞர்கள் ஆடு அல்லாத கால்நடைகள் அகீகாவுக்குச் செல்லுபடியாகும் என்ற கருத்தைக் கொண்டுள்ளார்கள்.
ஏனென்றால் முஸன்னப் இப்னு அபீ ஷைபா என்ற கிதாபில் சரியான அறிவிப்பு வரிசையின்படி அனஸ் ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் ஓர் ஒட்டகத்தை அகீகாவுக்காக அறுத்ததாக ஒரு செய்தி பதிவாகியுள்ளது.
இக்கருத்து ஹன்பலீ, ஷாபிஈ மற்றும் மாலிகீ ஆகிய மத்ஹப்களைச் சார்ந்தவர்களாலும் முன்வைக்கப்பட்டுள்ளது.
ஒட்டகம் மற்றும் மாடு ஆகியன ஆட்டைவிட அதிக கூலியைப் பெற்றுத்தரும் என அவர்கள் கூறுகின்றார்கள். அகீகாப் பிராணியின் இரத்தத்தை ஓட்டுங்கள் என்ற பொதுவான ஹதீஸை முன்வைத்து அவர்கள் இக்கருத்தை முன்வைக்கின்றனர்.
இமாம் இப்னு ஹஸ்ம் அவர்கள் ஆட்டை மாத்திரமே அகீகாவாகக் கொடுக்கலாம் என்ற கருத்தை முன்வைக்கின்றார்கள்.

عَبْدُ الرَّزَّاقِ قَالَ: أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ: أَخْبَرَنَا يُوسُفُ بْنُ مَاهَكَ قَالَ: دَخَلْتُ أَنَا، وَابْنُ مُلَيْكَةَ عَلَى حَفْصَةَ بِنْتِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ، وَوَلَدَتْ لِلْمُنْذِرِ بْنِ الزُّبَيْرِ غُلَامًا، فَقُلْتُ: «هَلَّا عَقَقْتِ جَزُورًا عَلَى ابْنِكِ»، فَقَالَتْ: مَعَاذَ اللَّهِ كَانَتْ عَمَّتِي عَائِشَةُ، تَقُولُ: «عَلَى الْغُلَامِ شَاتَانِ، وَعَلَى الْجَارِيَةِ شَاةٌ»

ஹப்ஸா பின்த் அப்திர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவருக்கு நீங்கள் ஓர் ஒட்டகத்தை அகீகா கொடுக்க வேண்டாமா? எனக்கூறப்பட்டது. அதற்கு அவர்கள் அல்லாஹ் பாதுகாக்க வேண்டும், என்னுடைய மாமியான ஆயிஷா ரழியல்லாஹு அன்ஹா அவர்கள் ஆண் குழந்தைக்கு இரு ஆடுகளும் மற்றும் பெண் குழந்தைக்கு ஓர் ஆடும் என்றே கூறக்கூடியவர்களாக இருந்தர்கள் எனக்கூறினார்கள்.                              
   நூல்      - முஸன்னப் அப்திர்ரஸ்ஸாக் 4:328

  1. பிராணியின் தகுதிகள் கொடுப்பவரின் தகுதிகள். கறியை என்ன செய்வது ? எப்படி பங்கிடுவது . யாருக்கு கொடுப்பது?

குர்பானி கொடுப்பதற்கு தகுதியான பிராணிகளே அகீகா கொடுப்பதற்கும் தகுதியானவை ஆகும். அகீகா இறைச்சியை குர்பானி இறைச்சியைப் போல் மூன்று பங்குகளாக பிரித்து ஏழைகளுக்கு அறமாகவும், சுற்றத்தார்களுக்கு அன்பளிப்பாகவும், தமது சொந்த தேவைக்காகவும் எடுத்துக் கொள்ளலாம். அகீகாவை நேர்ச்சை செய்தாலோ அல்லது சுன்னத்தான அகீகா என்று கூறாமல், 'அகீகா கொடுப்பேன்' என்று கூறினாலோ, 'இந்த அகீகாவாக ஆக்கினேன்' என்று கூறினாலோ அல்லது கேட்பவருக்கு, பதிலில் 'அகீகா கொடுக்கப்போகிறேன்' என்று கூறினாலோ ஆக இந்த நான்கு அமைப்புகளிலும் அகீகா கொடுப்பது பர்ழாகும். அந்த இறைச்சியை சாப்பிடுவது ஹராமாகும். முழுவதும் தர்மம் செய்துவிட வேண்டும்.

  1. தாய் தகப்பன் சாப்பிடலாமா ?

தாராளமாக சாப்பிடலாம்.
அகீகாவும் குர்பானியைப் போன்றுதான். அகீகாவின் இறைச்சியை குழந்தையின் பெற்றோரும் உற்றார் உறவினரும் சாப்பிடலாம். தர்மமும் செய்யவேண்டும். குழந்தையின் அகீகாவை பெற்றோர்கள் சாப்பிடக்கூடாது என்று பரவலாக எண்ணப்படுவது தவறான கருத்தாகும். அதற்கு எந்த ஆதாரமும் இல்லை.

நூல். ஃபதாவா மஹ்மூதிய்யா. 17: 413

அகீகா கொடுப்பவர்கள் அறுக்கப்பட்ட பிராணியின் இறைச்சியை உண்பதற்கு எந்தத் தடையும் இல்லை. ஹஜ்ஜப் பெருநாளன்று அறுக்கப்படும் குர்பானிப் பிராணியின் இறைச்சியை குர்பானிக் கொடுப்பவர் உண்பதற்கு நபி (ஸல்) அவர்கள் தடைவிதிக்கவில்லை. குர்பானியும் அகீகாவும் இறைவனுக்கு செலுத்தப்படுகின்ற வணக்கமாக இருப்பதால் இவை இரண்டுக்கும் ஒரேவகையான சட்டம்தான்.

ஹஜ்ஜின் போது அறுக்கப்படுகின்ற பிராணியை அறுப்பவர்கள் தானும் உண்டு ஏழை எளியவர்களுக்கும் உண்ணக்கொடுக்க வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகின்றான் இவ்வாறே அகீகா விஷயத்திலும் நடந்துகொள்ள வேண்டும்.

لِيَشْهَدُوا مَنَافِعَ لَهُمْ وَيَذْكُرُوا اسْمَ اللَّهِ فِي أَيَّامٍ مَعْلُومَاتٍ عَلَى مَا رَزَقَهُمْ مِنْ بَهِيمَةِ الْأَنْعَامِ فَكُلُوا مِنْهَا وَأَطْعِمُوا الْبَائِسَ الْفَقِير

அதை நீங்களும் உண்ணுங்கள்! கஷ்டப்படும் ஏழைகளுக்கும் கொடுங்கள்!
அல்குர்ஆன் (22 : 28)

அகீகாக் கொடுக்கப்படும் பிராணியின் எலும்பை உடைக்கக்கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு ஹதீஸ் உள்ளது.
 
عَنْ جَعْفَرِ بْنِ مُحَمَّدٍ، عَنْ أَبِيهِ، أَنَّ النَّبِيَّ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ فِي الْعَقِيقَةِ الَّتِي عَقَّتْهَا فَاطِمَةُ عَنِ الْحَسَنِ وَالْحُسَيْنِ عَلَيْهِمُ السَّلَامُ أَنْ يَبْعَثُوا إِلَى الْقَابِلَةِ مِنْهَا بِرِجْلٍ , وَكُلُوا وَأَطْعِمُوا وَلَا تَكْسِرُوا مِنْهَا عَظْمًا. أَخْبَرَنَاهُ أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ مُحَمَّدٍ , أنبأ أَبُو الْحُسَيْنِ الدَّاوُدِيُّ , ثنا أَبُو عَلِيٍّ اللُّؤْلُؤِيُّ , ثنا أَبُو دَاوُدَ فَذَكَرَهُ

ஹசன் ஸைன் ஆகிய இருவருக்காக ஃபாத்திமா (ரலி) அவர்கள் அகீகா கொடுத்த போது நீங்களும் (இதிலிருந்து) உண்ணுங்கள். (பிறருக்கும்) உண்ணக்கொடுங்கள். இதன் எழும்பை உடைத்துவிடாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்தச் செய்தி இமாம் அபூதாவூத் அவர்கள் எழுதிய அல்மராசீல் என்றநூலிலும். பைஹகீ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
 எனவே அகீகா கொடுக்கும் பிராணியின் எழும்பை உடைக்காமல் இருப்பது சிறந்தது.

  1. என்னென்ன பிராணிகளை கொடுக்கலாம் ?

குர்பானிக்காக கொடுக்கும் பிராணிகளையே அகீகாவிற்கும் கொடுக்கவேண்டும்.

  1. நேர்ந்த பிராணிக்கு நோய் அல்லது மரணம் ஏற்பட்டால் என்ன செய்வது ?

அகீகா கொடுப்பதற்காக வாங்கப்பட்ட பிராணி இறந்து விட்டால் வசதியுள்ளவன் வேறு பிராணி வாங்கி அகீகா கொடுக்க வேண்டும்வசதியற்றவனாக இருந்தால் தேவையில்லை.

  1. இரண்டையும் ஒரே நிய்யத்தில் கொடுக்கலாமா ?

وَسُئِلَ) - رَحِمَهُ اللَّهُ تَعَالَى - عَنْ ذَبْحِ شَاةٍ أَيَّامَ الْأُضْحِيَّةِ بِنِيَّتِهَا وَنِيَّةِ الْعَقِيقَةِ فَهَلْ يَحْصُلَانِ أَوْ لَا اُبْسُطُوا الْجَوَابَ؟
(فَأَجَابَ) نَفَعَ اللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى بِعُلُومِهِ بِقَوْلِهِ الَّذِي دَلَّ عَلَيْهِ كَلَامُ الْأَصْحَابِ وَجَرَيْنَا عَلَيْهِ مُنْذُ سِنِينَ أَنَّهُ لَا تَدَاخُلَ فِي ذَلِكَ لِأَنَّ كُلًّا مِنْ الْأُضْحِيَّةِ وَالْعَقِيقَةِ سُنَّةٌ مَقْصُودَةٌ لِذَاتِهَا وَلَهَا سَبَبٌ يُخَالِفُ سَبَبَ الْأُخْرَى وَالْمَقْصُودُ مِنْهَا غَيْرُ الْمَقْصُودِ مِنْ الْأُخْرَى إذْ الْأُضْحِيَّةُ فِدَاءٌ عَنْ النَّفْسِ وَالْعَقِيقَةُ فِدَاءٌ عَنْ الْوَلَدِ إذْ بِهَا نُمُوُّهُ وَصَلَاحُهُ وَرَجَاءُ بِرِّهِ وَشَفَاعَتِهِ.
أَصْلُ السُّنَّةِ كَمَا فِي الْمَجْمُوعِ وَغَيْرِهِ وَقَالَ ابْنُ عَبْدِ الْبَرِّ: لَا أَعْلَمُ فِيهِ خِلَافًا. اهـ.
وَبِهَذَا يُعْلَمُ أَنَّهُ لَا يُجْزِي التَّدَاخُلُ فِي الْأُضْحِيَّةِ وَالْعَقِيقَةِ مِنْ بَابٍ أَوْلَى لِأَنَّهُ إذَا امْتَنَعَ مَعَ اتِّحَادِ الْجِنْسِ فَأَوْلَى مَعَ اخْتِلَافِهِ، وَاَللَّهُ سُبْحَانَهُ وَتَعَالَى أَعْلَمُ بِالصَّوَابِ

கொடுக்க கூடாது. காரணம் குர்பானி தனக்காக கொடுப்பது. அகீகா தன் குழந்தைக்காக கொடுக்ககூடியது எனவே தன்னையும் தன் மகனையும் ஒரே நிலையில் வைத்து ஒரு அமலை செய்யமுடியாது.

ஆதாரம். பத்வா சிப்கதுல் இஸ்லாமிய்யா.

  1. ஹகீகாவிற்கு நேர்ந்து வெளி விஷேசங்களுக்கு வழங்கலாமா ?

1.       1. "الْعَقِيقَةُ عَنْ الْغُلَامِ وَعَنْ الْجَارِيَةِ وَهِيَ ذَبْحُ شَاةٍ فِي سَابِعِ الْوِلَادَةِ وَضِيَافَةِ النَّاسِ وَحَلْقِ شَعْرِه مُبَاحَةٌ لَا سُنَّةٌ وَلَا وَاجِبَةٌ كَذَا فِي الْوَجِيزِ لِلْكَرْدَرِيِّ".
2.     - الفتاوي الهندية : ج - 5، ص - 362


அகீகாவுடைய பிராணியையோ அல்லது அதன் இறைச்சியையோ திருமணம் போன்ற பொதுமக்கள் கலந்துகொள்ளும் விருந்துகளில் சேர்த்துக்கொள்ளலாம். ஆனால் அறுக்கும்போது அகீகாவுடைய நிய்யத் வைக்கவேண்டும். 

  1. ஆட்டை மதரஸாகளுக்கு விநியோகம் செய்யலாமா ?

செய்யலாம். இருந்தாலும் அதில் கொஞ்சமாவது அகீகா கொடுப்பவர் சாப்பிடுவது சுன்னத். ஆகவே அகீகா இறைச்சி முழுவதையும் கொடுத்து விடாமல் தனக்கு கொஞ்சம் எடுத்துக்கொள்வது சிறப்பு.
நூல். பதாவா ஹிந்தியா.