வியாழன், 13 ஜூன், 2013

இல்லத்தை இஸ்லாமயமாக்குவோம்



இல்லத்தை இஸ்லாமயமாக்குவோம்

ஒரு மனிதன் இவ்வுலகில் பெறுகின்ற மிக முக்கியமான பாக்கியங்களில் ஒன்று வீடாகும். அதிலும் சொந்த வீட்டில் வசிப்பது என்பது மிகப் பெரும் பாக்கியமாகும். ஒரு சொந்த வீட்டைக் கட்டுவதற்காககட்டிய மனைவியைப் பிரிந்து பல்லாண்டுகள் பாலைவனத்தில் தன் இளமையைத் தொலைக்கும் மக்கள் கணக்கிலடங்காது. எலி வலையானாலும் தனி வலை வேண்டும்வீட்டை கட்டிப்பார்கல்யாணத்தை நடத்திப் பார் என்பதெல்லாம் வீட்டின் முக்கியத்துவத்தை உணர்த்துவதற்காக மனிதனால் உருவாக்கப்பட்ட பழமொழிகளாகும்.

கொடும் வெப்பத்திலிருந்தும்ஆட்டும் குளிரிலிருந்தும் மனிதனைப் பாதுகாப்பது வீடு தான். அந்நியப் பார்வைகளை விட்டும் சுதந்திரமாக இருப்பதற்கும், மனைவியுடன் இன்பகரமான இல்வாழ்க்கை நடத்துவதற்கும் வசதியான இடம் வீடு தான். பெண்கள் சுதந்திரமாக வலம் வருவதற்குப் பாதுகாப்பான இடம் வீடு தான். ஒருவர் தன்னுடைய செல்வத்தினையும்,பொருட்களையும் பாதுகாத்து வைப்பதற்குரிய சிறந்த இடம் தான் வீடு. வெளி வாழ்க்கையில் இன்னலையும்,சிரமங்களையும்கஷ்டங்களையும் தாங்கி வருவோர்க்கு நிம்மதி தரும் இடம் அவன் வசிக்கும் வீடு தான்.

வசிப்பதற்கு ஒரு வீடில்லாமல் தெரு ஓரங்களிலும்சாலை ஓரங்களிலும்,பிளாட்பாரங்களிலும்மூலை முடுக்குகளிலும்குப்பை மேடுகளிலும், சாக்கடைகளுக்கு அருகிலும்ஆடுமாடுகளுடனும்தெரு நாய்களுடனும் தங்களுடைய வாழ்நாளைக் கழிக்கின்ற எத்தனையோ இலட்சம் மக்களை நாம் அன்றாடம் கண்டு வருகின்றோம்.  இவர்களின் நிலையுடன் ஒப்பிட்டுப் பார்க்கும் போது தான் வீடுகளில் வசிப்பவர்கள் தங்களுக்கு இறைவன் செய்திருக்கும் அருளை உணர முடியும்.
وَاللَّهُ جَعَلَ لَكُمْ مِنْ بُيُوتِكُمْ سَكَنًا وَجَعَلَ لَكُمْ مِنْ جُلُودِ الْأَنْعَامِ بُيُوتًا تَسْتَخِفُّونَهَا يَوْمَ ظَعْنِكُمْ وَيَوْمَ إِقَامَتِكُمْ وَمِنْ أَصْوَافِهَا وَأَوْبَارِهَا وَأَشْعَارِهَا أَثَاثًا وَمَتَاعًا إِلَى حِينٍ

இதோ வீடு எனும் அருளைப் பற்றி இறைவன் கூறுவதைப் பாருங்கள்:
உங்கள் வீடுகளில் உங்களுக்கு அல்லாஹ் நிம்மதியை ஏற்படுத்தினான். கால்நடைகளின் தோல்களிலிருந்து உங்களுக்குக் கூடாரங்களை ஏற்படுத்தினான். உங்கள் பிரயாணத்தின் போதும்ஊரில் நீங்கள் தங்கியிருக்கும் போதும் அவற்றை எளிதாக எடுத்துச் செல்கிறீர்கள். செம்மறி ஆட்டு ரோமங்கள்வெள்ளாட்டின் ரோமங்கள்ஒட்டகத்தின் ரோமங்கள் ஆகியவற்றிலிருந்து ஆடைகளையும்குறிப்பிட்ட காலம் வரை (பயன்படும்) வசதிகளையும் ஏற்படுத்தினான். அல் குர்ஆன் 16:80

வாழ்வதற்கு வீடில்லாமல் தட்டழிந்து திரிவது இறைவனுடைய சோதனையாகும்.
யூதர்கள் செய்த அநியாயத்தின் காரணமாக இறைவன் அவர்களை வாழ்வதற்கு வீடில்லாமல் அவர்களை வீட்டை விட்டும் வெளியேற்றி தண்டனை வழங்கினான்.
هُوَ الَّذِي أَخْرَجَ الَّذِينَ كَفَرُوا مِنْ أَهْلِ الْكِتَابِ مِنْ دِيَارِهِمْ لِأَوَّلِ الْحَشْرِ مَا ظَنَنْتُمْ أَنْ يَخْرُجُوا وَظَنُّوا أَنَّهُمْ مَانِعَتُهُمْ حُصُونُهُمْ مِنَ اللَّهِ فَأَتَاهُمُ اللَّهُ مِنْ حَيْثُ لَمْ يَحْتَسِبُوا وَقَذَفَ فِي قُلُوبِهِمُ الرُّعْبَ يُخْرِبُونَ بُيُوتَهُمْ بِأَيْدِيهِمْ وَأَيْدِي الْمُؤْمِنِينَ فَاعْتَبِرُوا يَا أُولِي الْأَبْصَارِ

அவனே வேதமுடையோரில் உள்ள (ஏக இறைவனை) மறுப்போரை அவர்களது இல்லங்களிலிருந்து முதல் வெளியேற்றமாக வெளியேற்றினான். அவர்கள் வெளியேறுவார்கள் என நீங்கள் எண்ணவில்லை. தமது கோட்டைகள் அல்லாஹ்விடமிருந்து தங்களைக் காக்கும் என அவர்கள் நினைத்தனர். அவர்கள் எண்ணிப் பார்த்திராத வழியில் அவர்களை அல்லாஹ் அணுகினான். அவர்களது உள்ளங்களில் அச்சத்தை விதைத்தான். தமது கைகளாலும்நம்பிக்கை கொண்டோரின் கைகளாலும் தமது வீடுகளை நாசமாக்கினார்கள். அறிவுடையோரே படிப்பினை பெறுங்கள்! அவர்கள் வெளியேறுவதை அல்லாஹ் விதித்திருக்காவிட்டால் அவர்களை இவ்வுலகில் தண்டித்திருப்பான். மறுமையில் அவர்களுக்கு நரகின் வேதனை இருக்கிறது. அவர்கள் அல்லாஹ்வையும்அவனது தூதரையும் பகைப்போராக இருந்ததே இதற்குக் காரணம். யார் அல்லாஹ்வைப் பகைக்கிறாரோ அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். அல்குர்ஆன் 59:2-4

வீடில்லாமல் வாழ்வது மிகப் பெரும் சோதனை என்பதால் தான் அதனை அநியாயம் செய்த யூதர்களுக்கு இறைவன் தண்டனையாக விதித்தான். இதிலிருந்து ஒருவன் வாழ்வதற்குரிய வீட்டைப் பெற்றிருப்பது இறைவன் அவனுக்குச் செய்த மிகப் பெரும் பேரருள் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம்.

இவ்வளவு சிறப்பு மிக்க வீடு என்னும் பாக்கியத்தைப் பெற்றவர்கள் அவ்வீட்டை சொர்க்கத்திற்கு வழிகாட்டும் வீடாக ஆக்க வேண்டாமா?

ஒரு முன்மாதிரி முஸ்லிம் வீடு எவ்வாறு இருக்க வேண்டும் என்பதற்குரிய வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

இறை நினைவில் இனிய இல்லம்
ஒரு முஃமினுடைய வீடு இறைவனை நினைவு கூரும் இல்லமாக இருக்க வேண்டும். அங்கு இறை வசனங்கள் ஓதப்பட வேண்டும். மார்க்கம் போதிக்கப்பட வேண்டும்.

இறைவன் நினைவு கூரப்படும் இல்லத்திற்கும் இறை நினைவை இழந்த இல்லத்திற்கும் இறைத்தூதர் காட்டும் உவமையைப் பாருங்கள்.
عَنْ أَبِي مُوسَى
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَثَلُ الْبَيْتِ الَّذِي يُذْكَرُ اللَّهُ فِيهِ وَالْبَيْتِ الَّذِي لَا يُذْكَرُ اللَّهُ فِيهِ مَثَلُ الْحَيِّ وَالْمَيِّتِ


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படும் இல்லத்தின் நிலை உயிருள்ளவர்களின் நிலைக்கும்,அல்லாஹ் நினைவு கூரப்பட்டுப் போற்றப்படாத இல்லத்தின் நிலை உயிரற்றவனின் நிலைக்கும் ஒத்திருக்கிறது. அறிவிப்பவர்:அபூ மூசா (ரலி) நூல்: முஸ்லிம் 1429\

இறந்தவர்கள் அடக்கம் செய்யப்படும் மையவாடியில் தொழுகை நடைபெறாது. அங்கு குர்ஆன் ஓதப்படாது. மார்க்க ஞானங்கள் பேசப்படாது. ஏனென்றால் அங்கு இருப்பவர்கள் இறந்தவர்கள். மண்ணோடு மண்ணாகி மக்கிப் போனவர்கள்.

நாம் உயிரோடு இருந்தும் நம்முடைய வீட்டில் இறைவன் நினைவு கூரப்படவில்லையென்றால்அங்கு மார்க்க ஞானங்கள் போதிக்கப்படவில்லை என்றால் நம்முடைய வீடும்கப்ருஸ்தானும் ஒன்று தான். ஒரு சிறிய வித்தியாசம் அங்கு உயிரிழந்தவர்கள் உள்ளார்கள். இங்கு உள்ளம் செத்தவர்கள் உள்ளார்கள்
இன்று நம்முடைய வீடுகள் இறைவனை நினைவு கூரும் இல்லங்களாக உள்ளதாஅல்லது நரகத்திற்கு வழிகாட்டும் இல்லங்களாக உள்ளதாநாம் சற்று சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளோம்.

நம்முடைய வீடுகளில் மார்க்கம் தடுத்த இசைப்பாடல்கள் தான் ஆடியோ,வீடியோக்களிலும்தொலைக்காட்சிகளிலும் எல்லா நேரங்களிலும் ஓங்கி ஒலிக்கின்றனஆபாசங்கள் நிறைந்த சினிமாக்களும்மூடநம்பிக்கைகளை போதிக்கும் தொடர்களும் தான் நம்முடைய வீட்டுத் தொலைக்காட்சிகளில் அன்றாடம் ஓடிக் கொண்டிருக்கின்றன. இந்நிலையில் நம்முடைய வீடு இருந்தால் அது இறை நினைவை ஏற்படுத்துமாநம்முடைய பிள்ளைகள் இறையச்சமுடைய பிள்ளைகளாக உருவாவார்களா?

இன்றைக்கு அதிகமான பெண் குழந்தைகளும்ஆண் குழந்தைகளும் பருவ வயதை அடைவதற்கு முன்பாகவே காதல் என்ற போதையில் மூழ்குவதற்குக் காரணம் நம்முடைய வீட்டுச் சூழல் தான். அது இறை நினைவை மறக்கச் செய்து இறை மறுப்பின் வாசல்களை திறந்து விடக்கூடியதாக உள்ளதுநம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்க என்ன செய்யலாம்?

இதோ இறைத்தூதரின் வழிகாட்டுதல்களைப் பார்ப்போம்.

வீட்டில் குர்ஆன் ஓதுதல்
عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَجْعَلُوا بُيُوتَكُمْ مَقَابِرَ إِنَّ الشَّيْطَانَ يَنْفِرُ مِنْ الْبَيْتِ الَّذِي تُقْرَأُ فِيهِ سُورَةُ الْبَقَرَةِ

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகைஓதல் நடைபெறாத) சவக் குழிகளாக ஆக்கிவிடாதீர்கள். "அல்பகராஎனும் (இரண்டாவது) அத்தியாயம் ஓதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான்.
அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)  நூல்: முஸ்லிம் 1430
عن ابن مسعود قال : « قال رجل : يا رسول الله علمني شيئاً ينفعني الله به . قال » اقرأ آية الكرسي فإنه يحفظك وذريتك ويحفظ دارك ، حتى الدويرات حول دارك « »

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் வீடுகளிலே சூரத்துல் பகராவை ஓதுங்கள். எந்த வீட்டிலே சூரத்துல் பகரா ஓதப்படுகிறதோ அங்கே ஷைத்தான் நுழைய மாட்டான். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் (ரலி)

 நூல்: ஹாகிம் 2063
عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ كَتَبَ كِتَابًا قَبْلَ أَنْ يَخْلُقَ السَّمَوَاتِ وَالْأَرْضَ بِأَلْفَيْ عَامٍ أَنْزَلَ مِنْهُ آيَتَيْنِ خَتَمَ بِهِمَا سُورَةَ الْبَقَرَةِ وَلَا يُقْرَأَانِ فِي دَارٍ ثَلَاثَ لَيَالٍ فَيَقْرَبُهَا شَيْطَانٌ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வானங்கள் மற்றும் பூமியைப் படைப்பதற்கு இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு முன்பாக ஒரு ஏட்டை எழுதினான். அந்த ஏட்டிலிருந்து இரண்டு வசனங்களை அருளினான். அந்த இரண்டைக் கொண்டு சூரத்துல் பகராவை முடித்தான். மூன்று இரவுகள் ஒரு வீட்டிலே அந்த இரண்டு வசனங்களும் ஓதப்படவில்லையென்றால் ஷைத்தான் அவ்வீட்டை நெருங்கியே தீருவான். அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி) நூல்: திர்மிதி 2807

மேற்கண்ட ஹதீஸ்கள் வீட்டில் குர்ஆன் ஓதுவதன் மூலம் நம்முடைய வீடுகளுக்குக் கிடைக்கும் பாக்கியங்களைத் தெளிவாக எடுத்துரைக்கின்றன. குர்ஆன் ஓதப்படாத வீடுகள் சவக்குழிகளுக்குச் சமம் என்று நபி (ஸல்) எச்சரிக்கை செய்துள்ளனர். மேலும் நம்முடைய வீடுகளில் குர்ஆன் ஓதுவதின் மூலம் ஷைத்தானுடைய வழிகேடுகளை விட்டும் நம்முடைய வீடுகளுக்கு இறைவன் பாதுகாப்பைத் தருகின்றான். நம்முடைய வீடு இறை நினைவு நிறைந்த வீடாக இருக்கும்.

சுன்னத்தான தொழுகைகளை வீட்டில் நிறைவேற்றுதல்
عَنْ ابْنِ عُمَرَ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اجْعَلُوا مِنْ صَلَاتِكُمْ فِي بُيُوتِكُمْ وَلَا تَتَّخِذُوهَا قُبُورًا


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களது தொழுகைகüல் சிலவற்றை உங்களுடைய இல்லங்கüலும் நிறைவேற்றுங்கள் உங்களுடைய இல்லங்களை கப்று (சவக்குழி)களாக ஆக்கிவிடாதீர்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 432

வீட்டிலுள்ளோருக்கு ஆன்மீகப் பயிற்சி
عَنْ عَائِشَةَ قَالَتْ
كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُصَلِّي مِنْ اللَّيْلِ فَإِذَا أَوْتَرَ قَالَ قُومِي فَأَوْتِرِي يَا عَائِشَةُ


ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள் : இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இரவில் இரவுத் தொழுகையை நிறைவேற்றக் கூடியவர்களாக இருந்தார்கள், இன்னும் அவர்கள் தொழ ஆரம்பிக்கும் பொழுது, ஓ..! ஆயிஷாவே எழுந்து வித்ருத் தொழுங்கள் என்று கூறக் கூடியவர்களாக இருந்தார்கள். (முஸ்லிம், முஸ்லிம் பி ஷர்ஹ் அல் நவவி, 6-23).

இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரவில் எழுந்து தொழக் கூடியவனுக்கு அல்லாஹ் கருணை காட்டுவானாக, அவன் எழுந்து (விட்ட பின்) அவனது மனைவியையும் எழுப்பி, இன்னும் அவள் (எழுந்திருக்க) மறுத்து விடுவாளென்றால் அவளது முகத்தில் தண்ணீரைத் தெளிக்கட்டும்.''. (அஹ்மத், அபூதாவூத், ஸஹீஹ் அல் ஜாமிஃ, 3488).

இன்னும் வீட்டிலுள்ளோரை தானம் தர்மம் செய்யத் தூண்டுவது அவர்களது இறைநம்பிக்கையை அதிகரிக்கும். இறைத்தூதர் (ஸல்) அவர்கள் அதிகம் ஆர்வமூட்டியிருக்கின்றார்கள், அவர்கள், ஓ பெண்களே..! தான தர்மம் வழங்குங்கள், நரகத்தில் உள்ளவர்களில் நீங்கள் தான் அதிகமாக இருக்கின்றீர்கள் என்பதைப் பார்த்திருக்கின்றேன். (புகாரீ, அல் ஃபத்ஹ், 1-405)


குடும்பத்தாருக்கு இஸ்லாமிய அறிவூட்டல்

இறைவனுக்குக் கீழ்ப்படிந்து நடக்கக் கூடிய நல்லடியார்களாக தன்னுடைய குடும்ப அங்கத்தவர்களை உருவாக்க விளைவது குடும்பத் தலைவர்களது கடமையாகும், இதனை அல்லாஹ் தனது திருமறையில் இவ்வாறு தெளிவாக்குகின்றான் :

முஃமின்களே! உங்களையும், உங்கள் குடும்பத்தாரையும் (நரக) நெருப்பை விட்டுக் காப்பாற்றிக் கொள்ளுங்கள்; அதன் எரிபொருள் மனிதர்களும், கல்லுமேயாகும் (66:6)

தனது குடும்ப அங்கத்தவர்களை நன்மையின் பால் அழைத்து, தீமைகளிலிருந்து விலகி இருக்கச் செய்து, அவர்களை இஸ்லாமிய நிழலின் கீழ் வளர்த்தெடுப்பதற்கான கடமைகள் அதன் குடும்பத் தலைவருக்குரிய தலையாய கடமை என்பதை மேல்காணும் வசனம் மூலம் இறைவன் தெளிவாக்குகின்றான். மேற்கண்ட வசனத்திற்கு சில இஸ்லாமியப் பெருந்தகைகள் கூறி இருக்கின்ற விளக்கங்கள், குடும்பத் தலைவன் மீது எத்தகைய பொறுப்புக்களை இறைவன் சுமத்தியுள்ளான் என்பது விளங்கும்.

கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுவதாவது : அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு நடக்கும்படி கட்டளை இட வேண்டும், அவனுக்கு வழிபட மறுப்பதனின்றும் அவர்களைத் தடுக்கவேண்டும், அல்லாஹ்வின் ஏவல்களின் அடிப்படையில் அவர்களை வழி நடத்த வேண்டும் இன்னும் அவற்றை ஏற்றுப் பின்பற்றுவதற்காக அவர்களுக்கு உதவவும் வேண்டும்.

அத்தஹாக் மற்றும் முகாதில் (ரஹ்-அலை) ஆகியோர்கள் கூறுவதாவது : தனது குடும்பத்தவர்களுக்கு அறிவூட்டுவது ஒரு முஸ்லிமின் மீதுள்ள கடமையாகும், இன்னும் சொந்தபந்தங்களுக்கும், பெண்ணடிமைகளுக்கும், அல்லாஹ் அவர்களுக்கு ஏவிய நன்மையானவற்றின் மீதும், இன்னும் அவன் அவர்கள் மீது விலக்கியவற்றின் மீதும், அதனைப் பின்பற்றி நடக்குமாறு அவர்களை அறிவுறுத்த வேண்டும்.

அலி (ரலி) அவர்கள் கூறினார்கள் : (உங்கள் குடும்பத்தவர்களுக்கு) அறிவூட்டுங்கள், இன்னும் ஒழுக்கத்தை பேணச் செய்யுங்கள்.''

அத்தபரி (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : நம்முடைய குழந்தைகளுக்கு மார்க்கத்தைப் பற்றியும், இன்னும் நன்மையானவற்றைப் பற்றியும் அறிவூட்டுவது கடமையாகும், இன்னும் அவர்களுக்குத் தேவையான நல்ல பண்பாடுகளையும் கூட அவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும்.

இறைத்தூதர் (ஸல்)அவர்கள் பெண்ணடிமைகளுக்கும் கூட கல்வி அறிவூட்டும்படி அறிவுறுத்தி இருக்கின்றார்கள் என்று சொன்னால், சுதந்திரமானவர்களான உங்களது குழந்தைகள் மற்றும் மனைவிகளின் நிலைமைகள் என்ன? என்பதைச் சற்றுச் சீர்தூக்கிப் பார்க்க வேண்டும்.

இமாம் புகாரீ (ரஹ்) அவர்கள் தனது ஸஹீஹ் புகாரீயில் : அத்தியாயம் : தனது பெண்ணடிமைக்கும் மற்றும் மனைவிக்கும் கல்வி கற்பிப்பது என்ற அத்தியாயத்தில், இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக ஒரு நபிமொழியைப் பதிவு செய்திருக்கின்றார்கள் :

மூன்று விஷயங்களை எவர் நடைமுறைப்படுத்துகின்றாரோ அவருக்கு இரண்டு நன்மைகள் (கிடைக்கும்) : .. ஒரு மனிதனுக்கு பெண்ணடிமை ஒருத்தி இருந்து, அவளுக்கு அவன் நற்பண்புகளைப் போதித்து, அதனை நல்ல முறையில் போதித்து, இன்னும் அவளுக்கு கல்வியறிவூட்டி, இன்னும் அதனை நல்ல முறையில் போதித்து, பின்னர் அவளை சுதந்திரமாக விடுவித்து, பின்னர் அவளை திருமணம் செய்து கொள்கின்றாரோ, அத்தகையவர் இரண்டு நன்மைகளைப் பெற்றுக் கொள்வார்.

இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸ் பற்றிக் கூறுவதாவது : ''மேற்கண்ட நபிமொழி குறிப்பாக பெண்ணடிமையைப் பற்றித் தான் பேசுகின்றது, இன்னும் அது குறிப்பால் உவமையாக மனைவியையும் சுட்டிக் காட்டுகின்றது. அல்லாஹ்விற்குச் செய்ய வேண்டிய கடமைகள் குறித்தும் இன்னும் இறைத்தூதர் (ஸல்) அவர்களின் நடைமுறையைப் பேணுவதன் முக்கியத்துவம் குறித்தும் சுதந்திரமான தன்னுடைய மனைவிக்குப் போதிப்பது என்பது ஒரு அடிமைக்குப் போதிப்பதைக் காட்டிலும் முக்கியத்துவம் மிகுந்தது என்பதைத் தான் மேற்கண்ட நபிமொழி நமக்கு விளக்குகின்றது.

ஒரு ஆண் அவனுக்கு இருக்கின்ற அலுவல்கள், பணிகள் மற்றும் மற்ற தேவைகளுக்கிடையே, தனது மனைவிக்கு இஸ்லாமியக் கல்வியறிவூட்டுவதனைப் பற்றி மறந்தவனாக அசிரத்தையுடையவனாக ஆகி விடுகின்றான். இதற்குச் சரியான பரிகாரம் என்னவென்றால், உங்களது குடும்பத்தார்களுக்காக சில மணித்துளிகளை ஒதுக்குங்கள், இன்னும் பிற சொந்த பந்தங்களுக்காகவும், இன்னும் வீட்டில் இதற்காகவென பயிற்சிப் பட்டறையையும் உருவாக்குங்கள்.

பயிற்சிப் பட்டறை கூடுவதற்கான நேரத்தையும் தீர்மானித்துக் கொள்ளுங்கள், தீர்மானிக்கப்பட்ட அந்த நேரத்தில் தவறாது அனைவரும் வந்து ஆஜராகும்படிச் செய்யுங்கள், இது அவர்கள் மீது நிரந்தரமான தவிர்க்க இயலாத செயல்முறையாகவே அவர்களது வாழ்நாளில் பதிந்துவிடும். இவ்வாறானதொரு வழிமுறை இறைத்தூதர் (ஸல்) அவர்களது காலத்திலும் நிகழ்ந்துள்ளது.

அல் புகாரீ (ரஹ்) அவாகள் கூறுவதாவது : கல்யறிவைத் பெற்றுக் கொள்வதற்கென தனியானதொரு நாளை பெண்களுக்கு ஒதுக்க முடியுமா? என்றதொரு அத்தியாத்தில் : அபூ ஸயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறுவதாவது : இறைத்தூதர் (ஸல்) அவர்களிடம் பெண்கள் கூறினார்கள் : ஆண்களது கூட்டம் எப்பொழுதும் உங்களைச் சுற்றி இருப்பதால், உங்களை நெருங்க எங்களால் இயலாது போய் விடகின்றது, எனவே எங்களுக்கென ஒரு ஒதுக்குங்கள், அன்றைய தினத்தில் நாங்கள் உங்களிடம் வந்து (மார்க்க விஷயங்களைப்) பெற்றுக் கொள்ள முடியும். எனவே, இதன் பொறுட்டு இறைத்தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுக்கென ஒரு நாளை ஒதுக்கி அந்த நாளில் பெண்களைச் சந்திக்க ஆரம்பித்தார்கள், அவர்களுக்கு மார்க்கப் போதனைகளைக் கற்றுக் கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இப்னு ஹஜர் (ரஹ்) அவர்கள் கூறினார்கள் : இதைப் போன்றதொரு நபிமொழியை ஸஹ்ல் இப்னு அபீ ஸாலிஹ் (ரலி) அவர்கள் அபூஹுரைரா (ரலி) அவர்கள் மூலமாக இறைத்தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக அறிவிக்கின்றார்கள் : ''இன்ன இன்ன நபரின் வீட்டில் உங்களை (மார்க்க விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுப்பதற்காக) நியமனம் செய்திருக்கின்றேன்', (அவ்வாறு நியமனம் செய்யப்பட்ட நபர்) அவர்களிடம் வந்தார், இன்னும் அவர்களிடம் (மார்க்க விஷயங்கள் பற்றிப்) பேசினார்.''

இதிலிருந்து நாம் விளங்கிக் கொள்வது என்னவென்றால் பெண்கள் வீட்டிலிருந்து கற்றுக் கொள்ள வேண்டும், அவர்களுக்கு மார்க்க விஷயங்கள் பற்றி அறிவை ஊட்ட வேண்டும் என்பதே, இன்னும் நபித்தோழியர்கள் இஸ்லாமிய மார்க்க விஷயங்கள் பற்றி அறிந்து கொள்வதில் எந்தளவு அக்கறை உள்ளவர்களாக இருந்துள்ளார்கள் என்பதையும் நாம் அறிந்து கொள்ள முடிகின்றது. அறிவைப் பெற்றுக் கொள்வதனை ஆண்களுக்கும் மட்டும் தான் என்றால், பெண்களுக்கு அதற்கான சந்தர்ப்பம் வழங்கவில்லை என்றால், அது மிகவும் படுபாதகமான விளைவுகளையும் உண்டாக்கி விடும். தாய் தான் குழந்தையின் முதல் பள்ளிக் கூடம். அத்தகைய தாயானவள் கல்வி கற்காதவளாகவும், இஸ்லாத்தைப் பற்றி அறிவில்லாதவளாகவும் இருப்பாளென்றால், அவள் தன்னுடைய குழந்தைக்கும் இன்னும் தன்னுடைய உறவினர்களுக்கும் இஸ்லாமிய அழைப்புப் பணி செய்வது எவ்வாறு?!

வீட்டிலிருந்து ஷைத்தானை விரட்டும் இறை நினைவு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தமது இல்லத்திற்குள் நுழையும் போதும் உணவு உண்ணும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்தால், ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்கு (இங்கே) தங்குமிடமும் இல்லைஉண்ண உணவுமில்லை'' என்று கூறுகிறான். ஒருவர் இல்லத்திற்குள்  நுழையும் போது அல்லாஹ்வை நினைவு கூராவிட்டால் ஷைத்தான் (தன் கூட்டத்தாரிடம்), "இன்றைய இரவில் உங்களுக்குத் தங்குமிடம் கிடைத்துவிட்டது'' என்று சொல்கிறான்.

அவர் உணவு உண்ணும்போது அல்லாஹ்வின் பெயர் கூறாவிட்டால் ஷைத்தான் "இன்றைய இரவில் நீங்கள் தங்கும் இடத்தையும் உணவையும் அடைந்து கொண்டீர்கள்'' என்று சொல்கிறான்.அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி)
நூல்: முஸ்லிம் 4106


வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு
عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ قَالَ يَعْنِي إِذَا خَرَجَ مِنْ بَيْتِهِ بِسْمِ اللَّهِ تَوَكَّلْتُ عَلَى اللَّهِ لَا حَوْلَ وَلَا قُوَّةَ إِلَّا بِاللَّهِ يُقَالُ لَهُ كُفِيتَ وَوُقِيتَ وَتَنَحَّى عَنْهُ الشَّيْطَانُ


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் தனது வீட்டிலிருந்து வெளியேறும் போது பிஸ்மில்லாஹி தவக்கல்து அலல்லாஹி லாஹவ்ல வலாகுவ்வத்த இல்லாபில்லாஹ் (அல்லாஹ்வின் பெயரால் வெளியேறுகின்றேன். அவனையே நான் சார்ந்திருக்கின்றேன். தீமையை விட்டு விலகுவதும்,நன்மையைச் செய்ய ஆற்றல் பெறுவதும் அல்லாஹ்வைக் கொண்டே தவிர வேறில்லை) என்று கூறினால் அவனுக்கு "நீ போதுமாக்கப்பட்டு விட்டாய்பாதுகாப்பு வழங்கப்பட்டு விட்டாய்'' என்று (இறைவன் புறத்திலிருந்து) கூறப்படும். அவனை விட்டும் ஷைத்தான் விலகி விடுவான். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: திர்மிதி 3348

இரவு நேரங்களில் வீட்டைப் பாதுகாக்கும் இறை நினைவு
عَنْ جَابِرٍ قَالَ
قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَطْفِئُوا الْمَصَابِيحَ بِاللَّيْلِ إِذَا رَقَدْتُمْ وَغَلِّقُوا الْأَبْوَابَ وَأَوْكُوا الْأَسْقِيَةَ وَخَمِّرُوا الطَّعَامَ وَالشَّرَابَ


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் அல்லது அந்திப் பொழுதாகி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரியவிடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள் அப்போது தான் (பூமியெங்கும்) பரவுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டுவிடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைத் தாழிட்டு விடுங்கள். (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். ஏனெனில்,ஷைத்தான் மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை. உங்கள் தண்ணீர் பையி(ன் வாயி)னைச் சுருக்கிட்டு மூடிவிடுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். உங்களுடைய பாத்திரங்களை மூடி வையுங்கள். (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள். (அவற்றை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அவற்றின் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடிவிடுங்கள். உங்கள் விளக்குகளை அணைத்து விடுங்கள்.அறிவிப்பவர்:  ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) நூல்: புகாரி 5623
عَنْ سَالِمٍ عَنْ أَبِيهِ
عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَتْرُكُوا النَّارَ فِي بُيُوتِكُمْ حِينَ تَنَامُونَ


நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உறங்கச் செல்லும் போது உங்கள் வீட்டிலுள்ள நெருப்பை (அணைக்காமல்) விட்டுவிடாதீர்கள்.
அறிவிப்பவர்:  அப்துல்லாஹ் பின் உமர் (ரலி)  நூல்: புகாரி 6293

இன்று நம்முடைய வீடுகளில் நாம் தூங்கச் செல்லும் முன் கேஸ் அடுப்புகளை அணைத்துள்ளோமாதேவையில்லாமல் எரியும் அனைத்து விளக்குகளையும் அணைத்துள்ளோமா என்பதைக் கவனித்துக் கொள்ள வேண்டும். இது நபிவழியும்நமக்குப் பாதுகாப்பும் ஆகும்.


வீட்டில் இசைக்கருவிகள் மற்றும் இசைப்பாடல்கள்

இன்றைக்குப் பெரும்பாலான வீடுகளில் இசைக்கருவிகளில் இசைப்பாடல்கள் ஓங்கி ஒலிக்கின்றன. இதில் இஸ்லாமியப் பாடல்கள்,சினிமாப்பாடல்கள் என்ற வித்தியாசமில்லை. இசையுடன் கூடிய அனைத்துப் பாடல்களும் இசைப்பாடல்கள் தான். இவை மார்க்கத்தில் ஹராமாக்கப்பட்டவையாகும்.
இந்த இசைக்கருவிகள் நம்முடைய வீடுகளில் இருந்தால் இசைப்பாடல்கள் நம்முடைய வீடுகளில் ஒலித்துக் கொண்டிருந்தால் அங்கு இறைவனின் அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள்.
عَنْ أَبِي هُرَيْرَةَ
أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَصْحَبُ الْمَلَائِكَةُ رُفْقَةً فِيهَا كَلْبٌ وَلَا جَرَسٌ


அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் மணியோசையும் உள்ள பயணிகளுடன் (அருள்) வானவர்கள் வர மாட்டார்கள். அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 4294

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒலியெழுப்பும் மணி,ஷைத்தானின் இசைக் கருவியாகும். அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)
நூல்:முஸ்லிம் 4295

இசைக்கருவி பயணக்கூட்டத்தாரிடம் இருக்கின்ற காரணத்தினால் தான் மலக்குமார்கள் அவர்களுடன் வருதில்லை. அதே இசைக்கருவி நம்முடைய வீடுகளில் இருந்தாலும் அங்கு மலக்குமார்கள் வரமாட்டார்கள் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ளலாம்.


வீட்டில் உருவப்படங்கள் மற்றும் நாய்கள்

இன்றைக்குப் பெரும்பாலான முஸ்லிம் வீடுகளில் உருவப்படங்களை மாட்டி வைத்துள்ளனர். இறந்து விட்ட தாய்தந்தையர்கள் மற்றும் முன்னோர்களின் உருவப்படங்களை மாட்டி வைப்பதைப் பெருமையாக நினைக்கின்றனர். அல்லது பரக்கத்திற்காக ஏதேனும் பெரியாரின் படத்தை வைத்துள்ளனர். மேலும் வீட்டின் அழகிற்கென விலங்கினங்களின் படங்களையும் மாட்டி வைத்துள்ளனர்.

நம்முடைய வீடுகளில் இந்த உருவப்படங்கள் மற்றும் நாய்கள் இருப்பதன் மூலம் நம்முடைய வீட்டிற்கு இறைவனுடைய அருளைச் சுமந்து வரும் மலக்குமார்கள் வருகை தர மாட்டார்கள். மேலும் இதற்காக மறுமையில் மிகப் பெரும் தண்டனைகளும் உள்ளன.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நாயும் (உயிரினங்கüன் சிலைகள் அல்லது) உருவப் படங்களும் உள்ள வீட்டினுள் (இறைவனின் கருணையைக் கொண்டு வரும்) வானவர்கள் நுழைய மாட்டார்கள். அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி), நூல்: புகாரி 3225

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தபோதுஎனது வீட்டு வாசலில் நான் குஞ்சம் உள்ள திரைச் சீலையொன்றைத் தொங்க விட்டிருந்தேன். அதில் இறக்கைகள் கொண்ட குதிரைகளின் உருவங்கள் இருந்தன. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை (அகற்றுமாறு) உத்தரவிடஅவ்வாறே அதை நான் அகற்றிவிட்டேன். நூல்: முஸ்லிம் 4281

வீட்டில் உருவப்படங்களும் நாய்களும் இருப்பது எவ்வளவு பயங்கரமான பாவம் என்பதைப் பின்வரும் ஹதீஸ்களிலிருந்து நாம் விளங்கிக் கொள்ள முடியும்
عَنْ عَائِشَةَ
أَنَّهَا قَالَتْ وَاعَدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جِبْرِيلُ عَلَيْهِ السَّلَام فِي سَاعَةٍ يَأْتِيهِ فِيهَا فَجَاءَتْ تِلْكَ السَّاعَةُ وَلَمْ يَأْتِهِ وَفِي يَدِهِ عَصًا فَأَلْقَاهَا مِنْ يَدِهِ وَقَالَ مَا يُخْلِفُ اللَّهُ وَعْدَهُ وَلَا رُسُلُهُ ثُمَّ الْتَفَتَ فَإِذَا جِرْوُ كَلْبٍ تَحْتَ سَرِيرِهِ فَقَالَ يَا عَائِشَةُ مَتَى دَخَلَ هَذَا الْكَلْبُ هَاهُنَا فَقَالَتْ وَاللَّهِ مَا دَرَيْتُ فَأَمَرَ بِهِ فَأُخْرِجَ فَجَاءَ جِبْرِيلُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَاعَدْتَنِي فَجَلَسْتُ لَكَ فَلَمْ تَأْتِ فَقَالَ مَنَعَنِي الْكَلْبُ الَّذِي كَانَ فِي بَيْتِكَ إِنَّا لَا نَدْخُلُ بَيْتًا فِيهِ كَلْبٌ وَلَا صُورَةٌ

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு (குறிப்பிட்ட) நேரத்தில் வருவதாக வாக்களித்திருந்தார்கள். ஆனால்அந்த நேரம் வந்தும் ஜிப்ரீல் வரவில்லை.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் குச்சியொன்று இருந்தது. அதை அவர்கள் தூக்கியெறிந்துவிட்டு, "அல்லாஹ் தனது வாக்குறுதிக்கு மாறு செய்யமாட்டான். அவனுடைய தூதர்களும் வாக்குறுதிக்குமாறு செய்ய மாட்டார்கள்'' என்று கூறினார்கள். பின்னர் திரும்பிப் பார்த்தபோதுதமது கட்டிலுக்குக் கீழே நாய்க்குட்டியொன்று இருப்பதைக் கண்டார்கள்.

உடனே "ஆயிஷா! இந்த நாய் இங்கு எப்போது நுழைந்தது?'' என்று கேட்டார்கள். நான், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குத் தெரியவில்லை'' என்றேன். உடனே அதை அப்புறப்படுத்துமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அது அப்புறப்படுத்தப்பட்ட பின் ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் வருவதாகச் சொன்னீர்கள். உங்களுக்காக நான் (எதிர்பார்த்து) அமர்ந்திருந்தேன். ஆனால்நீங்கள் வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்டார்கள்.

அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், "உங்கள் வீட்டினுள்ளிருந்த நாயே என(து வருகை)க்குத் தடையாக அமைந்துவிட்டது. (வானவர்களாகிய) நாங்கள்,நாயும் உருவப் படமும் உள்ள வீட்டிற்குள் நுழையமாட்டோம்'' என்று சொன்னார்கள்.
நூல்: முஸ்லிம் 4272
عَائِشَةَ تَقُولُ
دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَدْ سَتَرْتُ سَهْوَةً لِي بِقِرَامٍ فِيهِ تَمَاثِيلُ فَلَمَّا رَآهُ هَتَكَهُ وَتَلَوَّنَ وَجْهُهُ وَقَالَ يَا عَائِشَةُ أَشَدُّ النَّاسِ عَذَابًا عِنْدَ اللَّهِ يَوْمَ الْقِيَامَةِ الَّذِينَ يُضَاهُونَ بِخَلْقِ اللَّهِ قَالَتْ عَائِشَةُ فَقَطَعْنَاهُ فَجَعَلْنَا مِنْهُ وِسَادَةً أَوْ وِسَادَتَيْنِ


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு பயணத்தை முடித்துக்கொண்டு) என்னிடம் வந்தார்கள். அப்போது நான் (வீட்டு வாசலை) உருவப் படம் உள்ள திரைச் சீலையால் மறைத்திருந்தேன். அதைக் கண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் நிறம் மாறிவிட்டது. அந்தத் திரைச் சீலையை எடுத்துக் கிழித்து விட்டார்கள்.

பிறகு "மறுமை நாளில் மக்களிலேயே மிகக் கடுமையான வேதனைக்குள்ளாவோரில்அல்லாஹ்வின் படைப்புகளுக்கு ஒப்பாகப் படைக்(க நினைக்)கின்றவர்களும் அடங்குவர்'' என்று சொன்னார்கள். நூல்:முஸ்லிம் 4282

வீட்டில் உருவப்படங்கள் பொறித்த திரைச்சீலைகளைத் தொங்க விடுவது எவ்வளவு பெரிய குற்றம் என்பதை மேற்கண்ட ஹதீஸ்களிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். அதே நேரத்தில் மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வகையில் அந்த உருவங்கள் வீட்டில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது.

நம்முடைய வீடுகளில் செய்தித்தாள்கள் கிடக்கின்றன. அவற்றில் உருவப்படங்கள் இருக்கத்தான் செய்யும். ஆனால் நாம் அதிலுள்ள செய்திகளைப் படித்தவுடன் அதிலுள்ள உருவப்படங்களை மாட்டி வைப்பதோ கண்ணியப்படுத்துவதோ கிடையாது. அந்த செய்தித்தாள்களை மதிப்பற்ற முறையில் தான் பயன்படுத்துகின்றோம். நாம் சாப்பிடும் போது அவற்றை விரிப்பாக பயன்படுத்துகின்றோம். பல்வேறு விஷயங்களுக்காக அந்த செய்தி பேப்பர்களை கிழித்து விடுகின்றோம். ஒரு செய்திப் பேப்பரை பத்திரப்படுத்தினால் கூட அந்தச் செய்திக்காகத் தானே தவிர அதிலுள்ள உருவப்படத்தை கண்ணியப்படுத்துவதற்காக அல்ல. இது போன்று மதிப்பில்லாத வகையில் பயன்படுத்தும் வண்ணம் உருவங்கள் நம்முடைய வீடுகளில் இருந்தால் அது மார்க்க அடிப்படையில் குற்றமாகாது. இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து விளங்கிக் கொள்ளலாம்.

عَنْ عَائِشَةَ قَالَتْ
قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ سَفَرٍ وَقَدْ اشْتَرَيْتُ نَمَطًا فِيهِ صُورَةٌ فَسَتَرْتُهُ عَلَى سَهْوَةِ بَيْتِي فَلَمَّا دَخَلَ كَرِهَ مَا صَنَعْتُ وَقَالَ أَتَسْتُرِينَ الْجُدُرَ يَا عَائِشَةُ فَطَرَحْتُهُ فَقَطَعْتُهُ مِرْفَقَتَيْنِ فَقَدْ رَأَيْتُهُ مُتَّكِئًا عَلَى إِحْدَاهُمَا وَفِيهَا صُورَةٌ


ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் பயணத்திலிருந்து திரும்பினார்கள். நான் உருவப்படமுள்ள ஒரு திரைச் சீலையை விலைக்கு வாங்கி எனது வீட்டிலுள்ள அலமாரி ஒன்றின் மீது திரையாக தொங்கவிட்டிருந்தேன். நபியவர்கள் (வீட்டிற்குள்) நுழைந்த போது நான் செய்திருந்ததை வெறுத்தார்கள். "ஆயிஷாவேசுவர்களை நீ மறைக்கின்றாயா?''  என்று கேட்டார்கள். உடனே நான் அதைக் கழற்றி விட்டேன். அதனைக் கிழித்து நபியவர்கள் கைவைத்து சாய்ந்திருப்பதற்குரிய இரண்டு தலையணைகளாக ஆக்கினேன். அதில் உருவங்கள் இருக்கும் நிலையிலேயே அந்த இரண்டு தலையணைகளில் ஒன்றிலே நபியவர்கள் சாய்ந்து இருந்ததை நான் பார்த்திருக்கின்றேன். நூல்: அஹ்மத் 24908

மேலும் குழந்தைகள் விளையாடுவதற்குரிய பொம்மை உருவங்களை வீடுகளில் வைத்திருப்பதும் மார்க்கத்தில் குற்றமாகாது. இதனைப் பின்வரும் ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ளலாம்.
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ
قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ غَزْوَةِ تَبُوكَ أَوْ خَيْبَرَ وَفِي سَهْوَتِهَا سِتْرٌ فَهَبَّتْ رِيحٌ فَكَشَفَتْ نَاحِيَةَ السِّتْرِ عَنْ بَنَاتٍ لِعَائِشَةَ لُعَبٍ فَقَالَ مَا هَذَا يَا عَائِشَةُ قَالَتْ بَنَاتِي وَرَأَى بَيْنَهُنَّ فَرَسًا لَهُ جَنَاحَانِ مِنْ رِقَاعٍ فَقَالَ مَا هَذَا الَّذِي أَرَى وَسْطَهُنَّ قَالَتْ فَرَسٌ قَالَ وَمَا هَذَا الَّذِي عَلَيْهِ قَالَتْ جَنَاحَانِ قَالَ فَرَسٌ لَهُ جَنَاحَانِ قَالَتْ أَمَا سَمِعْتَ أَنَّ لِسُلَيْمَانَ خَيْلًا لَهَا أَجْنِحَةٌ قَالَتْ فَضَحِكَ حَتَّى رَأَيْتُ نَوَاجِذَهُ


நபி (ஸல்) தபூக் அல்லது கைபர் யுத்தத்திலிருந்து (வீட்டிற்கு) முன்னோக்கினார்கள். (ஆயிஷா (ரலி)) அவர்களின் அலமாரியின் மீது ஒரு திரைச் சீலையிருந்தது. (அதில் ஆயிஷாவிற்குரிய பெண் குழந்தைகளின் உருவம் கொண்ட விளையாட்டுப் பொம்மைகள் இருந்தன.) அப்போது காற்றடித்து ஆயிஷாவின் விளையாட்டுப் பெண் குழந்தை பொம்மைகளை விட்டும் திரைச்சீலையின் ஒரு ஓரத்தை விலக்கியது. அப்போது நபியவர்கள், "ஆயிஷாவே இது என்ன?'' என்று கேட்டார்கள். என்னுடைய பெண் குழந்தைகள் என்று அவர் கூறினார். அவைகளுக்கு மத்தியில் இலை அல்லது தோலால் ஆன இரு இறக்கைகளைக் கொண்ட ஒரு குதிரையை நபியவர்கள் பார்த்தார்கள். உடனே நபியவர்கள், "அவைகளுக்கு மத்தியில் நான் காண்கின்றேனேஅது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கவர்குதிரை என்று கூறினார். "அதன் மீது என்ன?'' என்று நபியவர்கள் கேட்டார்கள். "இரண்டு இறக்கைகள்'' என்று ஆயிஷா (ரலி) பதில் கூறினார்கள். "குதிரைக்கு இரண்டு இறக்கைகளா?'' என்று நபியவர்கள் கேட்டார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "சுலைமான் நபிக்கு குதிரை இருந்ததாகவும் அதற்கு இறக்கைகள் இருந்ததாகவும் நீங்கள் கேள்விப்பட்டதில்லையா?''  என்று கேட்டார்கள். உடனே நபியவர்கள் தம்முடைய கடைவாய்ப் பற்கள் தெரியுமளவிற்குச் சிரித்தார்கள்.அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் 4284
.

மேற்கண்ட மார்க்க நெறிமுறைகளைத் தெரிந்து நம்முடைய இல்லங்களை முன்மாதிரி முஸ்லிம் இல்லங்களாக மாற்றி மறுமையில் சுவன வீட்டை அடைவோமாக.