ஒருவரை
நேசிப்பதற்கு நான்குகாரணங்களில் ஏதாவது ஒன்று காரணமாக இருக்கும்.
1) சொந்தம் 2) அறிவு 3) அழகு 4) நல்லகுணம்.
இந்த
நான்கையும் ஒருசேர கொண்டவர்கள். நாயகம் (ஸல்) அவர்கள் எனவே மற்ற எல்லாத்தையும் விட நேசிக்கப்படுவதற்கு தகுதிவாய்ந்தவர்கள். அதிக உரிமையும் உள்ளவர்கள் நாயகம் (ஸல்) அவர்கள்..
நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு மாற்றமாக எவர் என்ன சொன்னாலும்
அவைகளைத் தூக்கி எறிந்து விடவேண்டும், நாம் நபி
(ஸல்) அவர்கள் கூற்றை மட்டுமே எடுத்துச் செயல்படுத்த வேண்டும், அது தான் நாம் மற்ற அனைவரையும் விட நபி (ஸல்) அவர்களுக்கு முன்னுரிமை
கொடுத்து அவர்களை நேசிக்கிறோம் என்று அர்த்தம்,
அதை விடுத்து நபிவழி இன்னதென்று தெரிந்தும் மற்றவர்களுக்காகவோ அல்லது வேறு காரணங்களுக்காகவோ
அதைப் புறக்கணித்தால் அவர் உண்மையான இறைநம்பிக்கையாளராக ஆக முடியாது.
நபி(ஸல்) அவர்களை நேசிக்க வேண்டும். இது சாதாரண நேசம் அல்ல.
தனது பெற்றோர், பிள்ளைகள், மற்றோர் ஏன்! தனது உயிரை விட அதிகமாக நபியை நேசிக்க வேண்டும்.
இந்த நேசம் என்பது வாய் வார்த்தையில் மட்டுமல்லாது நடைமுறையிலும் இருக்க வேண்டும்.
நபி(ஸல்) அவர்களைக் கண்ணியப்படுத்துவதும், அவர்களுக்கு
உதவி செய்வதும், அவர்கள் மூலம் கூறப்பட்ட செய்திகளை நடைமுறைப்படுத்துவதும், நபி(ஸல்) அவர்களுக்கு எதிராகக் கூறப்படும் குற்றச்சாட்டுக்களை
மறுப்பதும் நபி மீதான நேசத்தின் சான்றுகளாக
இருக்கும்.
أَخْبَرَنَا يَزِيدُ بْنُ هَارُونَ، وَهَاشِمُ بْنُ الْقَاسِمِ, قَالَا : حَدَّثَنَا
شُعْبَةُ، عَنْ قَتَادَةَ، عَنْ أَنَسٍ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ
قَالَ لَا يُؤْمِنُ أَحَدُكُمْ حَتَّى أَكُونَ أَحَبَّ إِلَيْهِ مِنْ وَالِدِهِ ، وَوَلَدِهِ
، وَالنَّاسِ أَجْمَعِينَ
ﺳﻨﻦ ﺍﻟﺪﺍﺭﻣﻲ
அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
உங்களில் ஒருவருக்கு அவருடைய தந்தை, அவருடைய பிள்ளை, ஏனைய மக்கள்
அனைவரையும் விட நான் நேசத்திற்குரியவனாக ஆகாதவரை அவர் (உண்மையான) இறைநம்பிக்கை (ஈமான்)
கொண்டவர் ஆக மாட்டார்” என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.:.
நூல்: தாரமீ 2658
நபி மீது ஸஹாபாக்கள் கொண்ட நேசம்.
الأنصاري أن طلحة بن البراء رضي الله عنهما لما لقي النبي صلى الله عليه وسلم
فجعل يلصق برسول الله صلى الله عليه وسلم يوقبِّل قدميه. قال: يا رسول الله، مرني بما
أحببت ولا أعصي لك أمراً. فعجب لذلك النبي صلى الله عليه وسلم وهو غلام، فقال له عند
ذلك: «اذهب فاقتل أباك» فخرج مولياً ليفعل، فدعاه فقال له: «أقبل فإني لم أبعث بقطيعة
رحم»
ஒரு முறை தல்ஹதிப்னு பர்ராஹ் (ரலி) அவர்கள் நபியை சந்தித்து யாரசூலல்லாஹ் நீங்கள் என்ன விரும்புகிறீர்களோ அதை என்னிடம் கூறுங்கள் அந்த செயலை நிச்சயம் செய்வேன் உங்களுக்கு மாற்றம் செய்யமாட்டேன் என்றார். அவரின் உறுதியான சொல்லை கேட்டு நாயகம் ஆச்சரியப்பட்டார்கள். பிறகு அவரை சோதிப்பதற்காக நாயகம் (ஸல்) அவர்கள் அவரிடம் நீங்கள் சென்று உங்களுடைய தந்தையை கொலைசெய்துவிட்டு
வாருங்கள் என்றார்கள். இந்த வார்த்தையை கேட்டதுதான் உடனே எழுந்திருத்து
தந்தையை கொலை செய்ய சென்றார்கள். சென்றவரை நாயகம்(ஸல்) அவர்கள் அவரை அழைத்து உறவை துண்டிப்பதற்காக
நான் அனுப்ப பட வில்லை என்றார்கள்.
நூல். உஸ்துல் கஃபா.
وعن ابن الحنظلية رجل من أصحاب النبي صلى الله عليه وسلم قال : قال النبي
صلى الله عليه وسلم : " نعم الرجل خريم الأسدي لولا طول جمته وإسبال إزراه
" فبلغ ذلك خريما فأخذ شفرة فقطع بها جمته إلى أذنيه ورفع إزراه إلى أنصاف ساقيه . رواه أبو داود
ஒரு தடவை நபி(ஸல்)
அவர்கள் குரைம் அஸதி (ரலி) என்ற ஸஹாபி அவர்களைப்பற்றி குறிப்பிடும்பொழுது இரண்டு விஷயங்கள்
இல்லையானால் அவர் நல்ல மனிதர்தான். ஒன்று அவருடைய தலைமுடி நீளமானதாக இருக்கிறது. இரண்டாவது
அவர் கீழாடையை கெண்டைக்கால் முழிக்கு கீழாக கட்டுகிறார். என்று கூறினார்கள். இந்த செய்தி
குரைம் அஸதி அவர்களுக்கு தெரிந்தபோது உடனே கத்தியை எடுத்து காதுக்கு கீழ் தொங்கிகொண்டிருந்த
தலைமுடியை வெட்டிக்கொண்டார்கள். கீழாடையை கெண்டைக்காலில் பாதியளவிற்கு உயர்த்தி கட்டிக்கொண்டார்கள்.
நூல். மிஸ்காத். அபூதாவூத்
போர்வையை எரித்து பக்தியைக் காட்டியவர்
ஹஜ்ரத் அப்துல்லாஹிப்னு அப்ருப்னுல் ஆஸ் (ரலி) அவர்கள் கூறுவதாவது
ஒரு தடவை நாங்கள் நபி அவர்களூடன் பிரயாணத்திலிருந்தோம் அப்பொழுது
நான் நபி அவர்களின் சமூகம் சென்றேன் என் மேனியின் மீது குங்குமச் சிவப்பு நிறப் போர்வை
ஒன்றை நான் போர்தியிருந்தேன் அதனைப் பார்த்த நபி அவர்கள் இது என்ன போர்த்தியிருக்கிறீர்
?என்று கேட்டார்கள் நபி அவர்களுடைய அந்தக் கேள்வியினால் அவர்கள்
அதனை வெறுக்கிறார்கள் என்பதை நான் புரிந்து கொண்டேன் நான் வீட்டுக்கு திரும்பிய போது
வீட்டினர் அடுப்பெரித்துக் கொண்டிருந்தார்கள் நான் அந்த போர்வையை அடுப்பிலிட்டு எரித்து
விட்டேன்
மறுநாள் நான் நபி அவர்களின் சமூகத்திற்கு வந்த போது அந்த போர்வை
என்ன ஆனது என்று வினவினார்கள் நான் விஷயத்தைக் கூறினேன் அப்பொழுது நபி அவர்கள் பெண்களில்
யாருக்காவது அதனை அணியக் கொடுத்திருக்கலாமே? பெண்கள் அதனை
அணிவதால் தவறு ஏதுமில்லை என்று கூறினார்கள் போர்வையை எரிக்க வேண்டிய அவசியமில்லை தான்
எனினும் நபி அவர்களுடைய வெறுப்பு ஏற்பட்டு விட்டதால் அதனை வேறு முறையில் பயன் படுத்தலாமா
என்று சிந்தித்துப் பார்க்கும் பொறுமை கூட அவர்களுக்கு உண்டாகவில்லை
எதார்த்தமான வார்த்தைக்கு கொடுத்த முக்கியத்துவம்.
عن جابر بن عبد الله ، قال : أمر أبي بخزيرة ، فصنعت ، ثم أمرني فحملتها إلى رسول الله صلى الله
عليه وسلم ، فأتيته وهو في منزله ، فقال : « ما هذا يا جابر ، ألحم ذا ؟ » قلت : لا
، ولكنها خزيرة ، فأمر بها فقبضت ، فلما رجعت إلى أبي ، قال : هل رأيت رسول الله صلى
الله عليه وسلم ؟ فقلت : نعم ، فقال : هل قال شيئا ؟ فقلت : نعم ، قال : « ما هذا يا
جابر ألحم ذا ؟ » فقال أبي : عسى أن يكون رسول الله صلى الله عليه وسلم قد اشتهى اللحم
، فقام إلى داجن له فذبحها ، ثم أمر بها فشويت ، ثم أمرني فحملته إلى رسول الله صلى
الله عليه وسلم ، فانتهيت إليه وهو في مجلسه ذلك ، فقال : « ما هذا يا جابر ؟ » فقلت
: يا رسول الله ، رجعت إلى أبي فقال : هل رأيت رسول الله صلى الله عليه وسلم ؟ فقلت
: نعم ، فقال : هل ، قال شيئا ؟ قلت : نعم ، قال : « ما هذا ألحم ذا ؟ » فقال أبي
: عسى أن يكون رسول الله صلى الله عليه وسلم قد اشتهى اللحم ، فقام إلى داجن عنده فذبحها
، ثم أمر بها فشويت ، ثم أمرني فحملتها إليك ، فقال رسول الله صلى الله عليه وسلم
: « جزى الله الأنصار عنا خيرا ، ولا سيما عبد الله بن عمرو بن حرام ، وسعد بن عبادة
நபி (ஸல்) அவர்கள் மீது அளப்பெறும் நேசம் கொண்டிருந்த அப்துல்லாஹ்
(ரலி) அவர்கள் ஒருமுறை தம்மகனிடம் இனிப்புக்கஞ்சி தயார் செய்து நபி (ஸல்) அவர்களுக்கு
கொடுத்து வருமாறு கூற அவ்வாறே மகனும் கஞ்டி தயார் செய்து நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு
வந்தார் அதனைக் கண்ட நபி(ஸல்) அவர்கள் ஜாபிரே
இதென்ன இறைச்சியா என்று கேட்டார்கள் இல்லை யாரஸூலல்லாஹ் இனிப்புக் கஞ்சி என் தந்தை
என்னை இனிப்புக் கஞ்சி தயார் செய்து தங்களுக்கு கொடுக்குமாறு எனக்கு உத்தரவு விட்டார்கள்
என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் பின்னர் மகன் ஜாபிர் இவரிடம் வந்ததும் கொடுத்தீரா? நபி என்ன கூறினார்கள்? என்று வினவினார்
அப்பொழுது மகன் நான் நபியிடம் சென்றதும் இதென்ன இறைச்சியா? என்று நபி வினவினார்கள் என்று கூறியதும் நபி அவர்கள் இறைச்சியை
விரும்பலாம் என்று கூறி உடனே வீட்டிலிருந்த ஒரு ஆட்டை அறுத்து பொரித்து மீண்டும் மகனிடம்
கொடுத்தனுப்பினார்கள் மகன் கொண்டு வந்து கொடுக்கவே அதனைப் பெற்றுக் கொண்ட நபி அவர்கள்
அன்ஸாரிகளுக்கு அல்லாஹ் சிறந்த கூலியை வழங்குவானாக குறிப்பாக ஹராம் அவர்களின் மகனான
அம்ர் அவர்களின் மகன் அப்துல்லாஹ்வுக்கும் சஃது இப்னு உப்பாதா அவர்களுக்கும் அல்லாஹ்
சிறந்த கூலியை வழங்குவானாக என்று பிரார்த்தித்தார்கள்..
நூல். உஸ்துல் கஃபா.
மற்றொரு நிகழ்ச்சி.
வாஇல் (ரலி) அவர்களின் ஒரு நிகழ்ச்சி
ஒரு தடவை நபி அவர்களின் சமூகத்திற்குச் சென்றிருந்தேன் அப்பொழுது
என்னுடைய தலை முடி மிக நீலமாக வளர்ந்திருந்தது நபி அவர்களின் அருகில் நான் சென்றவுடன்
ஃதுபாப் ஃதுபாப் என்ற வார்த்தைகளைக் கூறினார்கள் என்னுடைய முடியைப் பார்த்துத் தான்
இவ்வாறு கூறினார்கள் என்று நினைத்துக் கொண்டு வீட்டுக்குச் சென்று முடியைக் கத்தரித்துக்
கொண்டேன் மறுநாள் நான் நபிஅவர்களுடைய சமூகத்திற்குச் சென்ற போது நான் உம்மைச் சொல்லவில்லை
எனினும் இது நன்றாக இருக்கிறது என்று கூறினார்கள்
ஃதுபாப் என்பதற்கு துற்குறி கெடுதிஎன்னும் பொருட்கள் இருக்கின்றன
இது சமிக்ஞைகளின் மீது சரணாகதி அடையக் கூடியவர்களின் பண்பாகும் நோக்கத்தைப் புரிந்து
கொண்டபின் அது தவறாகப் புரிந்து இருந்தாலும் அதனை அமல் படுத்துவதில் அவர்கள் சிறிதும்
தாமதம் செய்யவில்லை
இவ்விடத்தில் அவர்கள் உம்மைச் சொல்லவில்லை என்று நபி அவர்கள்
கூறிவிட்டார்கள் எனினும் அந்த ஸஹாபி தம்மைப் பற்றிக் கூறப்பட்டது என்று விளங்கியதால்
அதனைத் தாமதப் படுத்த துணிவு கொள்ளவில்லை.
சுன்னத்தை பின் பற்ற எடுத்துக்கொண்ட சிரமம்
وذهب بصره، فاتخذ خيطاً من مصلاه إلى باب حجرته، ووضع عنده مكتلاً فيه تمر،
فكان إذا جاء المسكين فسلم، أخذ من ذلك المكتل، ثم أخذ بطرف الخيط حتى يناوله، فكان
أهله يقولون: نحن نكفيك، فقال: سمعت رسول الله صلى الله عليه وسلم يقول: " مناولة
المسكين تقي ميتة السوء
"
ஹாரிஸா (ரலி) அவர்களுக்கு பிற்காலத்தில் கண்பார்வை இழந்த பிறகு
அவர் தம் தொழும் இடத்தில் இருந்து வீட்டு வாசல்வரை ஒரு கயிரை கட்டி அதனை பிடித்துக்கொண்டே
வாசல் வரை வந்து யாசகருக்கு தர்மம் கொடுப்பார். அப்போது அவரின் குடும்பத்தார்கள் எங்களிடம்
சொன்னால் நாங்கள் கொடுப்பேமே நீங்கள் ஏன் சிரமம் எடுத்து கொள்கிறீர்கள் என்று சொன்னபோது.
அதற்கு ஹாரிஸா (ரலி) அவர்கள் பதில் கூறினார்கள்.
நாயகம் (ஸல்) அவர்கள் கூற
நான் கேட்டிருக்கிறேன் ஏழைக்கு உதவி செய்வது கெட்ட மரணத்தை விட்டும் பாதுகாக்கும் என்று
அதனால்தான் இவ்வளவு சிரமம் எடுத்துக்கொண்டு நான் என் கரத்தால் தர்மம் கொடுக்கிறேன்.
நூல். உசுதுல் கஃபா.
சுன்னத்தை பின் பற்றுவதில் அதிக கவனம்..
عَنْ ثَوْبَانَ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَتَقَبَّلُ
لِي بِوَاحِدَةٍ وَأَتَقَبَّلُ لَهُ بِالْجَنَّةِ قُلْتُ أَنَا قَالَ لَا تَسْأَلْ
النَّاسَ شَيْئًا
قَالَ فَكَانَ ثَوْبَانُ يَقَعُ سَوْطُهُ وَهُوَ رَاكِبٌ فَلَا يَقُولُ لِأَحَدٍ
نَاوِلْنِيهِ حَتَّى يَنْزِلَ فَيَأْخُذَهُ
ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் ஒன்றே ஒன்றுக்கு யார் பொறுப்பு ஏற்கிறாரோ
அவருக்கு சுவனம் செல்ல நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும்.
ஸவ்பான் (ரலி) அவர்கள் நான் பொறுப்பு ஏற்கிறேன் என்று கூறினார்கள். மக்களிடம் எதையும்
வேண்டாதீர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவ்வாறே எதையும் வேண்டாமல் இருந்தார்
எந்த அளவிற்கு என்றால் வாகனத்தில் செல்லும்போது சாட்டை கீழே விழுந்தாலும் கூட யாரிடமும் எடுத்து கேட்காமல் அவரே வாகனத்தில் இருந்து
எடுத்துக் கொள்வார்.
நூல்- இப்னுமாஜா 1827. அபூதாவூத்
1400
மரணத்துக்கு பிறகும் நபியின் தொடர்பில் இருக்க ஆசை..
- حَدَّثَنَا يَحْيَى بْنُ
بُكَيْرٍ حَدَّثَنَا يَعْقُوبُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ عَنْ أَبِي حَازِمٍ قَالَ سَمِعْتُ
سَهْلَ بْنَ سَعْدٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ
جَاءَتْ امْرَأَةٌ بِبُرْدَةٍ قَالَ أَتَدْرُونَ مَا الْبُرْدَةُ فَقِيلَ لَهُ
نَعَمْ هِيَ الشَّمْلَةُ مَنْسُوجٌ فِي حَاشِيَتِهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ إِنِّي
نَسَجْتُ هَذِهِ بِيَدِي أَكْسُوكَهَا فَأَخَذَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ
وَسَلَّمَ مُحْتَاجًا إِلَيْهَا فَخَرَجَ إِلَيْنَا وَإِنَّهَا إِزَارُهُ فَقَالَ رَجُلٌ
مِنْ الْقَوْمِ يَا رَسُولَ اللَّهِ اكْسُنِيهَا فَقَالَ نَعَمْ فَجَلَسَ النَّبِيُّ
صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الْمَجْلِسِ ثُمَّ رَجَعَ فَطَوَاهَا ثُمَّ
أَرْسَلَ بِهَا إِلَيْهِ فَقَالَ لَهُ الْقَوْمُ مَا أَحْسَنْتَ سَأَلْتَهَا إِيَّاهُ
لَقَدْ عَلِمْتَ أَنَّهُ لَا يَرُدُّ سَائِلًا فَقَالَ الرَّجُلُ وَاللَّهِ مَا سَأَلْتُهُ
إِلَّا لِتَكُونَ كَفَنِي يَوْمَ أَمُوتُ قَالَ سَهْلٌ فَكَانَتْ كَفَنَهُ
அபூ ஹாஸிம் அறிவித்தார்.
பெண்மணி நபி(ஸல்) அவர்களிடம் புர்தா -- குஞ்சங்கட்டப்பட்ட ஒரு
சால்வையைக் கொண்டு வந்தார் என்று ஸஹ்ல்(ரலி) கூறிவிட்டு --"புர்தா என்றால் என்ன
என்பது உங்களுக்குத் தெரியுமா?' என்று கேட்டபோது
(அங்கிருந்தோர்) 'ஆம்! புர்தா
என்பது சால்வைதானே! என்றனர். ஸஹ்ல் 'ஆம்' எனக் கூறிவிட்டு மேலும்,
அப்பெண்மணி 'நான் என்னுடைய கையாலேயே இதை நெய்திருக்கிறேன்.
இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன்" என்றதும் அது தேவையாயிருந்ததால்
நபி(ஸல்) அவர்கள் அதைப் பெற்றார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து எங்களிடம்
வந்தபோது ஒருவர் 'இது எவ்வளவு
அழகாக இருக்கிறது! எனக்கு இதை நீங்கள் அணிவித்து விடுங்கள்" என்று கேட்டார். உடனே
அங்கிருந்தோர் 'நீர் செய்வது முறையன்று; நபி(ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள்.
நபி(ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து
கொண்டே நீர் அதை அவர்களிடன் கேட்டு விட்டீரே'
எனக் கூறினார்கள். அதற்கவர் அல்லாஹ்வின் மீது ஆணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து
கொள்வதற்ககாகக் கேட்கவில்லை: அது எனக்கு கஃபனாக ஆகி விடவேண்டும் என்றே கேட்டேன்"
என்றார். 'பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது"
என்று ஸஹ்ல் கூறினார்.
நூல். புகாரி 1277.
நபிவழிக்கு மாற்றம் செய்ததற்காக கோபம்..
عن ابن بريدة، عن عبد الله بن مغفل " أنه رأى رجلاً يخذف، فقال: لا تخذف،
فإن رسول الله صلى الله عليه وسلم نهى أو: كره - الخذف لا أحدثك به - أو: لا أحدثك
أبداً.
அப்துல்லாஹிப்னு மஃபல் (ரலி) அவர்களுடைய சகோதர்ரின் மகனான ஒரு
சிறுவன் பெருவிரல் மீது பொடிக்கல்லை வைத்துச் சுண்டி விளையாடிக் கொண்டிருந்தான் இதனைப்
பார்த்த அப்துல்லாஹ் அவர்கள் சகோதர்ரே இவ்விளையாட்டினால் எவ்விதப் பலனும் கிடையாது
இதனால் வேட்டையாடவும் முடியாது எதிரிகளுக்கு நஷ்டத்தை விளைவிக்கவும் முடியாது எதிர்பாரத
விதமாக பட்டு விட்டால் அவருடைய கண் போய் விடும் அல்லது பல் உடைந்து விடும் என்று நபி
(ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் என்று அந்த சிறுவரிடம் கூறினார்கள் அந்தச் சிறுவன் சிறிய
தந்தையவர்கள் ச்ற்று அப்பால் சென்றதும் மீண்டும் அவ்வாறே விளையாட ஆரம்பித்தான் இதனைப்
பார்த்த அப்துல்லாஹ்(ரலி) அவர்களுக்கு கோபம் ஏற்பட்டு நான் நபி அவர்களுடைய கட்டளையை
கூறுகிறேன் நீ அதனைக் கேட்டு விட்டு மீண்டும் விளையடுகிறாயா அல்லாஹ்வின் மீது ஆனையாக
இனிமேல் எப்பொழுதும் உன்னுடன் பேசவே மாட்டேன் என்று கூறிச் சென்று விட்டார்கள் மற்றோர்
அறிவிப்பில் அல்லாவின் மீது சத்தியமாக நீ நோயுற்றால் வந்து விசாரிக்கவும் மாட்டேன்
உன்னுடைய ஜனாஸாவில் கலந்து கொள்ளவும் மாட்டேன் என்று கூறினார்கள் என அறிவிக்கப் பட்டுள்ளது,
நூல். மிஸ்காத்.
எனவே
நபியுடைய நேசத்தை உதட்டலவில் வைக்காமல் உள்ளத்தில் வைத்து நபியின் மீது உண்மையான அன்பு கொண்டு நம் வாழ்வில் எல்லா விஷயங்களிலும் நபிவழியை பின்பற்றி நபியோடு சொர்க்கத்தில் இருக்கும் பாக்கியத்தை நம் எல்லோருக்கும் அல்லாஹ் தருவானாக ஆமீன்.